24 மணி நேரத்தில் 15 லட்சம் வீடியோ நீக்கிய பேஸ்புக்!!!

  • பேஸ்புக் மற்றும் அனைத்து சமூக வலைத்தளங்களிலும்  உடனடியாக நிறுத்த வேண்டும் என நியூசிலாந்து பிரதமர் ஜெசினா ஆர்டர்ன் உத்தரவிட்டார்.
  • தாக்குதல் நடந்த 24 மணி நேரத்தில் 15 லட்சம் வீடியோ நீக்கி உள்ளது.

நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் தொழுகை நடைபெற்ற போது மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால்  தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 50 பேர் இறந்தனர் என தகவல் வெளியானது.

இந்த தாக்குதலை நடத்திய  பிரெண்டன் டாரண்ட் ஆன்லைனில் விளையாட்டு விளையாடுவது போல துப்பாக்கியால் மக்களை கொன்ற வீடியோவை நேரலையாக வெளியிட்டிருந்தான். இதனைக் கண்ட உலகின் பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இதனைத் தொடர்ந்து  பேஸ்புக் மற்றும் அனைத்து சமூக வலைத்தளங்களிலும்  உடனடியாக நிறுத்த வேண்டும் என நியூசிலாந்து பிரதமர் ஜெசினா ஆர்டர்ன் உத்தரவிட்டார்.

இதுகுறித்து பேஸ்புக் நிறுவனத்தின் நியூசிலாந்து செய்தி தொடர்பாளர் மியா கார்லிக் கூறுகையில் இந்த வீடியோ இணைதளத்தில் பகிர்வதை தடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இதற்கென தனி ஒரு குழு சிறந்த தொழில்நுட்பத்துடன் முழுவதும் அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தாக்குதல் நடந்த 24 மணி நேரத்தில் 15 லட்சம் வீடியோ நீக்கி உள்ளது.

மேலும் பேஸ்புக் ஊழியர்கள் தொடர்ந்து செயலாற்றி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

author avatar
murugan

Leave a Comment