கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அடுத்த 6 மாதத்தில் முடிக்கப்படும் -தெற்கு ரயில்வே!

kilambakkam - Railway

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் 6 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என ரயில்வே பொதுமேலாளர் தகவல் தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே, வண்டலூா் – ஊரப்பாக்கம் இடையே ரூ.20 கோடி செலவில் புதிய ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றனர். தற்போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்படவுள்ள ரயில் நிலைய பணிகள் 6 மாதங்களில் முடிவடையும் என ரயில்வே பொதுமேலாளர் தகவல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், … Read more

இன்று முதல் நடைமேடை கட்டண உயர்வு அமல்…!

இன்று முதல் நடைமேடை கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.  சாதாரணமாக தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் பிளாட்பார டிக்கெட் கட்டணம் 10 ரூபாயாக இருந்தது. இந்த நிலையில், சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விலை 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்ந்துள்ளளது. இந்த விலை உயர்வு அக்டோபர் 1 முதல் ஜனவரி 31, 2023 வரையில் அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் … Read more

ரயில் நிலைய நடைமேடை கட்டணம் ரூ.10 ஆக குறைப்பு …!

ரயில் நிலைய நடைமேடை கட்டணம் 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிக அளவில் பரவி நேரம், மக்கள் அதிகளவில் ரயில் நிலையத்தில் கூடுவதை தவிர்க்கும் விதமாக ரயில் நிலைய நடைமேடை கட்டணம் ரூபாய் 50 ஆக உயர்த்தப்பட்டது. இதன்படி சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ஐந்து மடங்காக உயர்த்தப்பட்டது. இதனால் ரயில் நிலைய நடைமேடை கட்டணம் 50 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்பொழுது சென்னை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில் … Read more

பரபரப்பு – தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை!

தாம்பரம் ரயில் நிலையத்தின் கிழக்கு தாம்பரம் நுழைவு வாயில் அருகே மாணவி ஒருவர் கத்தியால் குத்தி கொலை. தனியார் கல்லூரியில் படித்து வரும் 22 வயதான ஸ்வேதா என்பவர் அவரின் ஆன் நண்பர் ராமச்சந்திரன் என்பவருடன் தாம்பரம் ரயில் நிலையத்தில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. திடீரென ராமச்சந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுவேதாவின் கழுத்தில் குத்தி கொலை செய்து விட்டு, அவரும் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். இருவரும் அங்கு ரத்த … Read more

கோவை ரயில் நிலையத்துக்கு பசுமைக்கான பிளாட்டினம் சான்று ….!

தெற்கு ரயில்வேயில் முதன் முறையாக கோவை ரயில் நிலையத்துக்கு பசுமைக்கான பிளாட்டினம் சான்று வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏ 1 தர மற்றும் அதற்கு அடுத்த நிலையில் உள்ள ரயில் நிலையங்கள் பசுமை சான்றிதழ் பெற வேண்டும் என கடந்த 2018 ஆம் ஆண்டு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை சென்ட்ரல், எழும்பூர், திருவனந்தபுரம், திருச்சூர், எர்ணாகுளம், மதுரை, கோவை, கோழிக்கோடு ஆகிய ரயில் நிலையங்கள் ஏ … Read more

தாம்பரம் ரயில் நிலைய பணிமனை வளாகத்தில் திடீர் தீ விபத்து!

சென்னையில் உள்ள தாம்பரம் ரயில் நிலைய பணிமனை வளாகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை சென்னை தாம்பரம் ரயில் நிலைய பணிமனை வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக அருகில் இருந்த ரயில்வே பணியாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 45 நிமிடங்கள் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் இந்த விபத்துக்கான காரணங்கள் … Read more

ரயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கு பயந்து மக்கள் தப்பி ஓட்டம்-அசாம்

அசாமில் கொரோனா சோதனையைத் தவிர்ப்பதற்காக ஜாகிரோட் ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் தப்பி ஓட்டம். இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் இதனை பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாத மக்கள் பலர் இன்னும் பயந்து எந்த வித பரிசோதனையோ அல்லது தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கோ முன் வர மறுக்கின்றனர். இதனையடுத்து திங்கள்கிழமை (மே 24) அசாம் மாநிலத்தில் குவஹாத்தி நகரில் கொரோனா சோதனையிலிருந்து தப்பிக்க … Read more

இரவு நேர ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு புறப்படும் வடமாநில தொழிலாளர்கள்..!

தமிழக அரசு நாளை முதல் இரவு நேர ஊரங்கை அறிவித்ததை அடுத்து தமிழகத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யபட்டுள்ளது.மேலும்,நேற்று ஒரே நாளில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால்,தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுபடுத்த நாளை முதல் இரவு 10 மணியிலிருந்து காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது.மேலும், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை … Read more

பெங்களூரு ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்து கன்னட அமைப்பினர் போராட்டம்.!

இந்தி திணிப்புக்கு எதிராக பெங்களூரு கே.எஸ்.ஆர். ரயில் நிலையத்தில் கன்னட நவ நிர்மான் சேனா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மத்திய அரசு சமீப காலமாக அனைத்து மாநிலங்களிலும் இந்தியை திணிப்பதாக அரசியல் காட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினை சேர்த்தவர்கள் குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் திமுக எம்பி கனிமொழி முன்னெடுப்பின் பேரில், இந்தி திணிப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டி சட்டைகளை அணிந்து பல திரைப்பட பிரபலங்கள் புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். இதையடுத்து, தமிழகம் … Read more

அசத்தல் திட்டம்.! உடற்பயிற்சி செய்தால் பிளாட்பார்ம் டிக்கெட் இலவசம்.!

டெல்லி ரயில்வே நிலையத்தில் உடற்பயிற்சி செய்தால் பிளாட்பார்ம் டிக்கெட் இலவசமாக வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரயில்வே நிலையத்தில் உடற்பயிற்சி செய்தால் பிளாட்பார்ம் டிக்கெட் இலவசமாக வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் இந்த ரயில்வே நிலையத்தில் இயந்திர மூலம் உடற்பயிற்சி மேற்கொண்டால் இலவசமாக டிக்கெட் என்ற முறை உலகின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. हम फिट तो इंडिया फिट एक्सरसाइज से हों फिट, मुफ्त मिले प्लेटफार्म टिकिट To … Read more