ஒரே நிமிடத்தில் கொரோனாவை கண்டுபிடிக்கும் புதிய கருவி..!

சிங்கப்பூரில் பிற நாட்டிலிருந்து வருபர்களுக்கு கொரோனா பரிசோதனையோடு சேர்த்து பிரீதாலைசர் என்ற பரிசோதனையும் செய்து வருகின்றனர். இந்த கருவி மூலம் கொரோனா ஒருவருக்கு இருக்கிறதா இல்லையா என்பதை 1 நிமிடத்தில் தெரிந்து கொள்ளலாம்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் இந்திய பேராசிரியரும் அவரின் 3 மாணவர்களும் இணைந்து மூச்சுக்காற்று வழியாக ஒருவருக்கு கொரோனா இருப்பதை கண்டுபிடிக்கும் புதிய கருவியை கண்டுப்பிடித்து உள்ளனர். மேலும், இந்த கருவியை பயன்படுத்துபவர், இதில் உள்ள சிறிய குழாயை வாயில் வைத்து மூச்சுக்காற்றை ஊத வேண்டும். பின்னர் மூச்சுக்காற்று உள்ளே சென்று காற்றில் கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை ஒரு நிமிடத்தில் ஸ்பெக்ட்ரோமீட்டர் வழியாக தெரிவித்துவிடும்.

இதை, தயாரித்த இந்திய பேராசிரியரின் பெயர் டி வெங்கி வெங்கடேசன், மற்றும் அவருடைய 3 மாணவர்கள் டாக்டர் ஜியா ஹூனன், டு ஃபாங், வேனே வீ ஆகியோர் ப்ரீதாநிக்ஸ் நிறுவனத்தை தொடங்கி அதில் இந்த கருவியை கண்டுபிடித்துள்ளனர்.  மேலும், இந்த கருவியை வைத்து பரிசோதனை செய்ய சிங்கப்பூர் அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், சிங்கப்பூருக்குள் மற்ற நாட்டிலிருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனையோடு சேர்த்து இந்த பிரீதாலைசர் பரிசோதனையும் செய்து வருகின்றனர்.

மேலும், இப்போது ஆன்டி ரேபிட் டெஸ்ட் கருவியை பயன்படுத்தி கொரோனா பரிசோதனை செய்வதன் மூலம் 30 நிமிடத்தில் முடிவு கிடைக்கும். அதே நேரத்தில், ஆர்டிபிசிஆர் பரிசோதனை மூலமாக கொரோனா பரிசோதனை செய்தால் முடிவு கிடைப்பதற்கு  சில மணிநேரங்கள் ஆகும். ஆனால், இந்த பிரீதாலைசர் கருவி ஒருவரின் மூச்சுக்காற்று வழியாக 1 நிமிடத்திற்குள் கொரோனா பரிசோதனை முடிவை தரும்.