பேஸ்புக்கின் புதிய அப்டேட்.! வருகிறதா Dark mode, COVID-19 tracker எப்போ ?

இந்த உலகில் கோடிக்கணக்கானோர் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பேஸ்புக் நிறுவனம், தற்பொழுது ஒரு புதிய அப்டேட்டை வெளியிட தயாராகி வருகிறது. அந்த புதிய அப்டேட் என்னவென்றால் பேஸ்புக்கில் dark mode வசதி மற்றும் COVID-19 tracker வசதி பேஸ்புக்கில் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே பேஸ்புக்கின் நிறுவனம் மெசஞ்சர் ஆஃப்பில்  dark mode வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தஅப்டேட் உங்களது ப்ரோபைல் கீழ் காணப்படும் செட்டிங்ஸ்ஸில் dark mode ஆப்ஷனை கிளிக் செய்தால் கருப்பாக மாறும். … Read more

பேஸ்புக் ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட MARk zuckerberg

பேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் இனி வீட்டில் இருந்தே பணிபுரியலாம் என அந்நிறுவனத்தின் C.E.O MARk zuckerberg அறிவித்துள்ளார். உலகளவில் பரவி வரும் கொரோனா வைரஸானது, தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி வருகிறது. இந்நிலையில், அனைத்து நாடுகளிலேயும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா அச்சறுத்தல் காரணமாக எல்லா நிறுவங்களிலும் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களது வீட்டில் இருந்தே  வேலை செய்து வருகிரார்கள். உலகின் மிகப் பெரிய … Read more

24 மணி நேரத்தில் 15 லட்சம் வீடியோ நீக்கிய பேஸ்புக்!!!

பேஸ்புக் மற்றும் அனைத்து சமூக வலைத்தளங்களிலும்  உடனடியாக நிறுத்த வேண்டும் என நியூசிலாந்து பிரதமர் ஜெசினா ஆர்டர்ன் உத்தரவிட்டார். தாக்குதல் நடந்த 24 மணி நேரத்தில் 15 லட்சம் வீடியோ நீக்கி உள்ளது. நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் தொழுகை நடைபெற்ற போது மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால்  தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 50 பேர் இறந்தனர் என தகவல் வெளியானது. இந்த தாக்குதலை நடத்திய  பிரெண்டன் டாரண்ட் ஆன்லைனில் விளையாட்டு விளையாடுவது … Read more

பேஸ்புக்கிற்கு சிக்கல்…ரூ 5,00,00,000 அபராதம்…!!

கடந்த 2007 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் பயனாளர்களின் தகவல்களை அவர்களின் உரிய மற்றும் வெளிப்படையான அனுமதியின்றி பயன்படுத்தியதாக, பேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக பேஸ்புக் நிறுவனத்தின் மீது இங்கிலாந்து தகவல் ஆணையத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பயனாளர்களின் தகவலை அவர்கள் அனுமதியின்றி பயன்படுத்திய விவகாரத்தில், பேஸ்புக் நிறுவனத்திற்கு இங்கிலாந்து தகவல் ஆணையம் ரூ.5 கோடி அபராதம் விதித்துள்ளது. DINASUVADU 

அதிர்ச்சி: "3,00,00,000 பேர் முகநூல் விவரம் திருட்டு" பீதியடைய செய்யும் விவரம்..!!

பேஸ்புக்கில் மிகப்பெரிய கசிவு. 3 கோடி பயனாளர்களின் பிறந்த தேதி, கல்வி வரலாறு, மத விருப்பத் தேர்வுகள் மற்றும் பிற விவரங்கள் திருடப்பட்டுள்ளன. அமெரிக்க தேர்தல் விவகாரத்தில் பேஸ்புக்கின் பங்களிப்பு இருந்துள்ளதாக வெளியான தகவலையடுத்து பேஸ்புக் நிறுவனம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, பேஸ்புக்கில் உள்ள 5 கோடி  வாக்காளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திருடியதாக பிரபல பிரிட்டன் தொலைக்காட்சி சேனல் நியூஸ் 4 செய்தி … Read more

இப்படியும் தண்டனையா..!! பேஸ்புக் பாஸ்வேர்டு கொடுக்க மறுத்தவருக்கு  14 மாதங்கள் சிறை!

பிரிட்டனில் காவல்துறை விசாரணைக்கு பேஸ்புக்கின் பாஸ்வர்ட் கொடுக்க மறுத்தவருக்கு 14 மாதங்கள் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்… பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் ஸ்டீபன் நிக்கல்சன். இவருடைய குடும்பத்துடன் நண்பராகி நெருக்கமாக பழகிய 13 வயது சிறுமி லூசி மக்ஹூக் என்பவர் கடந்த ஜூலை மாதம் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தி வந்தது.தொடர்ந்து நடத்திய விசாரணையில், லூசி கொலை செய்யப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு அவர் நிக்கல்சன் வீட்டில் இருந்தது தெரியவந்தது.இதையடுத்து … Read more

முக நூல் பதிவால் பெண் மருத்துவர் தற்கொலை முயற்சி!

திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். கடந்த 6ம் தேதி தனது மனைவி ஜோதியுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு வந்து தனது மனைவி 3வதாக கர்ப்பமாகியுள்ளதாகவும், கருக்கலைப்பு செய்யும்படி தெரிவித்துள்ளார். இதற்கு மறுத்த பெண் டாக்டரை செல்போனில் படம் பிடித்து அதை முகநூலில் ஆபாசமான கருத்துக்களுடன் விஜயகுமார் பதிவு செய்துள்ளார். இதையடுத்து விஜயகுமாரை திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைதுசெய்தனர். இதற்கிடையே முகநூலில் டாக்டர் போட்டோ வெளியானதை கண்டித்தும், மருத்துவர்கள் பணி பாதுகாப்பு சட்டம் 48ன் படி … Read more

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 (Apache RTR 200) ரேஸ் எடிசன் 2.0 அறிமுகம் .!

டிவிஎஸ்(TVS)  நிறுவனத்தின் அப்பாச்சி 200 (APACHE 200) பைக்கில், டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 ரேஸ் எடிசன் 2.0 மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன்  ரூ. 95,185 ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 35 ஆண்டுகால ரேசிங் பாரம்பரியத்தை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள ஆன்ட்டி- ரிவர்ஸ் டார்க் ஸ்லிப்பர் கிளட்ச் (A-RT (anti-reverse torque) slipper clutch) மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கிறது. இந்த ஆன்ட்டி- ரிவர்ஸ் டார்க் ஸ்லிப்பர் கிளட்ச் பெற்ற  முதல் பைக் மாடல் என்ற பெருமையும் … Read more

விட்டாரா பிரிஸ்ஸா எஸ்யூவி காரை சோதனை செய்து வரும் மாருதி சுஸுகி. !!!

மாருதி சுஸுகி நிறுவனம், புதிய சுஸுகி விட்டாரா காம்பேக்ட் எஸ்யூவி காரை சோதனை செய்து வரும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் மாருதி சுஸுகி-க்கு விற்பனை திறனை பெற்று தரும் மாடல்களில் ஒன்றாக உள்ளது விட்டாரா பிரிஸ்ஸா எஸ்யூவி கார். அதை தொடர்ந்து புதிய சுஸுகி விட்டரா எஸ்யூவி என்ற காரை மாருதி சுஸுகி தயாரித்து வருகிறது. இதுவும் எதிர்பார்க்கப்படும் மாடலாக உள்ளது. இந்நிலையில், அந்த காருக்கான சோதனை ஓட்டத்தை மாருதி சுஸுகி இந்திய சாலைகளில் தீவிரமாக … Read more

அண்ட்ராய்டு பி டெவலப்பர் : கூகுள்

கூகுள் மார்ச் மாத மத்தியில் அண்ட்ராய்டு பி டெவலப்பர் முன்னோட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. மார்ச் நடுப்பகுதியில் அண்ட்ராய்டு பி முதல் பீட்டா முன்னோட்டமாக, பிரபலமான லீக்கர் இவான் பிளஸ் (leaker evan blass)கூறுகிறது. அண்ட்ராய்டு பி ஆனது கூகிளின் ஆண்ட்ராய்ட் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த பதிப்பாகும். Android P இன் முதல் பீட்டா முன்னோட்டம், அண்ட்ராய்டு மொபைல் OS இன் அடுத்த பதிப்பு, அடுத்த மாதத்தைத் தொடங்கும். ட்விட்டர் மீது பிரபலமான லீக்கர் இவான் பிளஸ் அண்ட்ராய்டு … Read more