சாப்பிட்டதுக்கு காசு கேட்டதால் கடை ஊழியரை சரமாரி அடித்த இளைஞர்கள்.!

மதுரையில் உள்ள பேக்கரி ஒன்றில் சில இளைஞர்கள் பப்ஸ் சாப்புட்டுள்ளனர். அதற்கு காசு கேட்ட கடை ஊழியரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் பட்டப்பகலில் நடந்துள்ளது. மதுரை தல்லாகுளம் பகுதியில் கிறிஸ்டி மோசே என்பவர் பேக்கரி ஒன்று நடத்தி வருகிறார். அந்த பேக்கரிக்கு வந்த சில இளைஞர்கள் பப்ஸ் வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். பின்னர் அவர்களிடம் காசு கேட்டதால் கோபமடைந்த அந்த இளைஞர்கள் பேக்கரி ஊழியரை சரமாரியாக அடித்துள்ளனர். அதுவும் பொதுமக்கள் முன்னிலையில், பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. … Read more

சமூக வலைத்தளம் மூலம் ஒன்று சேர்ந்து போதைப்பொருட்களுடன் பார்ட்டி.! வளைத்து பிடித்த காவல்துறை.!

சமூக வலைத்தளம் மூலம் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொடைக்கானலில் ஒன்று சேர்ந்து இரவு நேர பார்ட்டியில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது காவல்துறைக்கு ரகசிய தகவல் மூலம் அவர்களை வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்று கொடைக்கானல் இங்கு தமிழகம் மட்டுமல்ல வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் என பல்வேறு இடங்களில் இருந்து வந்து செல்வார்கள். இந்த வகையில் சமூக வலைத்தளம் மூலம் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொடைக்கானல் மேல்மலை கிராமம் கூக்கால் … Read more

கடல் கடந்த காதல்.! இந்து, கிறிஸ்துவ மற்றும் சுயமரியாதை முறைப்படி திருமணம்.!

திருச்செங்கோட்டை சேர்ந்த இளைஞருக்கு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் இந்து, கிறிஸ்துவம் மற்றும் சுயமரியாதை முறையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், படிக்க சென்ற இடத்தில் ஏற்பட்ட காதல் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது என குறிப்பிடப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாணார் பாளையம் பகுதியை சேர்ந்த சண்முகவேல் மற்றும் தமிழரசி தம்பதியரின் மகன் தரணி எம்டெக் படித்துள்ள இவர் ஸ்வீடன் நாட்டில் டெஸ்ட் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் அங்கு … Read more

தனது உயிர் போனதோடு, தாயையும், சகோதரனையும் சிறைக்கு அனுப்பிய மகன்.! நடந்தது என்ன.?

மதுரை மாவட்டத்தில், அசாருதின் என்ற இளைஞர் போதைக்கு அடிமையாகி தாய், தந்தையிடம் போதைப் பொருள் வாங்க பணம் கேட்டு துன்புறுத்தியதோடு, பெற்றோரை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி வந்துள்ளார். மனம் வெறுத்துப்போன தாய் ஹபீபா பேகம் மற்றும் மூத்த மகனான யாசர் அராபத் இருவரும் சேர்ந்து கை, கால்களை துணியால் கட்டி கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர். இந்த சசம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்துள்ளது. மதுரை மாவட்டம் வண்டியூர் அருகே சுந்தர் நகர் 2-வது தெருவை சேர்ந்த … Read more

ரேஷன் கடையில் உயிரிழந்த இளைஞர்.! பொங்கல் பரிசுகளுடன் ரூ.50 ஆயிரம் மாயமானதால் ஊழியர்கள் அதிர்ச்சி.!

தமிழகத்தில் தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் தலா ரூ.1000 மற்றும் பொங்கல் பொருட்கள் நேற்றிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. திருவாரூரில் நடராஜ் என்ற இளைஞர் ரேஷன் கடையில் மயங்கி கீழே விழுந்து கடை வாசலிலே உயிரிழந்தார், பின்னர் சேலம் ரேஷன் கடையில் பொங்கல் பரிசுகளுடன், ரூ.50 ஆயிரம் பணம் மாயமானதால் ஊழியர்கள் அதிர்ச்சி. தமிழகத்தில் தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் தலா ரூ.1000 மற்றும் பொங்கல் பொருட்கள் நேற்றிலிருந்து வழங்கப்பட்டு … Read more

பாஸ்போர்ட், விசா, அடையாள அட்டை ஏதுமின்றி உள்நுழைந்த வங்காளதேசம் இளைஞர் கைது.!

ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மற்றும் தீவிரவாதிகள் நுழையவுள்ளதாக தகவல். குர்லா விரைவு ரயிலில் இருந்து இறங்கி வந்த இளைஞர் ஒருவர் முரண்பாடாக தகவலை தெரிவித்ததால் சந்தேகமடைந்த ரயில்வே போலீசார் அவரை கைது செய்தனர். ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மற்றும் தீவிரவாதிகள் நுழையவுள்ளதாக வெளியான தகவலையடுத்து ரயில் நிலையத்தில் பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை ஈரோடு ரயில்நிலையத்திற்கு வந்த குர்லா விரைவு ரயிலில் இருந்து இறங்கி வந்த இளைஞர் ஒருவர் … Read more

21 வயது கல்லூரி மாணவர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி.!

தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. கோவையைச் சேர்ந்த 21 வயதான கல்லூரி மாணவர் ஒருவர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால் இந்த தேர்தலில் கோவையைச் சேர்ந்த நாகர்ஜூனா என்ற 21 வயதான கல்லூரி மாணவர் சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நீலாம்பூர் கிராம ஊராட்சி மன்ற மூன்றாவது வார்டு உறுப்பினர் … Read more