திருச்சி அருகே 2 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது விபத்து!

திருச்சி உறையூர் சாலை ரோட்டில் 2 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது இடிபாடுகளை அகற்றும் பணியில் போலீசார், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்

1,00,000 கன அடி நீர்தேக்க தொட்டி : திருவெறும்பூர் தொகுதியில்…

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சியில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி அமைக்க திட்டம் போடப்பட்டது. அந்த திட்டம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. தற்போது, திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட குண்டூர் ஊராட்சியில் புதிதாக தரைமட்ட நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணியினை நேரில் அந்த பகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார். இது சுமார் 1,00,000 கன அடி கொள்ளவு கொண்ட நீர்தேக்க தொட்டி ஆகும். இந்த தொட்டி அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கப்படும் என … Read more

வாரத்திற்கு ஒரு முறை நூலகம் செல்லவேண்டும் : பொது நூலக இயக்குனர் பேச்சு

 திருச்சி மாவட்டம் துறையூர் கிளை நூலகத்தில் 50வது தேசிய நூலகவார  விழா நடைபெற்றது. இந்த  விழாவை முன்னிட்டு கிளை நூலக வாசகர் வட்டம், துறையூர் காவல் நிலையம் காவல் நிலையம், சிறுவர் மன்றம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் இணைந்து வாகன ஓட்டுநர்கள் வாழ்க்கை பயணம் தொடர என்ற விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. வாசகர் வட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். நூலகர் பாலசுந்தரம் வரவேற்றார். பொது … Read more

மணப்பாறை அரசு மருத்துவமனையில் செவிலியர் நியமிக்க தீர்மானம் :மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

 மணப்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது தாலுகா மாநாடு நேற்று நடந்தது. வட்ட குழு உறுப்பினர்கள் சீனிவாசன், சரஸ்வதி ராஜாமணி ஆகியோர் தலைமை வகித்தனர்.இந்த மாநாட்டில்  மணப்பாறை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க வேண்டுமென தீர்மானம் இயற்ற்றபட்டது. மாவட்டகுழு உறுப்பினர் தர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பெரியகுளம்  தொகுதி முன்னாள் எம்எல்ஏ லாசர்  சிறப்புரையாற்றினார். மாநாட்டில் நடந்த நிர்வாகிகள் தேர்தலில் புதிய வட்ட செயலாளராக ராஜகோபால், வட்டக்குழு உறுப்பினர்களாக சீனிவாசன், … Read more

தென்னிந்திய திருச்சபையின் பெண்கள் மாநாடு நிறைவு

தென்னிந்திய திருச்சபையின் (CSI) பெண்கள் ஐக்கிய மாநாடு  இந்தமுறை மூன்று நாள் மாநாடு திருச்சியில் தொடங்கியது. இது பிஷப் ஹீபர் கல்லூரியில் கடந்த 17ம் தேதி துவங்கியது. இந்த மாநாடு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இந்த மாநாட்டை திருச்சி-தஞ்சாவூர் டயோசஸ் நடத்தியது. இந்த நிகழ்ச்சியின்  நிறைவு நாளான நேற்று சிஎஸ்ஐ பெண்கள் ஐக்கிய பொதுச்செயலாளர் சிந்தியா ஷோபா ராணி வழிகாட்டுதல் வழங்கினார். டோர்னகால் டயோசஸ் தலைவர் சுவந்தா பிரசாத் ராவ் துவக்கி வைத்தார். தமிழ் … Read more

விராலிமலை ஆற்றில் மணல் கொள்ளை : திருச்சியில் பிடிபட்டனர்.

திருச்சி : விராலிமலை ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டு செல்லும் வழியில் போலீசார் லாரியை மடக்கி பிடித்தனர். நேற்று திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த கைகாட்டி அருகே உள்ள சொரியம்பட்டி  விளக்கில் வளநாடு போலீசார்  வாகன சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்த போது இது கண்டுபிடிக்கபட்டது. அந்த வண்டியை மடக்கி பிடித்து விசாரித்ததில் இன்னொரு டிப்பர் லாரி மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது.பின்னர் அதனையும் அந்த பகுதி போலீசார் மடக்கி பிடித்தனர். … Read more

திருச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் 312 பேர் பங்குபெற்றனர். 120 பேர் பரிசு பெற தகுதிபெற்றுள்ளனர். திருச்சி மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதனை கலக்டர் ராஜாமணி தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் வரவேற்றார். கலைபண்பாட்டுத்துறை துணை இயக்குனர் குணசேகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் புன்னியமூர்த்தி, சிறப்பு ஒலிம்பிக் இயக்குனர் பால்தேவசகாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருச்சி, நவ.17: திருச்சியில் நேற்று … Read more

திருச்சியில் மாணவ மாணவிகள் சாலை மறியல்

திருச்சி: திருச்சியில் இருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் வழியில் மண்ணச்சநல்லூரில் பங்குனி வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால், பெருவளை வாய்க்கால் பாலங்கள் பழுதடைந்ததால் புதிதாக கட்டப்பட்டு வருகிறதன. அதலால் தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டன. இந்த பாலங்கள் கட்டும் வேலைகள் நடைபெறுவதால் பஸ்கள் சுற்றி செல்கின்றன. இதனால்  பாலத்தின் அருகே தற்காலிக பஸ் நிறுத்தம் ஏற்படுத்தகோரி நேற்று பாதிக்கப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.  புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்காலிக பாலமும் அடிக்கடி சேதமடைந்ததால் அங்கேயும்  போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதலால்  … Read more

ஐயப்ப பக்தர்களுக்கு திருச்சியில் சிறப்பு முகாம்கள் : பயன்பெறும்படி கேட்டுகொள்கிறோம்

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக 72 ஆண்டுகளாக சேவை செய்துவரும் அகில பாரத ஐயப்ப சேவா  சங்கமானது 2011ஆம் ஆண்டு முதல்  வருடம்தோறும்  திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களை ஒன்றினைத்து திருச்சி யூனியன்  என்கிற பெயரில் சிறப்பு முகாம்களை நடத்திவருகிறது. இந்த அமைப்பு  100 கிளைகளுடன் செயல்படுகிறது.  அதன்படி இந்தாண்டும் காவிரி கறையின் இரு இடங்களிலும் நவம்பர் 16 (வியாழன்) அன்று தொடங்கியது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபசாலையில் காவிரி புஷ்கரம் நடந்த இடத்திலிலும் (கோனார் சத்திரம் எதிரில்) ஒரு … Read more

மலைகோட்டை பயணிகளை பாடாய்படுத்தும் ரயில்வே நிர்வாகம்

திருச்சி to சென்னை இடையே செல்லும் மலைகோட்டை எக்ஸ்பிரஸ் திருச்சி வழ் மக்களின் பயன்பாட்டை கருத்தில் கொண்டே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கும்பகோணம் மார்க்கமாக அகலபாதை பயணிகளுக்காக மாற்றப்பட்ட தடத்தை பல்வேறு போராட்டங்களுக்கு இடையே மீட்டு 2015ஆம் ஆண்டு இறுதி முதல் திருச்சியிலிருந்து இயக்கபடுகிறது. ஆனால் தற்போது ரயில்வே துறை எடுக்கும் அதிரடி நடவடிக்கை காரணமாக மலைகோட்டை எக்ஸ்பிரஸ் பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். முதலில் இந்த ரயில் அதி விரைவு வண்டி என கூறி … Read more