முத்து திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..??

முத்து திரைப்படத்தில் நடிகர் சரத் பாபு நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் ஜெயராம் என்று கூறப்படுகிறது. 

கடந்த 1995ம் ஆண்டு இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் முத்து இந்த படம் மக்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது என்றே கூறலாம். இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் மீனா, சரத் பாபு, ராதா ரவி, கவுண்டமணி, வடிவேலு, போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் சரத் பாபு நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் குறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அதாவது முதன் முதலாக இந்த படத்தில் நடிக்கவிருந்தது நடிகர் ஜெயராம் தான். ஆனால் அப்போது ஜெயராம் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந் ததால் கால்ஷீட் கிடைக்காததால் சரத்பாபு நடித்ததாக கூறப்படுகிறது.