சுபஸ்ரீ மரணம் அடைந்ததை அடுத்து ட்விட்டரில் ட்ரெண்டாகும் #WhoKilledShubashree

ட்விட்டரில் சுபஸ்ரீ மரணம் அடைந்ததை அடுத்து #WhoKilledShubashree என்ற ஹாஸ் டேக் ட்ரெண்டாகி வருகின்றது.

சுபஸ்ரீ என்ற 23 வயது பெண் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.நேற்று மாலை தனது பணியினை முடித்து கொண்டு  வந்திருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கரணை அருகே வந்துகொண்டிருந்தார்.அந்த சமயத்தில் ரெடியல் சாலை வழியே வந்தபோது  அதிமுக சார்பில் சாலையின்  நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்தது.இதனால் சுபஸ்ரீ நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது அந்த வழியாக சுபஸ்ரீ  பின்னால் வந்துகொண்டிருந்த தண்ணீர் லாரி அவர் மீது மோதியது.லாரியின் முன்பக்கம் விழுந்துகிடந்த அவர் சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்டார்.லாரியின் டயர் அவர் மீது ஏறியதால் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் அனைவரின் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் விதிகளை மீறிவைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வலியுறுத்தி வருகின்றனர்.

அதேவேளையில் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் நேட்டீசன்கள் பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.அந்த வகையில் சென்னை ட்ரெண்டிங்கில் #WhoKilledShubashree,#BannerkilledSubhasree,#BannerKillings என்ற ஹாஸ் டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றது. இந்த ஹாஸ் டேக்குகளில் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.