ஜம்மு காஷ்மீர் விவகாரம் – தேசிய மாநாட்டு கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370 ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.   அந்த வழக்கில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் இந்திய அரசியலமைப்பு சத்திற்கு எதிரானது என்று தெரிவித்துள்ளனர். அரசியலமைப்பு சட்ட பிரிவு 370 (1) ன் படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான அரசியலமைப்பு சட்டத்தை நிறைவேற்ற முடியாது என்றும் கூறியுள்ளனர். மேலும், குடியரசு தலைவரின் ஆணையானது … Read more

இந்தியாவில் முதன் முறையாக நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில்!

இந்தியாவில் முதல்முதலாக நீருக்கடியில் மெட்ரோ ரயில் செல்லும் வகையில் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கம் மாநிலம் ஹூக்ளி நதியின் கீழ் கட்டப்பட்டிருக்கும் இந்த பாதையில் நீர்க்கசிவு ஏற்படாமல் இருக்க தற்போது  3 அடுக்கு வடிவில் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. இந்த பாதையானது 50 அடி அகலமும் 520 மீட்டர் தூரமும் கொண்டதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் மட்டுமே இருக்கும் இந்த வசதி இந்தியாவிலும் அறிமுகப்படுத்துகிறது. விரைவில் இந்த பாதையில் ரயில்கள் செல்லும் என்று … Read more

ரோம் நகர புகழ்பெற்ற “ஸ்பானிஷ்” படிகளில் அமர்ந்தால் ரூ.31 ஆயிரம் அபராதம்!

இத்தாலி நாட்டில் ரோம் நகரில் இருக்கும் புகழ்பெற்ற சின்னமாக விளங்கும்  “ஸ்பானிஷ்” படிகளில் அமர்ந்தால் ரூ.31 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படவுள்ளது. பாரம்பரிய சின்னங்கள் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த கட்டிடங்களை கொண்டது ரோம் நகரம். நாள்தோறும் பல்வேறு சுற்றுலா பயணிகள் அங்கு வருவது வழக்கம். இதனால், அங்கு இருக்கும் பழமை வாய்ந்த சின்னங்களை பாதுகாக்க ரோம் நகர அரசு புதிதாக ஒரு முறையை கொண்டு வந்துள்ளது. அதன்படி, 1725 ம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்பானிஷ் படிகளில் யாரேனும் … Read more

+2 முடித்தவர்களுக்கு கப்பற்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

+2 முடித்தவர்க்ளுக்கு மத்திய அரசின் கப்பற்படை மற்றும் விமானப்படை பணிகளுக்கான வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12 ம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடப்பிரிவுகளில் படித்து  தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 3 ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் விண்ணப்பிக்க https : //upsconline.nic.in என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களை https : //upsc.gov.in /sites/default /files / notice – NDA – … Read more

ஜம்முவில் 144 தடை உத்தரவு தளர்வு – நாளை முதல் பள்ளி கல்லூரிகள் திறப்பு !

ஜம்மு பிராந்தியத்தில் கடந்த 1 வாரமாக அமலில் இருந்த 144 தடை உத்தரவு ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து நாளை முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் 370 ஐ ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு விடுத்து இருந்தது. உடனடியாக, மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இந்நிலையில், ஜம்மு … Read more

வேலூரில் வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தை முந்தியது நோட்டா !

வேலூர் நாளுமன்ற தேர்தல் முடிவில் நோட்டா பெற்றிருக்கும் வாக்கானது வெற்றி பெற்ற வாக்காளர்களின் வாக்கு வித்தியாசத்தை விட அதிகமாக உள்ளது. கடந்த 5 ம் தேதி நடந்த வேலூர் தொகுதியின் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட்ட புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ,சி,சண்முகம் 4,77,193 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். திமுக மற்றும் அதிமுக பெற்ற வாக்குகளின் … Read more

அதிமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி ! ஓபிஎஸ் – இபிஎஸ் அறிக்கை !

வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த வேட்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெறா விட்டாலும் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக 46.51 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. அதிமுக பெற்று இருக்கும் வாக்கு சதவீதம் எவ்வளவு முக்கியமானது என்று அரசியல் அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள். … Read more

வேலூரில் 2014 ஐ காட்டிலும் இருமடங்கு வாக்குகள் பெற்று திமுக சாதனை!

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது.கடந்த 2014 ம் ஆண்டு திமுக பெற்ற வாக்குகளை விட தற்போது இருமடங்கு வாக்குகள் அதிகமாக பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 2014 ம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்ட இந்தியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் அப்துல் ரகுமான் 2,27,546 வாக்குகள் பெற்றார். ஆனால் தற்போது நடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகள் பெற்றுள்ளார்.கடந்த தேர்தலை விட இந்த முறை திமுக இருமடங்கு … Read more

வேலூர் கோட்டையை திமுக வசமாக்கிய வாக்காளர்களுக்கு நன்றி – முக ஸ்டாலின்

வேலூர் தொகுதியில் திமுக விற்கு வாக்களித்து  வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் தொகுதி இடைத்தேர்தல் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கும் போது பின்னோக்கி இருந்த திமுக வேட்பாளர் கத்தி ஆனந்த் பிற்பகலில் தம்மை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை விட கூடுதலாக … Read more

அத்திவரதர் தரிசனம் ஒரு நாளைக்கு முன்னதாகவே முடியும் – மாவட்ட ஆட்சியர் தகவல்!

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் ஒரு நாளைக்கு முன்னதாகவே முடியும் என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். 40 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர்  தரிசன நிகழ்வு இந்த ஆண்டு நடைபெறுகிறது. காஞ்சிபுரம் பெருமாள் கோவிலில் இருக்கும் அத்திவரதரை நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். முதலில் படுத்த கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் தற்போது நின்று கட்சி அளிக்கிறார். இதுவரை 70மக்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். ஆகஸ்ட் 17 ம் தேதியுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவைடையும் என்று … Read more