முக கவசம் அணிய சொல்லிய நபரை தாக்கிய இந்தியருக்கு 7 வாரம் சிறை தண்டனை!

முக கவசம் அணிய சொல்லிய சிங்கப்பூர் நபரை தாக்கிய இந்தியருக்கு 7 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓரிரு நாடுகளில் மட்டும் தற்போது முகக்கவசம் அணிவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிங்கப்பூரில் கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் … Read more

இன்று இன நல்லிணக்க நாளை அனுசரிக்கும் சிங்கப்பூர்…!

ஒவ்வொரு ஆண்டும்  ஜூலை 21 ஆம் தேதி சிங்கப்பூரில் இன நல்லிணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. 1964 ஆம் ஆண்டில்  ஜூலை 21 ஆம் தேதி  சிங்கப்பூரானது,மலேசியாவின் ஒரு பகுதியாக இருந்தபோது இனக் கலவரம் ஏற்பட்டது.அதில்,22 பேர் உயிரிழந்தனர்.மேலும்,நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அதனை நினைவுகூறும் வகையில்,ஒவ்வொரு ஆண்டும்  ஜூலை 21 ஆம் தேதி ‘இன நல்லிணக்க நாளாக’ அனுசரிக்கப்படுகிறது. சிறுபான்மையினரிடத்தில் சகிப்புத் தன்மை மேற்கொள்வதில் 140 க்கும் மேற்பட்ட நாடுகளில்,சிங்கப்பூர் முதல் இடத்தில் இருப்பதாக 2016 ஆம் ஆண்டு … Read more

உள்நாட்டில் கொரோனா வகைகளில் ‘டெல்டா’ அதிகம் காணப்படுகிறது – சிங்கப்பூர் அதிர்ச்சி தகவல்!

சிங்கப்பூர் மக்கள் டெல்டா வகை உருமாறிய வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சகம் தகவல். சிங்கப்பூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகப்படியானோர் இந்தியாவில் முதன் முதலில் தோன்றிய டெல்டா வகை உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை உருமாறிய வைரஸ் சிங்கப்பூரில் கொரோனா தொற்றுநோய் பாதிப்பை உயர்த்திக் காட்டுகிறது என்றும் சுகாதார அமைச்சகத்தின் குறிப்பிடுகின்றன. இதுவரை உருமாறிய கொரோனா வைரஸில் டெல்டா வகை மோசமானது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. இந்தியாவில் கொரோனா 2 … Read more

ஒரே நிமிடத்தில் கொரோனாவை கண்டுபிடிக்கும் புதிய கருவி..!

சிங்கப்பூரில் பிற நாட்டிலிருந்து வருபர்களுக்கு கொரோனா பரிசோதனையோடு சேர்த்து பிரீதாலைசர் என்ற பரிசோதனையும் செய்து வருகின்றனர். இந்த கருவி மூலம் கொரோனா ஒருவருக்கு இருக்கிறதா இல்லையா என்பதை 1 நிமிடத்தில் தெரிந்து கொள்ளலாம். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் இந்திய பேராசிரியரும் அவரின் 3 மாணவர்களும் இணைந்து மூச்சுக்காற்று வழியாக ஒருவருக்கு கொரோனா இருப்பதை கண்டுபிடிக்கும் புதிய கருவியை கண்டுப்பிடித்து உள்ளனர். மேலும், இந்த கருவியை பயன்படுத்துபவர், இதில் உள்ள சிறிய குழாயை வாயில் வைத்து மூச்சுக்காற்றை ஊத … Read more

முகக்கவசம் அணியாததற்காக சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மீது இனவெறித் தாக்குதல்..! சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங் கண்டனம்..!

சிங்கப்பூரில் முகக்கவசம் அணியாததால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங் வன்மையாக கண்டித்துள்ளார். சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 55 வயதான ஹிந்தோச்சா நிதா விஷ்ணுபாய்,ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.கடந்த வெள்ளிக்கிழமையன்று காலை விஷ்ணுபாய் நடைப்பயிற்சி சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது,ஒரு நபர் அருகில் வந்து விஷ்ணுபாய் தனது முகக்கவசத்தை அணியவில்லை என்று மார்பில் எட்டி உதைத்துள்ளார். இதுகுறித்து,விஷ்ணுபாயின் மகள் பர்வீன் கவுர் திங்களன்று செய்தியாளர்களிடம் … Read more

கொரோனா அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு சிங்கப்பூரில் அனுமதி மறுப்பு!

இந்தியா உட்பட கொரோனா அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரக்கூடிய தொழிலாளர்களுக்கு சிங்கப்பூரில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டேதான் செல்கிறது. இந்த கொரோனாவின் தாக்குதலுக்கு எந்தவொரு நாடுமே தப்பிக்கவில்லை என்றுதான் கூறியாக வேண்டும். இந்நிலையில் சில கொரோனா பாதிப்பு குறைவான நாடுகள் அதிக பாதிப்பு கொண்ட நாடுளில் உள்ள மக்களை தங்கள் நாட்டுக்குள் விடுவதற்கும் அஞ்சுகின்றனர். அது போல சிங்கப்பூரிலும் தங்கள் நாட்டுக்குள் வருவதற்கான மற்ற நாட்டை … Read more

இந்தியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- சிங்கப்பூர் அரசு…!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிங்கப்பூர் அரசு,  இந்தியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கடந்த 24 நேரத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதன் காரணமாக,ஹாங்காங்,நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் இந்தியர்கள் தங்கள் நாட்டிற்கு வருவதற்கு தடை விதித்துள்ளது. மேலும்,ரஷ்யாவும் இந்தியர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது சிங்கப்பூரும், இந்தியாவில் இருந்து கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்கு வருபவர்களுக்கு … Read more

சிங்கப்பூர்:மளிகை பொருட்கள் டோர் டெலிவரி செய்யும் ‘கேமல்லோ ரோபோ’…!

சிங்கப்பூரில், சூப்பர் மார்க்கெட்டில் இருந்து மளிகைப் பொருட்களை வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யும் ரோபோ ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரில்,வீடுகளுக்கு பொருள்களை டெலிவரி செய்யும் தேவைகள் அதிகரிப்பதைப் பயன்படுத்தி, கேமல்லோ என்ற இரண்டு ரோபோக்களை OTSAW என்ற தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது. முதற்கட்ட சோதனையாக,சுமார் 700 வீடுகளுக்கு கேமல்லோ ரோபோக்கள் மூலம் மளிகைப் பொருட்கள் டெலிவரி செய்யப்படுகின்றன.மேலும் இந்த டெலிவரிக்கென தனியாக ஒரு தொகையை சூப்பர்மார்க்கெட்கள் வசூலிக்கின்றன. அதிகபட்சமாக,20கிலோ வரையிலான எடையை கொண்டு செல்லும் கேமல்லோ ரோபோக்களில் இரண்டு … Read more

இனி அடுத்த மாதத்திலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லலாம்..! ஆனால் இவை கட்டாயம்..!

சிங்கப்பூர் அடுத்த மாதத்திலிருந்து COVID-19 டிஜிட்டல் பயண பாஸை ஏற்க உள்ளது. மே மாதத்திலிருந்து கோவிட் -19 சோதனைகள் மற்றும் தடுப்பூசிகளுக்கு டிஜிட்டல் சான்றிதழ்கள் வாங்கியவர்களின் மொபைல் பயண பாஸை சிங்கப்பூர் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும், என்று அதன் விமான  சேவை ஒழுங்குமுறை திங்களன்று தெரிவித்துள்ளது.IATAவின் முயற்சியை ஏற்றுக்கொண்ட  நாடுகளில் சிங்கப்பூர் முதலாவதாகும். விமான நிலையங்களில் புறப்படுவதற்கு முன்னர்,பயணிகள் அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களிலிருந்து, கோவிட் -19 சோதனைகள் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரங்கள் அடங்கிய பயண பாஸை … Read more

கொரோனா எதிரொலியால் ரெஸ்டாரண்டாக மாறிய விமானங்கள்!

கொரோனா எதிரொலியால் ரெஸ்டாரண்டாக மாறிய விமானங்கள். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு  அமல்படுத்தப்பட்ட நிலையில், இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, பொருளாதாரத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விமான சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விமான பணியாளர்கள் பலரும் வேலையை இழந்துள்ளனர். இதனையடுத்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமான சேவையை நிறுத்தியுள்ள … Read more