அடுத்த 15 மாதங்களில் மூன்று ஐசிசி கோப்பைகள்… எதிர்பார்ப்பில் கிரிக்கெட் ரசிகர்கள்!

Three ICC Trophies : அடுத்த 15 மாதங்களில் மூன்று ஐசிசி கோப்பைகள் நடைபெற இருப்பதால் உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்தியாவை பொறுத்தவரை தற்போது உள்நாட்டில் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே முடிந்த 4 போட்டிகளில் இந்தியா மூன்று போட்டிகளை வென்றுள்ள நிலையில் இங்கிலாந்து ஒரு போட்டியை கைப்பற்றியுள்ளது. இந்த சூழலில் இந்தியா – இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி போட்டியானது வரும் 7ம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது.

Read More – IPL 2024 : ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளை கொண்ட அணி எது தெரியுமா ..?

இது முடிந்ததும் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் 2024 தொடர் இம்மாதம் 22ம் தேதி சென்னை – பெங்களூரு போட்டியுடன் கோலாகலமாக தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், அடுத்த 15 மாதங்களில் மூன்று ஐசிசி கோப்பைகள் நடைபெற இருப்பதால், உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக அமையவுள்ளது.

Read More – ஜாம்பவான் கர்ட்னி வால்ஷின் 23 வருட சாதனையை முறியடித்த நாதன் லியான்..!

மூன்று ஐசிசி கோப்பைகள் இருப்பதால் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஒரு அதிரடியான காலகட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். அதன்படி, வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஐசிசி T20 உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது. இதில் ஜூன் 5ம் தேதி நியூயார்க்கில் அயர்லாந்தை இந்தியா எதிர்கொள்கிறது.

Read More – WPL 2024 : ஸ்மிருதியின் போராட்டம் வீண் ..! பெங்களூரு அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது டெல்லி ..!

ஐசிசி T20 உலகக் கோப்பை தொடர் ஜூன் மாதம் முழுவதும் நடைபெற்று நிறைவு பெறும் நிலையில், அதைத் தொடர்ந்து பிப்ரவரி 2025 இல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியும், இதேபோல் ஜூன் 2025-இல் ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியும் நடைபெற உள்ளது. எனவே, ஐசிசியின் 3 முக்கிய கோப்பைகளை யார் தட்டி செல்ல போறாங்க என பார்ப்பதற்கு உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இதனால் அடுத்த 15 மாதங்களில் கிரிக்கெட் போட்டிகளுக்கு பஞ்சமும் இருக்காது, ரசிகர்களுக்கு ஓய்வும் இருக்காது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment