தென்னாப்பிரிக்க அதிபருக்கு கொரோனா..!

தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசாவிற்கு நேற்று உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது சிரில் ராமபோசா சுயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் மற்றும் தென்னாப்பிரிக்க இராணுவ சுகாதார சேவையால் கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்துக்கான அனைத்துப் பொறுப்புகளையும் துணை ஜனாதிபதி டேவிட் மபுசாவிடம் ஒப்படைத்துள்ளார். 69 வயதான ரமபோசா முழுமையாக தடுப்பூசி … Read more

விமான பயணி மூலம் ஆஸ்திரேலியாவில் பரவிய முதல் ஓமைக்ரான் கொரோனா வைரஸ்.!

தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா குயீன்ஸ்லாண்ட்டிற்கு வந்த ஒரு பயணிக்கு ஓமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுக்க தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பழைய நிலைமைக்கு வந்துகொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட கடந்த 2 வருடங்களாக அந்த வைரஸுடன் போராடி பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறிந்து பல கோடிக்கணக்கானோர் செலுத்திவிட்டனர். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் புதிய உருமாற்றமடைந்து ஓமைக்ரான் எனும் உருவில் புதிய வைரஸாக மீண்டும் உலகை … Read more

இந்தியாவின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான அட்டவணை வெளியானது..!

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி  மூன்று டெஸ்ட் மற்றும்  மூன்று ஒருநாள் போட்டிககளில் விளையாடவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துடன் விளையாடி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 4 டி20 போட்டியில் விளையாட திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா “ஒமைக்ரான்” வைரசால் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்லுமா..? என்ற கேள்வி … Read more

தென் ஆப்ரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 11 நாட்டு பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிப்பு …!

தென் ஆப்ரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 11 நாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் தென் ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. இந்த வைரசுஸுக்கு ஓமைக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமைக்ரான் வைரஸ் பல்வேறு தென் ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவியுள்ளது. எனவே தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. அந்த வகையில் … Read more

#T20WorldCup:பங்களாதேஷ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா..!

13.3 ஓவர் முடிவிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு தென் ஆப்பிரிக்கா அணி 86 ரன்கள் எடுத்து,பங்களாதேஷ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. உலக கோப்பை டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதன்படி,இன்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.அதன்படி,களமிறங்கிய பங்களாதேஷ் அணி … Read more

தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய கொரோனாவின் 3 ஆம் அலை – சுகாதாரத்துறை அறிவிப்பு..!

கொரோனாவின் 3 ஆவது அலை தென்னாப்பிரிக்காவில் தொடங்கியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலையால் பெரிய பாதிப்புகளை சந்தித்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் இறந்துள்ளனர். முதல் அலையை விட இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் 3 ஆம் அலை தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் இதுவரை 40 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 லட்சத்திற்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இங்கு 3 ஆம் … Read more

தென் ஆப்பிரிக்காவை விட 143 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ்..!

தென்ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் இடையே முதல் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. தென் ஆப்பிரிக்காவை விட 143 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் உள்ளது.  வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க அணி 2 டெஸ்ட் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. தென்ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் இடையே முதல் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி … Read more

#Breaking:மகாத்மா காந்தியின் பேத்திக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை…!

மகாத்மா காந்தியின் பேத்தி,ஆஷிஷ் லதா ராம்கோபின் தென்னாப்பிரிக்காவில் ஆறு மில்லியன் ரேண்ட் (ரூ. 3.22 கோடி) மோசடி மற்றும் பிற மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்,அவருக்கு டர்பன் நீதிமன்றத்தால் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் பேத்தியும்,தென் ஆப்பிரிக்காவில் வாழும் பிரபல மனித உரிமை ஆர்வலர்கள் எலா காந்தி மற்றும் மறைந்த மேவா ராம்கோபிந்தின் மகளுமான ஆஷிஷ் லதா ராம்கோபின்( வயது 56) ,அகிம்சைக்கான சர்வதேச மையத்தில் பங்கேற்பு மேம்பாட்டு முயற்சியின் நிறுவனர் மற்றும் … Read more

தென்னாப்பிரிக்காவில் ஊரடங்கால் வெறிச்சோடிய சாலையில் ஓய்வெடுக்கும் சிங்கங்கள்!

தென்னாபிரிக்காவில்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில் பூங்காவில் மனித நடமாட்டமில்லாத வெறிச்சோடிய சாலைகளில் ஆங்காங்கே ஓய்வெடுக்க கூடிய சிங்கங்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் கொரோனாவின் தீவிரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு நாடுகளிலும் ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிக அளவில் தான் காணப்படுகிறது. எனவே அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதுடன், … Read more

ஒட்டகச்சிவிங்கியை கொன்று, அதன் இதயத்தை கணவனுக்கு காதலர் தின பரிசாக கொடுத்த மனைவி!

தென்னாப்பிரிக்காவில் உள்ள பெண்மணி ஒருவர் வயதான ஒட்டகச்சிவிங்கி ஒன்றை கொன்று அதன் இதயத்தை தனது கணவருக்கு காதலர் தின பரிசாக கொடுத்து உள்ளதுடன், தனது ஐந்து ஆண்டுகள் நிறைவேறியதாக பெருமையுடன் இணையதள பக்கத்தில் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் வசிக்க கூடிய மெரலைஸ் வான் டெர் மெர்வே எனும் பெண்மணி தனது ஐந்து வயது முதலே வேட்டையாடுவதில் அதிக பிரியம் கொண்டவராம். தற்போது 32 வயது ஆகிறது, இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் வடக்கு லிம்போபா மாகாணத்தில் உள்ள … Read more