கில் வேண்டாம் ரோஹித் கூட அவரை இறக்குங்க! கிரண் மோர் கருத்து!

rohit sharma shubman gill

இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட தயாராகி வருகிறது. இதில் முதல் டி20 கிரிக்கெட் போட்டி வரும் ஜனவரி 11-ஆம் தேதி பஞ்சாபில் உள்ள மொஹாலி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த டி20 தொடரில்  இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுகிறார். போட்டி தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இரண்டு அணி வீரர்களும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில், இந்த போட்டியில் விளையாடும் … Read more

டி20 உலகக்கோப்பையை ரோஹித் சர்மா வாங்கிக்கொடுப்பார் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்!

krishnamachari srikkanth about rohit sharma

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் அடுத்த வாரம் 11-ஆம் தேதி தொடங்குகிறது.  இந்த தொடருக்கான போட்டியில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என நேற்று பிசிசிஐ அறிவித்து இருந்தது. இந்த நிலையில், ரோஹித் ஷர்மா கண்டிப்பாக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவார் என்றும் கடந்த ஆண்டு ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்ததை இந்த முறை டி-20 போட்டிகளில் விளையாடி கோப்பையை வென்று … Read more

14 மாதங்களுக்கு பிறகு டி20 கேப்டனாக ரோஹித்… இந்திய அணி அறிவிப்பு..!

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் அடுத்த வாரம் 11ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி  இடம்பெற்று மீண்டும் டி20 தொடருக்கு திரும்பியுள்ளனர். 14 மாதங்களுக்கு பிறகு:  இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி நீண்ட நாள்களாக இந்தியாவுக்காக … Read more

ரோஹித், கோலி அனுபவம் அணிக்கு தேவை! T20 உலகக்கோப்பை குறித்து இர்பான் பதான்!

irfan pathan about virat and rohit

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் மாதம் முதல் தொடங்கி நடைபெறவுள்ளது. போட்டிக்கான அட்டவணையும் ஐசிசி சமீபத்தில் வெளியிட்டது. இந்நிலையில், இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் இடம்பெற்றால் நன்றாக இருக்கும் அவர்களுடைய அனுபவம் இந்தியாவுக்கு தேவை என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய இர்பான் பதான் ” விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இந்த மாதிரியான … Read more

டி20 போட்டிகளில் விளையாட தயாராக இருக்கும் ரோஹித் சர்மா, விராட் கோலி?

Virat Kohli and rohit sharma

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை தேர்வு செய்ய தேர்வுக்குழு இன்று கூடுகிறது. இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டி20 போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. டி20 போட்டிகளில் விளையாட தாங்கள் தயாராக இருப்பதாக பிசிசிஐயிடம் ரோஹித் மற்றும் கோலி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட … Read more

ரோஹித் சர்மாவுக்கு பிறகு யார் கேப்டன்? கேள்வி எழுப்பிய இர்பான் பதான்!

Irfan Pathan

2024ல் ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு புதிய கேப்டனை தேர்வு செய்யும் பொறுப்பை தேர்வு குழு கவனத்தில் வைத்து கொள்ளவேண்டும் என இர்பான் பதான் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து பேட்டியில் பேசிய இர்பான் பதான் ” 2024-ல் இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே இரண்டு அல்லது மூன்று கேப்டன்களை அணியில் தேர்வு செய்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் ஒரு வீரருக்கு பிரச்சனை ஏற்பட்டாலும் மீதம் இருக்கும் 2 வீரர்களில் யாராவது ஒருவர் கேப்டனாக … Read more

தவறு நடந்ததில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம்! ரோஹித் ஷர்மா பேச்சு!

rohit sharma speech

செஞ்சூரியன் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கேப்டன் ரோஹித் ஷர்மா முதல் இன்னிங்ஸில் கே.எல்.ராகுலின் அபார சதத்தை பாராட்டியும் தோல்வி பற்றியும் பேசி உள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கே.எல்.ராகுல் அடித்த சதம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்திய அணியில் தொடர்ச்சியாக விக்கெட்கள் விழுந்த சமயத்தில் அவர் மட்டும் நிதானமாக விளையாடினார். அவரிடம் இருந்து நாம் இதனை தான் கற்றுக்கொள்ளவேண்டும். அந்த அளவிற்கு அவர் நிதானமாக விளையாடினார். ஒவ்வொரு தனி … Read more

ரோஹித் சர்மா 5 ரன்னில் அவுட் … ரபாடா புதிய சாதனை..!

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா புதிய சாதனை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் ரோஹித் 14 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். ரோஹித் விக்கெட்டை ரபாடா வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவை அதிக முறை ஆட்டமிழக்கச் செய்த பந்து வீச்சாளர் என்ற பெருமையை ரபாடா பெற்றுள்ளார். இதற்கு முன் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி இந்த … Read more

INDVSSA: அடுத்தடுத்த விக்கெட்கள் இழந்து தடுமாறும் இந்தியா!

Jaiswal

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் கிரிக்கெட் போட்டி செஞ்சுரியனில் இருக்கும் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே சோகமாக அமைந்துள்ளது. ஏனென்றால், இந்திய அணி தொடர்ச்சியாக தங்களுடைய விக்கெட்களை இழந்துள்ளது. அதன்படி, … Read more

இந்த வெற்றி உலகக்கோப்பை தோல்வி வலியை குறைக்குமா என்று தெரியவில்லை-ஹிட்மேன்..!

உலகக்கோப்பைக்கு பிறகு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலும், தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் ரோஹித் சர்மா விளையாடவில்லை. இதைத்தொடர்ந்து, ரோஹித் சர்மா தலைமையில்  இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ரோஹித், “உலகக்கோப்பையில் நாங்கள் விளையாடிய விதத்தை மறப்பது மிகவும் கடினம், எங்கள் அனைவருக்கும் கஷ்டமாக இருந்தது. முதல் 10 போட்டிகளிலும் சிறப்பாக … Read more