வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி வடக்கு மற்றும் தென்தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு…!!

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் கர்நாடகத்தை ஒட்டி வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடக்கு மற்றும் தென்தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஓரிரு முறை இடைவெளி விட்டு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவிப்பு செய்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், ராமேஸ்வரம், சேலம், விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு மாவட்டங்களில் விடிய விடிய மழை!

பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு பெய்த பலத்த மழையால்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக அரசம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தர்மபுரி-திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் புளியமரம் சாய்ந்ததால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அதுபோல் ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 4 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்துள்ளது. ஒசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் … Read more

சீனா வடகிழக்குப் பகுதிகளில் பனி மற்றும் பனிச்சேறுகளை அகற்றும் பணிகள் தீவிரம்!

தேங்கியிருக்கும் பனி மற்றும் பனிச்சேறுகளை அகற்றும் பணிகள் சீனாவின் வடகிழக்குப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. லியாவோனிங் மற்றும் ஜிலின் மாகாணங்களில் கடந்த இருமாதங்களுக்கும் மேலாக வசந்தகாலமாக பனி பொழிவு இருந்தது. இதனால் சாலையெங்கும் ஒரு அடி உயரத்திற்கும் அதிகமாக பனிப்பொழிவு இருந்தது. தற்போது வசந்தகாலம் முடிவுற்றதால் பனி மற்றும் பனிச்சேறுகளை அகற்றும் பணியில் மாகாண அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  கனமழை!

இன்று பெய்த கனமழை காரணமாக கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெங்களூரு நகரம், பன்னார்காட்டா சாலை, எலக்ட்ரானிக் சிட்டி, நாகர்பாவி, எஸ்வந்த்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் பிரதான சாலைகளிலும் தெருக்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை!

பரவலாக ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில்  மழை பெய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த மழை பெய்தது. கடும் வறட்சி மற்றும் குடிநீர்த் தட்டுப்பாடு உள்ள அப்பகுதியில் பெய்த திடீர் மழை விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், புதுக்கோட்டை மாவட்டத்திலும் நேற்று இரவு மழை பெய்துள்ளது. இதனிடையே, அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை வடமேற்கு திசையில் நகர்ந்து, நள்ளிரவில் மினிக்காய் … Read more

இன்று தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தாழ்வு மண்டலமாக  வானிலை மாற்றம் காரணமாக அரபிக்கடல் பகுதியில் மினிக்காய் தீவுப்பகுதியில் கன்னியாகுமரி அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மாறியது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி, பாபநாசம், செங்கோட்டை, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், மணிமுத்தாறு உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் கனமழை பெய்துள்ளது. பருவமழை இல்லாத காலத்தில் கன மழை பெய்துள்ளது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்தில் மணிக்கு … Read more

கன்னியாகுமரி பல பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை!

பல பகுதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில்  இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல்,மார்த்தாண்டம், களியக்காவிளை உள்ளிட்ட குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குமரிக்கடல் மாலத்தீவை ஒட்டிய பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டத்தின் காரணமாக வரும் 3 நாட்களுக்கு தென் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் குமரி மாவட்ட மீனவர்கள் 3 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் குறிப்பாக மாலத்தீவுக்கு … Read more

தென் தமிழகத்தில் அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பரவலாக மழைக்கு வாய்ப்பு!

வானிலை மையம் அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும், கன்னியாகுமரி, கேரளா, மாலத்தீவு, லட்சத்தீவு கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும்  எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மினிக்காய் தீவுகளில் இருந்து சுமார் 130 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டிருப்பதாக தெரிவித்தார். குறைந்த … Read more

திருச்சியில் மேகமூட்டத்துடன் வானம் இருந்த நிலையில் மழை!

திருச்சியில் மேகமூட்டத்துடன் வானம் இருந்த நிலையில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. தமிழகத்தில் வெயில் காலம் துவங்கிய நேரத்தில் வழக்கத்துக்கு மாறாக இந்திய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, அது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தீவிரம் அடைந்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலையால் டெல்டா உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் முதல் தூறல் மழை பெய்து வருகிறது. நேற்றும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்கிறது.நேற்றுமுன்தினம் திருச்சியில்  ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை தூறல் … Read more