ஹேக்கர்களால் முடக்கப்பட்ட இணையதளங்கள் முடக்கப்படுவதை சீரமைக்க நடவடிக்கை …!

பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஹேக்கர்களால் முடக்கப்பட்ட மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் இணையதளத்தை சீரமைக்கும் பணி நடைபெறுவதாக  தெரிவித்துள்ளார். பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் இணைதளத்திற்குள் ஊடுருவிய ஹேக்கர்கள், சீன எழுத்துகளை அதில் பதிவிட்டு முடக்கினர். எனவே அதனை சீரமைக்கும் பணி நடைபெறுவதாகவும், எதிர்காலத்தில் இது போன்று சைபர் தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதனிடையே மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளமும் முடக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பாதுகாப்புக்காக அமைச்சகமே செயல்பாட்டை … Read more

சசிகலா தரப்பு ஆறுமுகசாமி ஆணையக் குறுக்கு விசாரணை என்ற பெயரில் விசாரணையைக் குழப்புகிறது…!

ஆறுமுகசாமி ஆணையத்தில் நடைபெற்ற குறுக்கு விசாரணையின் போது, ஜெயலலிதாவின் மருத்துவர் சங்கர் பொய்யான தகவல்களைக் கூறியதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார். விசாரணையின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாம் குழப்புவதாக மருத்துவர் சங்கர் தெரிவித்த குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

இந்தியாவில் ரயில்கள், ரயில் நிலையங்களில் விற்கும் உணவுப்பொருட்களுக்கு 5 சதவீத வரி…!

5விழுக்காடு சரக்கு சேவை வரி  ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் விற்கப்படும் உணவுப் பொருட்கள், பானங்கள் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ளது. ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் பல்வேறு உணவுப் பொருட்களும் பானங்களும் விற்கப்படுகின்றன. இவற்றுக்கான வரி விகிதம் குறித்துப் பல்வேறு ஐயங்கள் நிலவி வந்தன. இந்த ஐயங்களைத் தீர்க்குமாறு நிதியமைச்சகத்திடம் ரயில்வே துறை விளக்கம் கேட்டிருந்தது. இதற்குப் பதிலளித்துள்ள நிதியமைச்சகம், ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் நடைமேடைகளிலும் விற்கப்படும் அனைத்து உணவுப் பொருட்கள், பானங்களுக்கும் சமச்சீராக 5விழுக்காடு சரக்கு சேவை வரி விதிக்கப்பட்டுள்ளதாகத் … Read more

அதிர்ச்சி செய்தி …! பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு சொந்தமான இணையதளம் ஹேக்கர்களால் முடக்கம்; இணையதளத்தின் முகப்பு பகுதியில் சீன எழுத்துக்கள்…!

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக் செய்யப்பட்டதாக தகவல்.அதில்  “இணையத்தில் எதிர்பாராத பிழை ஏற்பட்டது. தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும் “வெள்ளிக்கிழமை வீட்டுப் பக்கத்தில் வீட்டிற்கு செய்தி அனுப்பப்படுகிறது. இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளங்களை இலக்காகக் கொண்ட ஹேக்கர்கள் இது முதல் முறையாக இல்லை. சைபர் தாக்குதலுக்குப் பிறகு கடந்த ஆண்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சு தற்காலிகமாக தடுத்துவைத்தது. MHA வலைத்தளம் ஆஃப்லைனில் எடுக்கப்பட்டதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக, பாக்கிஸ்தான்-இணைந்த கூட்டு அதிகாரிகள் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு காவலர் … Read more

சமூக வலைதளங்களை பேருந்தை மறித்து தெறிக்க விட்ட பெண் ஸ்டாலின் சந்திப்பு …!

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக செயல்தலைவர் ஸ்டாலினுடன் தெய்வநாயகி சந்தித்தனர். காவிரி வாரியம் அமைக்கக்கோரி நேற்று வேலூரில் நடைபெற்ற போராட்டத்தில் தனி ஒருவராக பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்மணி தெய்வநாயகி சந்தித்தனர். சென்னையில் நேற்று நடந்த திமுக போராட்டத்தின் போது தனியொரு பெண் பஸ்சை மறித்து போராட்டம் நடத்திய படம்தான் தற்போது செம வைரலாகி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக திமுக தீவிர போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இதில் நேற்று திமுக சார்பில் … Read more

சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் இடுப்பு கிள்ளி திமுக…!அதென்ன இடுப்பு கிள்ளி திமுக?

நேற்று  திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக பெண் தொண்டர் ஒருவரின் இடுப்பு கிள்ளப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடித்தது. குறிப்பாக சென்னையில் சாலை மற்றும் ரயில் மறியல் போரட்டங்கள் நடைபெற்றது. அந்நிலையில்,கரூர் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஜெயமணி என்பவர் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்தார். சென்னையில் நடந்த மறியல் போரட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது பிரபாகரன் … Read more

வயதானவர் விக்ரம் அவர்கூட நடிக்க முடியாது …!சுருதி ஓபன் டாக் …!

கமல் நடித்த படங்கள் தவிர்த்து பிற ஹீரோக்கள் நடித்த படங்களையும் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் பட நிறுவனம் அவ்வப்போது தயாரித்துள்ளது. சத்யராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மாதவன் நடித்த நளதமயந்தி, நாசர் நடித்த மகளிர் மட்டும் ஆகிய படங்களைத்தொடர்ந்து விக்ரம் நடிக்கும் படம் ஒன்றையும் தயாரிக்க உள்ளது. கமல்ஹாசனிடம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் உதவியாளராகப் பணியாற்றிய ராஜேஷ் எம் செல்வா, இந்தப் படத்தை இயக்க உள்ளார். ‘தூங்காவனம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் இயக்கும் இரண்டாவது … Read more

கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கேட்டால் துணை வேந்தர் வந்திருக்கிறார்…!கமல்ஹாசன் காட்டம் …!

கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கேட்டால் துணை வேந்தர் வந்திருக்கிறார் என  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில்  சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்த சூரப்பா என்பவரை  நியமித்திருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆளுநரின் செயல் தமிழகத்தின் தன்மானத்தின் மீது தாக்குதல் நடத்தும் வகையில் இருப்பதாக முகநூல் பதிவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். காவிரிப் பிரச்சினை கொழுந்து விட்டு எரிகின்ற … Read more

திருச்சியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து காவிரி ஆற்றின் மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம்…!

அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்துத் திருச்சி காவிரி ஆற்றில் விவசாயிகள் தங்கள் உடலை மணலில் புதைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று  தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு நடைபெறுகிறது. இதனால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. காவிரி உரிமைகளைப் பெறுவதில் அரசியல் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி ஸ்டாலின் அழைப்பை ஏற்று திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு பாமக, கொமதேக, லதிமுக, … Read more

அண்ணா பல்கலைக்கழகம் காவி மயமாக்கப்படவில்லை கல்வி மயமாக்கப்பட்டுள்ளது…!

அண்ணா பல்கலைக்கழகம் கல்வி மயமாக்கப்பட்டுள்ளதாகவும், காவி மயமாக்கப்படவில்லை என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதற்கு முன் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் பாஜக அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இன்றைய செய்தியாளர் சந்திப்பில், தமிழகத்தை கருப்பு, வெள்ளை, சிவப்புதான் ஆட்சி செய்யும்; காவிக்கு இங்கே இடமில்லை என தெரிவித்துள்ள அவர், காவிரி விவகாரத்தில் மும்முனை தாக்குதலில் ஈடுபட்டு வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் கல்வி மயமாக்கப்பட்டுள்ளதாகவும், காவி மயமாக்கப்படவில்லை என்றும் தமிழக பா.ஜ.க. … Read more