உத்தரவை கிடப்பில் போட்ட டெல்லி அரசு.? எச்சரிக்கை விடுத்த உச்சநீதிமன்றம்.!

Supreme Court of India - Delhi CM Arvind Kejriwal

டெல்லி அரசு உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்கவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு கண்டனம் தெரிவித்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளளது. அதாவது, டெல்லியை ஹரியானா , ராஜஸ்தான் மாநிலத்துடன் இணைக்கும், பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பின் (ஆர்ஆர்டிஎஸ்) சாலை அமைக்கும் திட்டம் வகுக்கப்பட்டது. டெல்லியை மீரட்டுடன் இணைக்கும் 82.15 கிமீ நீள பாதைக்கு ரூ.31,632 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இதன் மூலம் டெல்லி – மீரட் தொலைவை 60 நிமிடங்களில் கடக்க முடியும் என கூறப்படுகிறது. ராஜஸ்தான் … Read more

ஆளுநர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு..!

ஆளுநர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேலும் ஒரு மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக விஷயங்களை ஆளுநர் செய்வதாக தமிழக அரசு 2-வது மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மசோதாக்கள், அரசு உத்தரவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலம் வரம்பு நிர்ணயிக்க வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும். அரசு நியமித்த தேர்வுக்குழு பரிந்துரைப்படியே பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்துவதாக … Read more

26 வார கர்ப்பத்தை கலைக்க மனுவை கிடையாது -உச்சநீதிமன்றம்..!

26 வார கர்ப்பத்தை கலைக்கக் கோரி திருமணமான பெண்ணின் மனுவை உச்ச நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது. சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் ஒன்றை அளித்தார். அதில், மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு மற்றும் மோசமான நிதி நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ளதால் தனது 26 வார மூன்றாவது கர்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்க வேண்டும்  தெரிவித்து இருந்தார். இதை அக்டோபர் 9 ஆம் தேதி விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு பெண்ணின் மனுவிற்கு அனுமதி … Read more

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வெற்றிக்கு எதிரான வழக்கு.! உச்சநீதிமன்றம் தள்ளுபடி.!

2019இல் கேரள வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் காந்தியின் வெற்றிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.   கடந்த 2019ஆம் ஆண்டு கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியை எதிர்த்து கேரளாவை சேர்ந்த சரிதா எஸ் நாயர் என்பவர் முதலில் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். கேரள நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது. கேரளா நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அங்கும் … Read more

தென்பெண்ணை நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாயம்.! மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.!

3 மாத கால அவகாசத்துக்குள் தென்பெண்ணை நதிநீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. கர்நாடக அரசானது, தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே அணை கட்ட தீர்மானித்துள்ளது. இந்த முடிவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தென்பெண்ணை நதிநீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்காமல் மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே அணை அமைக்க தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட பட்டு இருந்தது. இந்த … Read more

இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும்.! உச்சநீதிமன்றத்தில் சட்டக்கல்லூரி மாணவி வழக்கு.!

இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சட்டக்கல்லூரி மாணவி வழக்கு தொடர்ந்து இருந்தார்.  நாட்டில் சாதி வாரியாக இடஒதுக்கீடு என்பது அமலில் இருந்து வருகிறது. இதனை ரத்து செய்யக்கோரி இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஷிவானி பன்வர் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இடஒதுக்கீடு முறை என்பது சாதிய பாகுபாடுகளை வளர்க்கிறது என்பது போலவும் அதில் குறிப்பிட்டு இருந்த்தார். இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த … Read more

பணமோசடி வழக்கு.! அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.!

உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள பணமோசடி வழக்கு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது .  அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, பணத்தை பெற்றுக்கொண்டு சிலருக்கு வேலை வாங்கி கொடுத்ததாக கூறி அவர்மீது பணமோசடி வழக்குப்பதிவு எய்து அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் என பாலாஜி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இவர் இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார். இந்த … Read more

இடைக்கால பொதுச்செயலாளராக தொடர்வாரா இபிஎஸ்? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை. அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணையின் முடிவில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த உத்தரவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தொடர்வாரா? என தெரியவரும். கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் இபிஎஸ் தரப்பினர் நடத்திய … Read more

உச்சநீதிமன்றத்திற்கு புதிய செயலி அறிமுகம் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

உச்சநீதிமன்றத்திற்கு புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  உச்சநீதிமன்றத்திற்கு புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். இந்த செயலியை supreme court mobile app 2.0 என்ற பெயரில் பிளே ஸ்டோரில் இந்த செயலி கிடைக்கும். அரசு சார்ந்த துறைகளில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்கள் உள்ளிட்டவை குறித்து இந்த செயலி மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம், பரிசுப்பொருட்கள் வழங்கி மதமாற்றம் செய்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.! -உச்சநீதிமன்றம் கடும் விமர்சனம்.!

பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி மதமாற்றம் செய்வது  இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது. – உச்சநீதிமன்றம் விமர்சனம்.  மக்களின் மூடநம்பிக்கையை பயன்படுத்தி கட்டாய மத மாற்றம் செய்யும் நடவடிக்கை தடுக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய் உச்சநீதிமதின்றதில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில்,  பணம் … Read more