இது அது இல்லை… பாஜக எம்எல்ஏவை விசாரிக்க மறுக்கும் அமலாக்கத்துறை.!

Nainar Nagendran

Election2024 : நயினார் நாகேந்திரன் தொடர்புடைய 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க நீதிமன்றத்தில் மறுத்துள்ளது அமலாக்கத்துறை. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட மக்களவை தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் வாக்குப்பதிவு சமயம் வரையில் தேர்தல் பறக்குப்படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை பாஜக வேட்பாளரும், பாஜக எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் தொடர்புடைய … Read more

தேர்தல் விதிமுறைகளை மீறுகிறாரா பிரதமர் மோடி.? மதத்தை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம்.!

PM Modi speech in Rajasthan

PM Modi : காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களின் சொத்துக்களை இஸ்லாமியர்களுக்கு பிரித்து கொடுத்து விடுவார்கள் என பிரதமர் மோடி பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. நாட்டில் உள்ள 543 தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் , புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் இந்த தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 19இல் ராஜஸ்தான்  மாநிலத்தில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து, வரும் … Read more

தமிழ்நாட்டில் செங்கல்.. கர்நாடகாவில் சொம்பு.! பிரச்சார களேபரங்கள்…

Karnataka Congress Protest in Bengalore

Congress Protest : பிரதமர் மோடி பெங்களூரு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக காங்கிரஸார் சொம்பு வைத்து போராட்டம் செய்து வருகின்றனர். கடந்த 2019 தேர்தலிலும், 2024 தேர்தலிலும் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களவை தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது, மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் மதுரை எய்ம்ஸ் கட்டாமல் இருப்பதை குறிப்பிட்டு மதுரை எய்ம்ஸ் என ஒரு செங்கல் தான் பாஜக அரசு நட்டு வைத்துள்ளது என மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் … Read more

அதிரவைத்த பாஜக.! விளம்பர செலவு மட்டும் 3,641 கோடி ரூபாய்.!

BJP Advertisment Cost

BJP : கடந்த 10 ஆண்டுகளில் பாஜக கட்சியானது தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதள விளம்பரங்களுக்கு 3,641 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. ஆளும் பாஜக அரசு பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் நிறைவடைவதை ஒட்டி, நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நேற்று தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அடுத்தகட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜூன் 1ஆம் தேதி வரையில் தேர்தல் நடைபெற்று ஜூன் 4இல் மத்தியில் யார் ஆட்சி செய்யப்போகிறார்கள் … Read more

சென்னையில் கள்ள ஒட்டு.? மீண்டும் வாக்குப்பதிவு நடத்தணும்.! தமிழிசை புகார்.!

Tamilisai Soundarajan - North Chennai Vote Polling

Election2024 : தென்சென்னையில் 13வது வாக்குசாவடியில் கள்ள ஓட்டு போட்டுள்ளனர் அதனால் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த தமிழிசை கோரிக்கை வைத்துள்ளார். நாடாளுமன்ற முதற்கட்ட வாக்குபதிவில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதுவரை வெளியான வாக்குசதவீத தகவல்கள் அடிப்படையில், அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48% வாக்குகளும், குறைந்தபட்சமாக தென் சென்னையில் 54.27% வாக்குகளும் பதிவாகியது என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தென்சென்னை தேர்தல் நடத்தும் … Read more

இந்தியாவுக்காக வாக்களியுங்கள்.! குஷ்பூவின் பதிவால் குழம்பிய பாஜகவினர்.!

Kushbhu tweet about Vote4INDIA

Election2024 : பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ #Vote4INDIA என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் இன்று (ஏப்ரல் 19) காலை 7 மணிக்கு தொடங்கி தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. இன்னும் 1 மணிநேரத்திற்கும் குறைவான நேரத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற உள்ளதால், இதுவரையில் வாக்களிக்காதோர் வாக்குசாவடியை நோக்கி விரைந்துள்ளனர். பல்வேறு அரசியல், சினிமா பிரபலங்கள் வாக்களித்து அதனை சமூக … Read more

எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஒட்டு.? சென்னை வாக்குசாவடியில் சலசலப்பு.!

Tamilnadu Election Polling

Election2024 : வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு விழுவதாக சென்னை வியாசர்பாடியில் குற்றசாட்டு எழுந்துள்ளது. சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக எழுந்த புகாரையடுத்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா தமிழகத்தில் மொத்த முதல் 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரி தொகுதி என 40 தொகுதிகள் உட்பட மொத்தம் நாடு முழுவதும் 102 தொகுதிகளில் முதற்கட்ட … Read more

தொகுதி மக்களிடம் தற்போதே குறைகளை கேட்டறிந்த பாஜக வேட்பாளர் தமிழிசை..!

Tamilisai Soundarajan

Election2024 : வாக்களிக்க தாமதமாவதாக தென் சென்னை வாக்காளர்கள் பாஜக வேட்பாளர் தமிழிசையையிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மக்களவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழக மற்றும் புதுச்சேரியில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை செலுத்து வருகின்றனர். தமிழகத்தில் மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர் தென் சென்னையில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார். அப்போது அங்குள்ள வாக்காளர்கள்களிடம் குறைகளை … Read more

தொடங்கியது மக்களவை தேர்தல் திருவிழா.. 102 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு.! 

Lok sabha Election 2024

Election2024 : 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் இன்று (ஏப்ரல் 19) முதல் தொடங்கி, 7 கட்டங்களாக வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. முதற்கட்ட தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட மொத்தம் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி … Read more

காசர்கோடு விவகாரம்! இது உண்மைக்கு புறம்பானது.. இந்திய தலைமை தேர்தல் ஆணையம்!

election commission

Election2024: மின்னணு வாக்கு இயந்திரத்தில் பாஜகவுக்கு கூடுதல் வாக்கு விழுவதாக எழுந்த புகாருக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு. கேரளா மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதியில் வரும் 22ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் காசர்கோடு மக்களவை தொகுதியில் நேற்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது நான்கு மின்னணு இயந்திரத்தில் தவறு இருப்பதாகவும், அந்த இயந்திரங்களில் உள்ள தாமரை சின்னம் பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஒட்டு விழுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றசாட்டினர். … Read more