புதிய உதயமாகும் ராக்கெட் ஏவுதளம்! தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் விரைவில்…

தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களில் ஒருவரான சசிகலா புஷ்பா மாநிலங்களவையில் தமிழகத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய விண்வெளித்துறை அமைச்சர் ஜிகேந்திர சிங் பதிலளிக்கையில், தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளது. என தெரிவித்தார். இந்தியாவில் ஏற்கனவே ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டமன்ற பேரவையில் அரசு பள்ளிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு…!!

திருச்செந்தூரில் கூரை கொட்டகையில் இயங்கிவரும், செந்தில்முருகன் மேல்நிலைப் பள்ளிக்கு, நபார்டு திட்டத்தின் கீழ், புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் தமிழக சட்டமன்ற பேரவையில் பதில் அளித்துள்ளார். அதேபோல் பர்கூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார்.  

திருச்செந்தூரில் நாய் கடித்த நிலையில் 2 வயது சிறுவனின் உடல்…??

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் ஷியான் ஹோண்டா ஷோரூம் பின்னால் ரெயில்வே ஸ்டேஷன் அருகில் 2 வயது மதிக்கதக்க சிறுவனின் நாய் கடித்த நிலையில் பிணம் காணப்பட்டது. இது சம்பந்தமாக காவல்துறையினருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்..

தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் தீ விபத்து…!!

தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் லெவஞ்சிரம் அருகில் சோலத்தட்டை ஏற்றி வந்த மினி லாரி மின் வயரில் உரசி தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.உடன் பொதுமக்களும் பலர் உதவினர்.  

திருச்செந்தூர் முருகன் கோயில் மேற்கூரை விழுந்து ஒருவர் பலி

தூத்துக்குடி மாவட்டம், திருசெந்தூரில் உள்ள முருகன் கோயிலில் மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் பலியானார். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி கோயில் மிகவும் பிரபலம். இங்கு எல்ல நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் இருக்கும். இங்குள்ள சுற்று புறத்தில் பொது தரிசனத்திற்கு செல்லும் வழியில் தான் மேற்கூரை இடிந்துள்ளது. இந்த மேற்கூரை மிகவும் மோசமாக இருந்து வந்துள்ளது. இதனை கோயில் நிர்வாகம் கவனிக்காமல் விட்டதால், தற்போது இந்த கூரை இடிந்து விழுந்துள்ளது.

திருச்செந்தூரின் நாழிக்கிணறு ஓர் அதிசயம்

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குவது திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோயில். இங்கு தான் முருகன் நரகாசூரனை வதம் செய்த இடமாகும். இங்கு நாளிகிணறு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த நாழிக்கிணறு கடலுக்கு மிக அருகாமையில் உள்ளது. ஆனால், இந்த கிணற்றில் நல்ல தண்ணீர் தான் உள்ளது. திருச்செந்தூருக்கு செல்லும் பக்தர்கள் முதலில் கடலில் நீராடிவிட்டு, பின் நாழிகிணறு நீரில் நீராடிய பிறகு முருகனைத் தரிசிக்கச் செல்கிறார்கள். இந்த செயலுக்குப் பின்னால் ஒரு புராண வரலாறு உள்ளது. அது, அசுர குலத்தை  சேர்ந்தவர்களான … Read more