வேலூரில் வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தை முந்தியது நோட்டா !

வேலூர் நாளுமன்ற தேர்தல் முடிவில் நோட்டா பெற்றிருக்கும் வாக்கானது வெற்றி பெற்ற வாக்காளர்களின் வாக்கு வித்தியாசத்தை விட அதிகமாக உள்ளது.

கடந்த 5 ம் தேதி நடந்த வேலூர் தொகுதியின் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட்ட புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ,சி,சண்முகம் 4,77,193 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

திமுக மற்றும் அதிமுக பெற்ற வாக்குகளின் வித்தியாசம் 8,141 ஆகும். ஆனால், நோட்டா பெற்றிருக்கும் வாக்குகளின் எண்ணிக்கை 9,417. நோட்டாவை விட குறைவாகவே வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசம் பதிவாகி இருக்கிறது.