திருச்செந்தூரின் நாழிக்கிணறு ஓர் அதிசயம்

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குவது திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோயில். இங்கு தான் முருகன் நரகாசூரனை வதம் செய்த இடமாகும். இங்கு நாளிகிணறு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த நாழிக்கிணறு கடலுக்கு மிக அருகாமையில் உள்ளது. ஆனால், இந்த கிணற்றில் நல்ல தண்ணீர் தான் உள்ளது.

திருச்செந்தூருக்கு செல்லும் பக்தர்கள் முதலில் கடலில் நீராடிவிட்டு, பின் நாழிகிணறு நீரில் நீராடிய பிறகு முருகனைத் தரிசிக்கச் செல்கிறார்கள். இந்த செயலுக்குப் பின்னால் ஒரு புராண வரலாறு உள்ளது.

அது, அசுர குலத்தை  சேர்ந்தவர்களான தாரகாசூரனும், சூரபத்மனும் இறைவனிடம் வரம் பெற்று தேவர்களை அடிமைப்படுத்தினர். வடக்கே தாரகாசூரனும், தெற்கே சூரபத்மனும் மக்களைக் கொடுமைப்படுத்தி ஆட்சி செய்தனர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க முருகன் தாரகாசூரனை வீழ்த்திவிட்டார்.  சூரபத்மனை வீழ்த்த திருச்செந்தூருக்கு வருகை புரிந்தார். முருகனின் மயில் வாகனமாக இந்திரன் மாறினார்.

சூரபத்மனோடு ஐந்து நாட்கள் கடும் போர் நடந்தது. இந்தப் போரில் சூரபத்மனின் படைகளும், அவனது சகோதரர்களும் அழிக்கப்பட்டனர். இப்போரின் ஆறாம் நாளில் சூரபத்மன் மட்டும் தனியாக போருக்கு வந்தான். தனது சக்திகள் முழுவதையும் பயன்படுத்திப் போர் புரிந்தான். ஆனால், முருகனின் சக்திக்கு முன்னால், அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. இறுதியில் கடலுக்கடியில் உள்ள தனது அரண்மனையில் ஒளிந்து கொண்டான். பின்பு மாமரமாக உருமாறித் தாக்கினான். கார்த்திகேயன் தனது வேலால் மரத்தை இரண்டாகப் பிளந்தார். பத்மாசூரன் உருமாறிய மாமரத்தின் ஒரு பகுதி சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் மாறியது. இதற்குப் பின்பே முருகன்,சேவல் கொடியுடனும், மயில் வாகனத்தோடும் காட்சி புரிந்தார்.
போர் முடிந்த பின்பு, தனது படை வீரர்களுக்கு தீராத தாகம் ஏற்படவே, முருகன் தனது வேலால் கிணறு ஒன்றினை உருவாக்கினார். அக்கிணறே நாழிக்கிணறு ஆகும். 14அடி சுற்றளவு கொண்ட இந்த சதுரமான கிணறு அதிசயத்தினுள் ஓர் அதிசயம். இந்த கிணற்றின் நீர் உப்பாகவும் கருகிய நிறத்தில் இருக்கும். இந்த கிணற்றின் உள்ளேயே மற்றொரு கிணறு உள்ளது. ஒரு அடி மட்டுமே உள்ள இந்த கிணற்றின் நீர் தெளிவாகவும் மிகவும் சுவையானதாகவும் இருக்கும். கடலுக்கு மிக அருகில் இருந்தும் இந்த கிணறு உப்பாக இல்லாமல் இருப்பது இங்கு ஒரு அதிசியமாக பார்க்கபடுகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment