நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து சொன்ன புதுச்சேரி முதல்வர்

நடிகர் ரஜினிகாந்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்துக்கு ICON OF GOLDEN JUBILEE விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல்  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார்.இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் விருதை அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி என்று தெரிவித்தார்.மேலும் நடிகர் ரஜினிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவரது ட்விட்டர் பதிவில், தமிழ் சினிமாவின் பெருமை நடிகர் ரஜினிகாந்த்.விருதுபெறும் அவருக்கு … Read more

படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா -ரஜினிக்கு தெலங்கானா ஆளுநர் வாழ்த்து

படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா என்று நடிகர் ரஜினிகாந்திற்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்துக்கு ICON OF GOLDEN JUBILEE விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார். அபூர்வ ராகங்கள் தொடங்கி பேட்ட வரை சாதித்ததை வாழ்த்தி வாழ்நாள் சாதனையாளர் விருது. படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா என வாழ்த்துகிறேன் — Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) November 2, 2019 … Read more

வைகோவும் ரஜினியை போல ஆன்மீக அரசியலை பின்பற்ற தொடங்கிவிட்டார் – கராத்தே தியாகராஜன்

வைகோவும் ரஜினியை பின்பற்றி ஆன்மீக அரசியலை பின்பற்ற தொடங்கிவிட்டார் என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ,மதிமுகவினர் பெரும்பாலும் இந்துகள் என்று கூறினார் .மேலும் கோயில் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளேன் என்று  வைகோ கூறியிருந்தார்.இந்த நிலையில் கராத்தே தியாகராஜன் வைகோவும் ரஜினியை பின்பற்றி ஆன்மீக அரசியலை பின்பற்ற தொடங்கிவிட்டார் என்று கூறியுள்ளார். இது குறித்து கராத்தே தியாகராஜன் சென்னையில் கூறுகையில்,ரஜினி இந்துத்துவாவை பின்பற்ற சொல்லவில்லை, இந்து கோயில்களைத்தான் கும்பிட சொன்னார்.ரஜினி அரசியலுக்கு வருவது … Read more

ரஜினி, அஜித் ஆகியோர் அரசியல் கட்சி துவக்கினால் ஆதரவு -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ரஜினிகாந்த்  மற்றும் அஜித் ஆகியோர் அரசியல் கட்சி துவக்கினால் ஆதரவளிப்போம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் மரணம் என்பது வருத்தப்பட கூடிய நிகழ்வு, விதிகள் மீறி பேனர் வைப்பவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். இது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று தெரிவித்தார். மேலும் ரஜினிகாந்த்  மற்றும் அஜித் ஆகியோர் அரசியல் கட்சி துவக்கினால் … Read more

பாஜக மாநில தலைவர் பதவியெல்லாம் ரஜினிகாந்த் ஏற்றுக்கொள்ளமாட்டார்-திருநாவுக்கரசர்

பாஜக மாநில தலைவர் பதவியெல்லாம் ரஜினிகாந்த் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது ப.சிதம்பரம் குறித்த அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சு குறித்து கேள்விக்கு திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில்,திமுக அமைச்சர்களின் விமர்சனம் மத்திய பாஜக அரசை சந்தோஷப்படுத்ததான் .மேலும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. பாஜக மாநில தலைவர் பதவியெல்லாம் ரஜினிகாந்த் ஏற்றுக்கொள்ளமாட்டார்.பாஜக தேசிய தலைவர் பதவி கொடுத்தால் … Read more

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் மனைவியுடன் பங்கேற்ற சூப்பர்ஸ்டார் ரஜினி !

இந்தியாவின் 17- வது மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரமராக இன்று பதவியேற்கிறார்.இந்த விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்கள், மாநில தலைவர்கள் பலர் அழைக்கப்பட்டுள்ளனர். தற்போது டெல்லியில் நடைபெறவுள்ள மோடியில் பதவியேற்பு விழாவில் பல்வேறு தலைவர்கள், மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்கள் போன்ற பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.இப்போது மோடியின் அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற தகவலும் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது … Read more

இரண்டு சூப்பர் ஸ்டாரை வைத்து புதிய படத்தை உருவாக்கும் ஏ.ஆர் முருகதாஸ் மகிழ்ச்சியில் ரசிகர்கள்

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி புதிய படத்தில் நடிக்க வுள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் பெயர் அடிபட்டது.  ஆனால் தற்போது நடிகை நயன்தாராவை தேர்வு செய்துள்ளனர். ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான “பேட்ட” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பும், பாராட்டுகளையும் பெற்றது. தற்போது இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி புதிய படத்தில் நடிக்க வுள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் பெயர் அடிபட்டது.  ஆனால் தற்போது நடிகை நயன்தாராவை தேர்வு செய்துள்ளனர். … Read more

ரஜினியின் மகன்களாக மாறும் நடிகர்கள்…!!

பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி இருவரும் ரஜினியின் மகன்களாக நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி நடிப்பில் ‘காலா’ மற்றும் ‘2.0’ என இரண்டு படங்கள் ரிலீஸுக்குத் தயாராக இருக்கின்றன. இதில், பா.இரஞ்சித் இயக்கியுள்ள ‘காலா’ படம், அடுத்த மாதம் 7-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. நானா படேகர், சமுத்திரக்கனி, ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ், அருள்தாஸ், அஞ்சலி பாட்டீல், சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படங்களைத் தொடர்ந்து … Read more