இன்று இன நல்லிணக்க நாளை அனுசரிக்கும் சிங்கப்பூர்…!

ஒவ்வொரு ஆண்டும்  ஜூலை 21 ஆம் தேதி சிங்கப்பூரில் இன நல்லிணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.

1964 ஆம் ஆண்டில்  ஜூலை 21 ஆம் தேதி  சிங்கப்பூரானது,மலேசியாவின் ஒரு பகுதியாக இருந்தபோது இனக் கலவரம் ஏற்பட்டது.அதில்,22 பேர் உயிரிழந்தனர்.மேலும்,நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அதனை நினைவுகூறும் வகையில்,ஒவ்வொரு ஆண்டும்  ஜூலை 21 ஆம் தேதி ‘இன நல்லிணக்க நாளாக’ அனுசரிக்கப்படுகிறது.

சிறுபான்மையினரிடத்தில் சகிப்புத் தன்மை மேற்கொள்வதில் 140 க்கும் மேற்பட்ட நாடுகளில்,சிங்கப்பூர் முதல் இடத்தில் இருப்பதாக 2016 ஆம் ஆண்டு ‘கேலப் உலக ஆய்வு’ தெரிவித்தது.அதன்படி,தற்போது உலக நாடுகளிடையே இன நல்லிணக்கத்துக்கு சிறந்த எடுத்துக் காட்டாக சிங்கப்பூர் உள்ளது.

ஒவ்வொரு வருடமும் இன நல்லிணக்க தினத்தை கொண்டாடுகிறோம், ஆனால்,அதனை வலுப்படுத்த தொடர் முயற்சியும்,ஈடுபாடும் தேவை என்று பிரதமர் லீ சியென் லூங் முன்னதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லிணக்கம்:

இன, மத, மொழி, சமய ரீதியாக ஒவ்வொரு சமூகமும் தம்மை பிளவுப்படுத்திக் கொண்டு வாழ்ந்து வருகின்றது.இதனால்,அத்தகைய முரண்பாடுகளை களைந்து ஒற்றுமையாக இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கையே நல்லிணக்கம் என்பதாகும்.