துணிவு…வாரிசு…இரண்டு அப்டேட்டும் இனி ராக்ஸ்டார் கையில்…! ரசிகர்களுக்கு தரமான விருந்து ஆன் தி வே…

விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படமும், அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் வாரிசு திரைப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் தமன் இசையில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த பாடலை தொடர்ந்து அடுத்ததாக வாரிசு படத்தின் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. அந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். அதைப்போல அஜித் நடித்து வரும் துணிவு படத்தின் … Read more

இன்று ரசிகர்களை சந்திக்கிறார் தளபதி விஜய்…!

நடிகர் விஜய் இன்று சென்னை, பனையூரில் உள்ள அலுவலகத்தில் தனது ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் தளபதி விஜய் நடிப்பில் உருவாக்கி உள்ள திரைப்படம் வாரிசு. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி மாதம் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், இன்று சென்னை, பனையூரில் உள்ள அலுவலகத்தில் தனது ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பில் விஜய் மக்கள் இயக்கத்தின் மூன்று மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சொன்ன தேதியில் விஜய்க்கு புது சிக்கல்.! துணிவுடன் வெளிவருமா வாரிசு.?

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும், படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில்,  விஜய் முன்னணி நடிகர் என்பதால் ‘வாரிசு’ படத்திற்கு அதிக திரையரங்குகளில் கிடைக்கும். படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளதால், தெலுங்கானா பகுதிகளிலும் அதிக திரையரங்குகள் கிடைக்கும். ஆனால், … Read more

வாரிசு படத்தை விட துணிவு படத்துக்கு அதிக தியேட்டர்களா.? உண்மையை உடைத்த உதயநிதி…

விஜயின் “வாரிசு” திரைப்படமும், அஜித்தின் “துணிவு” திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இரண்டு படங்களுக்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள். இதில், துணிவு  துணை திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தமிழகத்தில் வெளியிடுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே “துணிவு” திரைப்படத்திற்கு தமிழகத்தில் அதிகம் திரையரங்குகள் கிடைக்கும் என்று கூறப்பட்டது. மேலும் துணிவுடன் விஜயின் … Read more

எனக்கு இன்று தான் தீபாவளி .. பட்டாசு பாடலுடன் உங்களுடன் கொண்டாட காத்திருக்கிறேன்.!- தமன் ட்வீட்..

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் விஜய்க்கு இசையமைக்க வேண்டும் என இசையமைப்பாளர் தமன் நீண்ட ஆண்டுகளாக ஆவலுடன் காத்திருந்தார். இந்த ஆசை  “வாரிசு” படத்தின் மூலம் அவருக்கு நிறைவேறிவிட்டது என்றே கூறலாம். இப் படத்திற்காக தமன் ஒவ்வொரு பாடல்களையும் ரசித்து ரசித்து இசையமைத்துள்ளார். இதனை அவரே பல பேட்டிகளில் தெரிவித்தும் இருந்தார். இந்த நிலையில், வாரிசு படத்திற்கான ‘ரஞ்சிதமே ‘ எனும் முதல் பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த பாடலை விஜய்யே பாடியுள்ளார் … Read more

சைட் அடிக்க தல மாதிரியும், சேர்ந்து வாழ தளபதி மாதிரியும் புருஷன் வேணும்.! அடம்பிடித்த தர்ஷா குப்தா.!

நடிகை தர்ஷா குப்தாகென்று தனி இளைஞர்கள் ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே கூறலாம். சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான இவர் தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு திரைப்படம்  ‘ஓ மை கோஸ்ட்’ த்ரில்லர் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனைமுன்னிட்டு படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.இந்த விழாவில் சன்னி லியோன், தர்ஷா குப்தா, ஜிபி … Read more

வைரலாகும் கியூட் கிளிக்… தளபதி விஜய் கையில் இருக்கும் இந்த குழந்தை யாருனு தெரியுமா..?

நடிகர் விஜய் தற்போது  தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அவ்வபோது படப்பிடிப்பு தளத்தில் விஜய் இருக்கும் புகைப்படங்கள் லீக் ஆகி … Read more

வாரிசு விவகாரம்.! வம்படியாய் பேசி மாட்டிக்கொண்ட குஷ்பூ.! வச்சி செய்து வரும் நெட்டிசன்கள்.!

நடிகை குஷ்பூ தனது உடல் எடையை குறைத்து இப்போது உள்ள இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அழகில் இருக்கிறார். இதனால் அவருக்கு இப்போதும் கூட பல பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கிறது. அவரும் பல படங்களில் நடித்து வருகிறார். அதில் முக்கியமான ஒரு திரைப்படம் விஜய் நடித்து வரும் “வாரிசு”. அட ஆமாங்க… வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் நடிகை குஷ்பூவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். … Read more

எங்க அண்ணனுக்கு தில்ல பாத்தீங்களா.? துணிவு, வாரிசு உடன் களமிறங்கும் விமல்.!

வருடம்..வருடம் பொங்கல் பண்டிகை என்றாலே இதனை முன்னிட்டு, பெரிய நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாவது வழக்கம். அந்த வகையில் வரும் (2023) ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படமும் அஜித் நடித்த வரும் “துணிவு” திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை பார்க்க அஜித், விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர் எனவே இரண்டு திரைப்படத்திற்கும் வசூல் ரீதியாக நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, மேலும் ஒரு நடிகரின் … Read more

தளபதி விஜய் படத்தை தயாரிக்கும் தல தோனி?! வெளியான சூப்பர் தகவல்.!

கிரிக்கெட் வீரர் தோனி “தோனி எண்டர்டெயிண்மெண்ட்” எனும் நிறுவனம் சார்பில் படங்களை தயாரித்து வருகிறார். இதுவரை இந்நிறுவனத்தின் சார்பில் 3 திரைப்படங்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த திரைப்படங்கள் அனைத்துமே குறைந்த பட்ஜெட் படங்கள் தான். எனவே, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் மட்டும் விளையாடிவிட்டு பிறகு ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்பதால் அடுத்ததாக “தோனி எண்டர்டெயிண்மெண்ட்” நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம். தமிழில் முதன் முதலாக தான் தயாரிக்கும் முதல் … Read more