#ElectionBreaking: சாத்தூர் அதிமுக எம்எல்ஏ, டிடிவி தினகரனுடன் சந்திப்பு.!

அதிமுகவின் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், டிடிவி தினகரனை அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் சந்திக்கிறார்.

சட்டப்பேரவை தேர்தலுக்கு நாளை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ள நிலையில், நேற்று அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடம் 171 பேர் கொண்ட அதிமுக வேட்பாளர்களின் 2ம் கட்ட பட்டியலை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டனர்.

இதில், அதிமுகவில் உள்ள 30 அமைச்சர்களில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபீல் ஆகிய 3 அமைச்சர்களை தவிர மீதமுள்ள 27 அமைச்சர்களுக்கும், 45 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தற்போது பதிவில் இருக்கும் அதிமுகவில் சில எம்எல்ஏகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், சாத்தூர் தொகுதி அதிமுக எம்எஸ்ஆர் ராஜவர்மன் எம்எல்ஏ, அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து உள்ளார். அதிமுகவின் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், தினகரனுடன் இந்த நிகழ்துள்ளதாக கூறப்படுகிறது.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்திக்க சென்னை ராயப்பேட்டையில் அமமுக அலுவலகத்தில் அதிமுக எம்எஸ்ஆர் ராஜவர்மன் எம்எல்ஏ அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவரது வாகனம் கட்சி அலுவலக முன்பு நிறுத்தப்பட்டுள்ளது என்றும் தகவல் கூறப்படுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்