ஐயப்ப பக்தர்களுக்கு திருச்சியில் சிறப்பு முகாம்கள் : பயன்பெறும்படி கேட்டுகொள்கிறோம்

ஐயப்ப பக்தர்களுக்கு திருச்சியில் சிறப்பு முகாம்கள் : பயன்பெறும்படி கேட்டுகொள்கிறோம்

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக 72 ஆண்டுகளாக சேவை செய்துவரும் அகில பாரத ஐயப்ப சேவா  சங்கமானது 2011ஆம் ஆண்டு முதல்  வருடம்தோறும்  திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களை ஒன்றினைத்து திருச்சி யூனியன்  என்கிற பெயரில் சிறப்பு முகாம்களை நடத்திவருகிறது. இந்த அமைப்பு  100 கிளைகளுடன் செயல்படுகிறது. 

அதன்படி இந்தாண்டும் காவிரி கறையின் இரு இடங்களிலும் நவம்பர் 16 (வியாழன்) அன்று தொடங்கியது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபசாலையில் காவிரி புஷ்கரம் நடந்த இடத்திலிலும் (கோனார் சத்திரம் எதிரில்) ஒரு முகாமும், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி கரையோர சாலையில் ஒரு முகாமும் தொடங்கியுள்ளது. 

நவம்பர் 16 தொடங்கி ஜனவரி 17 வரை 64 நாட்களுக்கு நடைபெறும் இரு முகாம்களிலும் ஐயப்ப பக்தர்களுக்கு மூன்று வேலை உணவு வழங்கப்படும். சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு மூலம் முதலுதவி வழங்கப்படும். சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும். பாதயாத்திரை பக்தர்களுக்கு காலுறை (ஷாக்ஸ்), இருமுடியில் ஒளிரும் வில்லை, போன்றவை தரப்படும். 

இந்த முகாம் கார்த்திகை, மார்கழி, மகரவிளக்கு விழா காலம் வரை இந்த முகாம் இயங்கும். எனவே திருச்சி வழி செல்லும் ஐயப்ப பக்தர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள். இதனை திருச்சி வாழ் மக்களும் ஐயப்பா பக்தர்களுக்கு முகாம்களின் முகவரியை கூறி அவர்களுக்கு  உதவ வேண்டும் எனவும் குழு நிர்வாகம் சார்பில் தெரிவிக்கபடுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *