தென்பெண்ணை நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாயம்.! மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.!

3 மாத கால அவகாசத்துக்குள் தென்பெண்ணை நதிநீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

கர்நாடக அரசானது, தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே அணை கட்ட தீர்மானித்துள்ளது. இந்த முடிவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

தென்பெண்ணை நதிநீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்காமல் மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே அணை அமைக்க தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட பட்டு இருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று வந்த போது, தீர்ப்பாயம் அமைக்க 6 மாத கால அவகாசத்தை மத்திய அரசு கோரியது. அதனை நிராகரித்து 3 மாத கால அவகாசத்துக்குள் தென்பெண்ணை நதிநீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment