சிங்கப்பூர்:மளிகை பொருட்கள் டோர் டெலிவரி செய்யும் ‘கேமல்லோ ரோபோ’…!

சிங்கப்பூரில், சூப்பர் மார்க்கெட்டில் இருந்து மளிகைப் பொருட்களை வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யும் ரோபோ ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில்,வீடுகளுக்கு பொருள்களை டெலிவரி செய்யும் தேவைகள் அதிகரிப்பதைப் பயன்படுத்தி, கேமல்லோ என்ற இரண்டு ரோபோக்களை OTSAW என்ற தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது.

முதற்கட்ட சோதனையாக,சுமார் 700 வீடுகளுக்கு கேமல்லோ ரோபோக்கள் மூலம் மளிகைப் பொருட்கள் டெலிவரி செய்யப்படுகின்றன.மேலும் இந்த டெலிவரிக்கென தனியாக ஒரு தொகையை சூப்பர்மார்க்கெட்கள் வசூலிக்கின்றன.

அதிகபட்சமாக,20கிலோ வரையிலான எடையை கொண்டு செல்லும் கேமல்லோ ரோபோக்களில் இரண்டு பெட்டிகள்,கேமரா மற்றும் 3D சென்சார் போன்றவைகள் உள்ளன.

“ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து டெலிவரிகளை மட்டுமே கேமல்லோ செய்கின்றன.ஒவ்வொரு டெலிவரியை முடித்த பின்னர் ரோபோக்கள் புற ஊதா ஒளியைப் பயன்படுத்தி தங்களை கிருமிகளில் இருந்து சுத்தம் செய்துகொள்கின்றன”,என்று OTSAW நிறுவனத்தின் தலைமை நிர்வாகி லிங் டிங் மிங் கூறியுள்ளார்.