ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் பிரதமர் மோடி வாக்குறுதி !

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து என்பது வரலாற்று வாய்ந்த சிறப்பு முடிவு என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். கடந்த 5  ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் 370 ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும் லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது.  இது தொடர்பாக தற்போது நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். ஜம்முகாஷ்மீர் மற்றும் லடாக் இரண்டாக பிரித்து இருப்பது மூலம் இனி வளர்ச்சி … Read more

தொடரும் கனமழை – கோவை, நீலகிரி மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழையின் காரணமாக நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  கோவை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக சில்லூர் அணை , திருவாணி அணை மற்றும் வால்பாறை அணை ஆகியவைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை தீவிரமாகி வருகிறது. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள் கடும் சிரமம் அடைகின்றனர். தொடர்ந்து நாளையும் மழை … Read more

“நெக்ஸ்ட்” தேர்வு வேண்டாம் – மருத்துவ கல்லூரி மாணவர்கள் மனிதசங்கிலி போராட்டம்!

தேசிய மருத்துவக் கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலியில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற்றது. மத்திய அரசின் புதிய தேசிய மருத்துவக் கல்வி கொள்கை கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. எம்பிபிஎஸ் முடித்தவர்கள் இறுதி ஆண்டில் நெக்ஸ்ட் எனும் மருத்துவ நுழைவுத் தேர்வினை எழுத வேண்டும் , இந்திய மருத்துவ கவுன்சில் இனி தேசிய மருத்துவ கவுன்சிலாக மாற்றப்படும் ஆகிய விதிமுறைகள் இந்த புதிய மருத்துவ கல்வி கொள்கையில் உள்ளது. … Read more

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு “பாரதரத்னா விருது” – ராம்நாத் கோவிந்த் வழங்கினார்!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உட்பட 3 பேருக்கு 2019 ம் ஆண்டிற்கான பாரதரத்னா விருதினை இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். நாட்டிற்க்கு பெரும் புகழ் கிடைக்க செய்தல், நாட்டிற்காக இழப்புகள் பல சந்தித்தல், வீர தீர செயல் புரிதல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு சார்பில் பாரதரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்க்கான விருது கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, முன்னாள் … Read more

இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரை ஆற்றுகிறார் பிரதமர் மோடி!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக இன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்திய நாட்டு மக்களிடம் உரை ஆற்றப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது . கடந்த 5  தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் 360 ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இது குறித்து, மக்களவையில் நீண்ட நேரம் பேசி இருந்தார். அமித்ஷாவை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டு மக்களிடம் உரை ஆற்றுவார் என்று … Read more

காங்கிரஸ் கட்சி தயவில் நான் எம்.பி யாக தேர்வாகவில்லை – வைகோ காட்டமாக பதில்!

காங்கிரஸ் கட்சி தயவில் என்றைக்கும் எம்.பி யாக தேர்வு செய்யப்படவில்லை என்று மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்கள் காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரிக்கு காட்டமாக பதில் அளித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய வைகோ காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி முதல் துரோகம் செய்ததாவும் தற்போது பாஜக இரண்டாவதாக மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக கூறினார். வைகோ அவர்கள் பேசிய பேச்சிற்கு காங்கிரஸ் தமிழ் மாநில தலைவர் கே.எஸ். … Read more

இரு சக்கர வாகனம் ஓட்டும் நண்பர்களே உஷாராக இருங்கள் – அபராத கட்டணம் உயர்கிறது!

மத்திய அரசு புதிதாக நிறைவேற்றியுள்ள மோட்டார் வாகன ஆய்வு சட்டத்தின் படி வாகனங்களுக்கான அபராத கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. இதுவரை வாகன உரிமம் இருந்து ஹெல்மெட் அணியாமல் சென்றால் காவல்துறை சோதனை செய்யும் போது சிக்கி 100 ரூபாய் வசூலிப்பது வழக்கம். ஆனால், இனிமேல் புதிய சட்டத்தின் படி அபராத கட்டணம் 100 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக வசூலிக்கப்படும் என்று போக்குவரத்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து போக்குவரத்து காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருகின்றனர். … Read more

இந்தியாவுடன் இனி வர்த்தக உறவு இல்லை – பாகிஸ்தான் அரசு முடிவு!

இந்தியாவுடன் இனி எந்தவித வர்த்தக உறவும் இல்லை என்று பாகிஸ்தான் அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம்(AFP News Agency) தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 2 நாட்காக கடும் முரண்பாடு இருந்தது.  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், ஏ.எப்.பி செய்தி நிறுவனம்(AFP News Agency) வெளியிட்ட செய்தியில், பாகிஸ்தான் அரசு … Read more

தமிழகத்திற்கே தந்தையாக விளங்கியவர் கலைஞர் கருணாநிதி – மம்தா புகழாரம் !

தமிழகத்தின் தந்தையாக விளங்கியவர் கலைஞர் கருணாநிதி என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார். கலைஞர் கருணாநிதி அவர்களின் முதலாமாண்டு நினைவு தின பொதுக்கூட்டம் சென்னை ஒய்.எம்.சி மைதானத்தில் நடந்தது. இந்த நிகழ்வில் கலைஞர் நினைவை போற்றும் வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி , புதுவை முதல்வர் நாராயணசாமி உட்பட பல்வேறு  அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இதில் பேசிய மம்தா, கருணாநிதி எப்போதும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பியவர் … Read more

சட்டவிரோத பேனர் வைக்க கூடாது என்று தொடர்களுக்கு கூறுங்கள் – நீதிபதி அறிவுறுத்தல்!

சட்டவிரோதமாக பேனர் வைக்க கூடாது என்று தம் தொண்டர்களுக்கு அரசியல் கட்சிகள் கூற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறித்தியுள்ளார். சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி அவர்கள் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டு இருந்தும் சட்ட விரோதமா பேனர் வைக்கப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று வரும் போது பேசிய நீதிபதிகள் அரசியல் கட்சி தலைவர்கள் தம் தொண்டர்களுக்கு பேனர் வைக்க கூடாது என்ற முறையை கூறி … Read more