#ELECTIONBREAKING: நேற்று மநீம.., இன்று அமமுக உடன் SDPI பேச்சுவார்த்தை..!

SDPI கட்சி நிர்வாகிகள், டிடிவி தினகரனுடன் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஏற்கனவே ஒவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக  SDPI கட்சி நிர்வாகிகள், எஸ்.டி.பி.ஐ. தேசிய துணைத்தலைவர் தெஹ்லான் பாக்வி டிடிவி தினகரனுடன் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சந்திப்பு எதற்க்காக நடைபெறுகிறது என்ற தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. நேற்று  மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி 18 தொகுதிகள் … Read more

#ElectionBreaking: சாத்தூர் அதிமுக எம்எல்ஏ, டிடிவி தினகரனுடன் சந்திப்பு.!

அதிமுகவின் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், டிடிவி தினகரனை அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் சந்திக்கிறார். சட்டப்பேரவை தேர்தலுக்கு நாளை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ள நிலையில், நேற்று அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடம் 171 பேர் கொண்ட அதிமுக வேட்பாளர்களின் 2ம் கட்ட பட்டியலை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டனர். இதில், அதிமுகவில் உள்ள 30 அமைச்சர்களில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், தொழிலாளர் … Read more

கூட்டணி உறுதி..? தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவது உண்மை.., தினகரன் அறிவிப்பு ..!

தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது உண்மை தான் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக உடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், தாங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்காத நிலையில், கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, அன்றைய தினமே தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது அவர்கள் தனித்து போட்டிட தயாராக உள்ளோம். ஆனால் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதற்கு முன்பாக அவர்களிடம் கருத்து கேட்கவேண்டும் … Read more

தனித்து போட்டியா? கூட்டணியா? – மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தேமுதிக – அமமுக.!

தேமுதிக, அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் மீண்டும் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக – தேமுதிக கட்சிகள் இடையே பல கட்டங்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் தொடர்ந்து லுபாரி நீடித்து வந்தது. கூட்டணியில் தேமுதிக நீடிக்குமா? என்ற சந்தேகம் எழுந்து வந்த நிலையில், நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தலைவர் விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதன்பின், நாங்கள் கேட்ட தொகுதிகள், எண்ணிக்கைகள் அதிமுக தராததால் கூட்டணியில் விலகுவதாக தேமுதிக … Read more

#ELECTIONBREAKING : ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்- தினகரன்..!

அமமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என டிடிவி தினகரன் தெரிவித்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது,  இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியல் வரும். ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அமமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும். கூட்டணி பேச்சுவார்த்தை இறுதியான பிறகு அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார். வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் … Read more

#ELECTIONBREAKING : அமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு…!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான 15 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் பிரச்சாரம் என மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த  வகையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான 15 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட் பட்டியலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக முதற்கட்ட வேட்பாளர்கள் … Read more

#ElectionBreaking: முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை., அமமுக – தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை.!

சட்டப்பேரவை தேர்தலுக்கான தேமுதிகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார். தனித்து போட்டியிடுவதா? அல்லது கூட்டணி அமைப்பதா? என மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவு எட்டப்படும் என அக்கட்சி துணை செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்திருந்தார். ஆகையால், இன்று மாலை மீண்டும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என கூறப்பட்டது. இதனிடையே, அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக மக்கள் நீதி … Read more

வரும் 12ம் தேதி அமமுக பொதுக்கூட்டம்., அன்றே தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார் டிடிவி தினகரன்.!

வரும் 12ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தேர்தல் அறிக்கையை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிடுவார் என அறிக்கை. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக கட்சி அலுவலகத்தில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில், விருப்ப மனு அளித்தவர்களிடம் இரண்டாவது நாளான இன்று நேர்காணல் நடைபெற்று வருகிறது. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறேன் என்றும் இன்னும் இரண்டு தினங்களில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமமுக சார்பில் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் … Read more

அதுவே ஒழுங்கா கொடுக்க முடியல, இதுல ஒருத்தர் ரூ.1000, இன்னொருத்தர் ரூ.1,500 – டிடிவி தினகரன் விமர்சனம்

உண்மையான தர்மயுத்ததை நாங்கள் தொடங்கியிருக்கிறோம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று முதல்வர், துணை முதல்வர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது முதல்வர் பழனிச்சாமி, மகளிர் தினத்தை முன்னிட்டு குடும்ப தலைவிக்கு மாதம் தோறும் ரூ.1,500 வழங்கப்படும் என்றும் குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இலவச சிலிண்டர் எப்படி கொடுக்க முடியும் … Read more

2 தொகுதிகளில் போட்டி.. ஆர்.கே நகர் போட்டியா..? – தினகரன் விளக்கம்..!

தற்போது வரை 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அப்போது செய்தியாளர் நீங்கள் எத்தனை தொகுதிகளில் போட்டியிட உள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்க்கு தினகரன், 2 நாள்களில் அறிவிக்க உள்ளேன். அப்போது தெரியப்போகிறது என கூறினார். 1 அல்லது 2 தொகுதிகளில் போட்டி என கேள்வி எழுப்பியதற்கு, தற்போது வரை 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளேன் என … Read more