சாதிவாரி கணக்கெடுப்பு – பிரதமருக்கு முதல்வர் கடிதம்..!

Tamilnadu CM MK Stalin

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைந்து சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். சமூகநீதி சமத்துவத்தின் நிலைநாட்ட சமமான உள்ளடக்கிய வளர்ச்சி உறுதி செய்ய சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றும், மக்கள் தொகை கணக்கெடுப்பு முக்கியமான சாதி தொடர்பான தரவு உள்ளீடுகளுடன் நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள … Read more

பங்காரு அடிகளாரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..!

Modi

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பால் காலமானார். நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இவரது உடலுக்கு ஆன்மீக தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது உடலுக்கு ஆளுநர் தமிழிசை, ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி  செலுத்தியுள்ளனர். பங்காரு அடிகளார் மறைவு – இந்தப் பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை … Read more

பிரதமர் நரேந்திர மோடி அதானிக்கு பிளாங்க் செக் கொடுத்துள்ளார் – ராகுல் காந்தி

rahulgandhi

டெல்லியில் ராகுல் காந்தி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி அதானிக்கு பிளாங்க் செக்  கொடுத்துள்ளார். நாட்டின் அனைத்து துறைகளிலிருந்தும், ஒவ்வொரு இந்திய குடிமக்களின் வருமானத்திலிருந்தும் அதானி அவர்களுக்கு பங்கு சென்று கொண்டுள்ளது. அதற்கு இந்திய நாட்டின் பிரதமர் மோடி துணையாக இருக்கிறார். அதானி குழுமத்தை பிரதமர் மோடி பாதுகாப்பதன் காரணமாகவே பல முறைகேடுகள் நடந்துள்ளது. அதானி குழும நிறுவனத்தின் நிலக்கரி இறக்குமதி முறைகேட்டால் மக்கள் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த … Read more

பிரதமர் மோடியுடன் பேசிய இஸ்ரேல் பிரதமர்..! நன்றி தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட்..!

PM Modi Tweet to support Isrel Issue

காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வந்த நிலையில், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டுள்ளது. தொடர்ந்து நான்கு நாட்களாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மாறிமாறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் தாக்குதலில், 1700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு நொடிக்கு நொடி பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில்,போர் காரணமாக காசா பகுதியிலிருந்து 1.2 லட்சம் … Read more

எனது நண்பர் அபே ஷின்சோ சுடப்பட்டது வேதனை அளிக்கிறது.! பிரதமர் மோடி வருத்தம்..

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்டதை அறிந்து டிவிட்டரில் பிரதமர் மோடி வருத்தத்தை தெரிவித்தார்.  ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே,மேற்கு ஜப்பானில் திறந்த வெளியில் உரையாற்றும் போது, 41 வயது மதிக்க தக்க ஒரு நபரால் திடீரென சுடப்பட்டார். இதில் அவர் மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்தம் கொட்டியது தற்போது அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து இணையத்தில் ஷின்சோ அபே சுடப்பட்ட திக் திக் வீடியோ … Read more

கடந்த 67 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துகளை தாரைவார்க்க மோடி அரசு விரும்புகிறது – கே.எஸ்.அழகிரி

கடந்த 67 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துகளை, ஒரு சில நண்பர்களுக்குத் தாரை வார்க்க மோடி அரசு விரும்புகிறது. பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு விற்பது தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை இது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுத்துறை நிறுவனங்கள் நம் … Read more

தேசிய அளவீட்டு மாநாட்டில் தொடக்க உரை ஆற்றும் பிரதமர் மோடி!

புது தில்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்-தேசிய இயற்பியல் ஆய்வகம் நடத்தும் மாநாட்டில் பிரதமர் மோடி தொடக்கவுரை ஆற்றுகிறார்.  புது தில்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்-தேசிய இயற்பியல் ஆய்வகம் தொடங்கி 74 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, இந்த ஆய்வகம் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டின் கருப்பொருள்,‘தேசத்தின் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அளவியல்’ ஆகும். இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடக்கவுரை ஆற்றவுள்ளார். இதுகுறித்து பிரதமர் தனது … Read more

2021-ம் ஆண்டு குடியரசு தினவிழாவிற்கு வருகை தரும் இங்கிலாந்து பிரதமர்!

மோடியின் அழைப்பை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்றுக்கொண்டதாக இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரகம் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வரும் 2021-ஆம் ஆண்டு, ஜனவரி 26-ஆம் தேதி, 72-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து, தலைநகர் டெல்லியில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிற நிலையில், இந்த குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி உள்ளார். இந்நிலையில், கடந்த வாரம், பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் தன்னுடன் … Read more

மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பின் போது காஷ்மீர் முக்கிய தலைப்பு அல்ல!

பிரதமர் நரேந்திர மோடிக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையில் நடக்கும் சந்திப்பு குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் பேசியுள்ளார். மேலும்  அவர் பேசுகையில் “காஷ்மீர் போன்ற விஷயங்களைப் பொறுத்தவரை, இது பேச்சுவார்த்தைகளை ஆக்கிரமிக்கும் ஒரு முக்கிய தலைப்பாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சினைகள் மற்றும் அதிகமான “மூலோபாய சிந்தனையை” உள்ளடக்கிய பிரச்சினைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாக அவர் … Read more

ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் பிரதமர் மோடி வாக்குறுதி !

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து என்பது வரலாற்று வாய்ந்த சிறப்பு முடிவு என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். கடந்த 5  ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் 370 ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும் லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது.  இது தொடர்பாக தற்போது நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். ஜம்முகாஷ்மீர் மற்றும் லடாக் இரண்டாக பிரித்து இருப்பது மூலம் இனி வளர்ச்சி … Read more