#Breaking:மகாத்மா காந்தியின் பேத்திக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை…!

  • மகாத்மா காந்தியின் பேத்தி,ஆஷிஷ் லதா ராம்கோபின் தென்னாப்பிரிக்காவில் ஆறு மில்லியன் ரேண்ட் (ரூ. 3.22 கோடி) மோசடி மற்றும் பிற மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • மேலும்,அவருக்கு டர்பன் நீதிமன்றத்தால் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தியின் பேத்தியும்,தென் ஆப்பிரிக்காவில் வாழும் பிரபல மனித உரிமை ஆர்வலர்கள் எலா காந்தி மற்றும் மறைந்த மேவா ராம்கோபிந்தின் மகளுமான ஆஷிஷ் லதா ராம்கோபின்( வயது 56) ,அகிம்சைக்கான சர்வதேச மையத்தில் பங்கேற்பு மேம்பாட்டு முயற்சியின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தார்.

இதன்காரணமாக,இந்தியாவில் இருந்து,சரக்குகளை, சுங்கவரி இல்லாமல் இறக்குமதி செய்து தருவதாக,மகாராஜ் என்ற தொழிலதிபரிடம் இருந்து இந்திய மதிப்பில் சுமார் 3 கோடியே 33 லட்சம் ரூபாயை ஆஷிஷ் லதா பெற்றுள்ளார்.

ஆனால்,அவ்வாறு ஆஷிஷ் லதா செய்யாததால்,தொழிலதிபர் மகாராஜ், ஆஷிஷ் லதா மீது பண மோசடி புகார் அளித்தார்.

கடந்த 2015 இல் தொடரப்பட்ட இந்த வழக்கில்,ஆஷிஷ் லதாவுக்கு பின்னர் ஜாமின் வழங்கப்பட்டது.

இந்நிலையில்,தற்போது அந்த வழக்குக்கான தீர்ப்பு வெளியாகி,ஆஷிஷ் லதா ராம்கோபின்,தென்னாப்பிரிக்கா நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். மேலும்,அவருக்கு டர்பன் சிறப்பு வணிக குற்றவியல் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல்,மேல்முறையீடு செய்ய முடியாது என்ற நிபந்தனையுடன் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.