அதிமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி ! ஓபிஎஸ் – இபிஎஸ் அறிக்கை !

வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த வேட்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெறா விட்டாலும் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக 46.51 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. அதிமுக பெற்று இருக்கும் வாக்கு சதவீதம் எவ்வளவு முக்கியமானது என்று அரசியல் அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள். மேலும், இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ,சி.சண்முகம் சில வாக்குகள் மட்டுமே குறைவாகவே பெற்று இருக்கிறார்.  ஜெயலலிதா அவர்கள் விட்டு சென்ற வாக்கு சதவீதம் அப்படியே விழுந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்த வேட்பாளர்கள் அனைவர்க்கும் மிக்க நன்றி என்றும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் அறிக்கை விடுத்துள்ளனர்.