இன்று காஷ்மீர்! நாளை தமிழ்நாடு! காஷ்மீர் பிரிவு குறித்து சீமான் ஆவேசம்!

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்பட்டு, அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா  நிறைவேற்றப்பட்டது. இதற்கு பலர் கண்டனங்களும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலம் விமான நிலையத்தில் பேட்டியளித்த போது, ‘ இன்று காஷ்மீருக்கு ஏற்பட்ட அதே நிலைமைதான் நாளை தமிழகத்திற்கும். காஷ்மீர் பிரிக்கப்பட்டு மசோதா நிறைவேற்றியவுடன் தொழில் மாநாடு நடத்தப்பட உள்ளதையும் சுட்டிக்காட்டி பேசினார். இந்த நடவடிக்கை மூலம், காஷ்மீரில் … Read more

சட்டத்தின் வழியே நிகழ்த்தப்பட்ட சர்வாதிகாரம்-சீமான்

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை உள்துறை அமைச்சர் அமித்ஷா  மாநிலங்களவையில் அறிவித்தார்.அதில்  ஜம்மு-காஷ்மீருக்கு கொடுக்கப்படும்  சிறப்பு அந்தஸ்தை  இந்திய அரசியல் சாசனத்தின் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்வதாக கூறினார்.இது தொடர்பாக பல முக்கிய அரசியல் கட்சித்தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,  காஷ்மீர் மக்களின் உரிமைகளைக் காக்கும் 370, 35ஏ சட்டப்பிரிவுகளை ரத்து செய்திருப்பது ஜனநாயகப் படுகொலை. சட்டத்தின் வழியே நிகழ்த்தப்பட்ட சர்வாதிகாரம். … Read more

நடிகர் சூர்யா புதிய கல்வி கொள்கை பற்றி பேசியது எனக்கு தெரியாது! பிரபல இயக்குனர் அதிரடி!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக புதிய கல்விக் கொள்கை குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுகுறித்து பலர் பாராட்டு தெரிவித்து வந்தாலும், பலர் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் சங்கர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது, அவரிடம் புதிய கல்வி கொள்கை குறித்து நடிகை சூர்யா தெரிவித்த கருத்துக்கு பாரதிய ஜனதா தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தது குறித்து அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். … Read more

சூர்யாவிற்கு ஆதரவாக பேசி மற்ற நடிகர்களை வம்பிழுக்கிறாரா சீமான்!

சமீபத்தில் ஒரு தங்களது அறக்கட்டளை மூலம் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை பற்றி பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது இதற்க்கு பலர் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் தனது ஆதரவை தெரிவித்து கருத்து கூறுகையில், நடிகர் சூர்யா துணிச்சலாக தனது உரையினை பேசியுள்ளார். மேலும், சில நடிகர்கள் படத்தில் மட்டும் பன்ச் வசனம் பேசிவிட்டு நிஜத்தில் பேசாமல் இருந்து விடுகின்றனர். என மற்ற முக்கிய … Read more

மீண்டும் நாடாளுமன்ற தேர்தல்! வேலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு!

இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பாக நடைபெற்று முடிந்து மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார். ஆனால் தமிழ்நாட்டில் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நடைபெற வில்லை. தற்போது மீண்டும் வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் போட்டியிட பிரதான காட்சிகள் வேட்பாளரை அறிவித்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் சார்பாக தீபலட்சுமி என்பவர் போட்டியிட உள்ளார். என்பதை கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் வெற்றி பெறுவதே எனது விருப்பம் : சீமான்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, விஷால் தலைமையில் ஒரு அணியும், பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும் இந்த தேர்தலில் போட்டியிட உள்ளனர். இந்நிலையில், நடிகர் சங்க தேர்தல் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிற நிலையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள், “நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் வெறி பெறுவதே எனது விருப்பம்.” என தெரிவித்துள்ளார்.

7 பேர் விடுதலை :தமிழக அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்ய வேண்டும்-சீமான்

7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், தமிழக அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தண்டனைக்கழிவு வழங்கி 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும். சஞ்சய் தத் வழக்கில் மத்திய அரசு விடுதலையை நிராகரித்த போதும், … Read more

கமல்ஹாசன் பேசியது வரலாற்று உண்மை – சீமான்

இன்று ஈழத் தமிழர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற்றது.இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்கலந்துகொண்டார்.அப்போது சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.விடுதலை புலிகள் அமைப்பிற்கு  மேலும் 5 ஆண்டுகள் தடை நீட்டிக்கப்பட்டது குறித்து சீமான் பேசினார். அவர் கூறுகையில்,இது வழக்கமாக இந்திய அரசாங்கம் செய்வதுதான்.கடந்த முறை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு தேர்தல் நேரத்தில் தான் அவசர அவசரமாக தடைவிதித்தனர்.அதே தான் தற்போது உள்ள பாஜக அரசும் விடுதலை புலிகள் இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகள் தடை செய்துள்ளது.மேலும் … Read more

பெண்மையை போற்றவும் அவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும் குரல் கொடுத்து வருகிறோம்-சீமான்

பெண்மையை போற்றவும் அவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும் குரல் கொடுத்து வருகிறோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில்,சமூக மாற்றம் என்பது ஒவ்வொருவரின் மனதில் இருந்து வரவேண்டும். தொகுதிக்கு என்ன செய்வார் என்று பார்த்துதான் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது .பெண்மையை போற்றவும் அவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும் குரல் கொடுத்து வருகிறோம். அரசு குடியிருப்பில் இருந்து மூத்த தலைவர் நல்லக்கணுவை வெளியேற்றியது தேச … Read more

நாம் தமிழர் கட்சியை குறை கூறுவது திராவிடக் கட்சிகளின் இயலாமை – சீமான்

நாம் தமிழர் கட்சியை குறை கூறுவது திராவிடக் கட்சிகளின் இயலாமை என்று நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், உரிமைகளை பறிகொடுப்பது ஆட்சியல்ல. எதிர்காலத்திற்கு தேவையான உரிமைகளை பாதுகாப்பதே சிறந்த ஆட்சி. திராவிடக் கட்சிகளிடம் இருந்து மக்களைக் காப்பாற்றவே நாம் தமிழர் தனித்து போட்டி. நாம் தமிழர் கட்சியை குறை கூறுவது திராவிடக் கட்சிகளின் இயலாமை என்று நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.