அடுத்த 15 மாதங்களில் மூன்று ஐசிசி கோப்பைகள்… எதிர்பார்ப்பில் கிரிக்கெட் ரசிகர்கள்!

Three ICC Trophies

Three ICC Trophies : அடுத்த 15 மாதங்களில் மூன்று ஐசிசி கோப்பைகள் நடைபெற இருப்பதால் உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தியாவை பொறுத்தவரை தற்போது உள்நாட்டில் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே முடிந்த 4 போட்டிகளில் இந்தியா மூன்று போட்டிகளை வென்றுள்ள நிலையில் இங்கிலாந்து ஒரு போட்டியை கைப்பற்றியுள்ளது. இந்த சூழலில் இந்தியா – இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி போட்டியானது வரும் 7ம் தேதி … Read more

டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் கேப்டன், துணை கேப்டனை அறிவித்தார் ஜெய்ஷா!

jay sha

இந்தாண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையவுள்ளது. அதாவது, நடப்பாண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2024) போட்டிகளை தொடர்ந்து, வரும் ஜூன் மாதம் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பையை வெல்ல ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தவறிய நிலையில், டி20 உலகக்கோப்பையை தட்டி தூக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த முறை டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் ஜூன் மாதம் 1ம் … Read more

உலகக்கோப்பை டி20 அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனா? குழப்பத்தில் ரசிகர்கள்!

rohit sharma

  கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது. அந்த போட்டிக்கு பிறகு கேப்டன் ரோஹித் சர்மா எந்த ஒரு டி20 போட்டிகளிலும் விளையாடாமல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அவர் டி-20 போட்டிகளில் விளையாடாத காரணத்தால் அவருக்கு பதிலாக இந்தியா விளையாடிய டி20 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக ரோஹித் ஷர்மா டி20 … Read more

டி20 உலகக் கோப்பை அட்டவணை: இந்தியா vs பாகிஸ்தான் போட்டி எப்போது தெரியுமா?

t20 world cup 2024

2024ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் உலககோப்பையின் அட்டவணையை ஐசிசி வெளியிட்டது. அதில் ஜூன் 1ல் தொடங்கி ஜூன் 29 வரை நடைபெறவுள்ள இந்த தொடரை அமெரிக்காவும் , மேற்கு இந்திய நாடுகளும் இணைந்து நடத்துகிறது. இந்தியா ,பாகிஸ்தான், ஆஸ்திரேலியா,நடப்பு சாம்பியன் இங்கிலாந்து போன்ற 20 அணிகள் கலந்து கொள்கின்றது .குழு ஆட்டம் ( Group stage ), சூப்பர் 8 சுற்று, நாக் அவுட் சுற்று என மொத்தம் 55 ஆட்டங்கள் நடைபெறும். சென்ற 2010 … Read more

ஜனவரி 8ல் டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணை!

T20 World Cup 2024

2024ம் ஆண்டுக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் இந்த முறை இரண்டு நாடுகளில் அதாவது, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 4 முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் அனைவரது எதிர்பார்ப்பும் தற்போது டி20 உலகக்கோப்பை மீதுதான் உள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், … Read more

இந்த வெற்றி உலகக்கோப்பை தோல்வி வலியை குறைக்குமா என்று தெரியவில்லை-ஹிட்மேன்..!

உலகக்கோப்பைக்கு பிறகு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலும், தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் ரோஹித் சர்மா விளையாடவில்லை. இதைத்தொடர்ந்து, ரோஹித் சர்மா தலைமையில்  இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ரோஹித், “உலகக்கோப்பையில் நாங்கள் விளையாடிய விதத்தை மறப்பது மிகவும் கடினம், எங்கள் அனைவருக்கும் கஷ்டமாக இருந்தது. முதல் 10 போட்டிகளிலும் சிறப்பாக … Read more

டி20 உலகக்கோப்பையில் விளையாடுவது குறித்து ரோஹித் சர்மா சொன்ன பதில்..!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நாளை தொடங்குகிறது. இந்தபோட்டிக்கு  முன்னதாக, இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர் சந்திப்பில் பேசினார். “இந்த தொடரை வெல்வதே எங்கள் நோக்கம், அணி முழுமையாக தயாராகிவிட்டதால் உலகக்கோப்பை இறுதிப்போட்டி தோல்வியில் இருந்து முன்னேறிவிட்டோம். இங்குள்ள சூழ்நிலைகள் பந்து வீச்சாளர்களுக்கு உதவுகின்றன. ஐந்து நாட்கள் இங்கு பேட்டிங் செய்வது எளிதல்ல. இதில் எங்களுக்கு அனுபவம் உள்ளது. போட்டி தொடரும் போது, ​​எங்களுக்கு சவால்கள் … Read more

சொந்த அணிக்கு துரோகம்.. டி20 உலகக்கோப்பையில் வேறு அணிக்கு பயிற்சியாளராக பொல்லார்ட்..!

உலகெங்கிலும் உள்ள அனைத்து கிரிக்கெட் அணிகளும் இப்போது அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை மட்டுமே எதிர்பார்த்து இருக்கிறார்கள். டி20 உலகக்கோப்பை நடைபெற இன்னும் 6 மாதங்கள் குறைவாக உள்ளது.  2024 டி20 உலகக் கோப்பை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் தொடங்கப் போகிறது. இந்நிலையில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு மேற்கிந்திய தீவுகளின் கீரன் பொல்லார்டை ஆலோசகர் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 2024 டி20 உலகக் கோப்பை வரை ஆல்ரவுண்டருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. … Read more

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு ரோஹித் கேப்டனா? ஜெய் ஷா விளக்கம்..!

2024 டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. டி20 உலகக் கோப்பைக்கான ஆயத்தப் பணிகளை இந்திய அணியும் தொடங்கியுள்ளது.  இந்தியா சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து டி20 போட்டிகளில் விளையாடியது. இப்போது அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதுஒருபுறம் இருக்க டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு கேப்டன் யார் என்பது மிகப்பெரிய கேள்வியாக  … Read more