கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

கால்பந்து வீராங்கனை பிரியாவின் உடலை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள், நண்பர்கள் போராட்டம். சென்னையில் கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை பிரியா (17) ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு ஏற்பட்ட சிக்கலால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மாணவி பிரியாவின் கால் அகற்றப்பட்டது. கால் அகற்றப்பட்ட்ட நிலையில், பிரியாவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு இன்று … Read more

தவறான சிகிச்சை! திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன் – ஈபிஎஸ்

இழைக்கப்பட்ட அநீதிக்கு பொறுப்பேற்று பிரியா குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என ஈபிஎஸ் ட்வீட். வீராங்கணை பிரியா மரணத்திற்கு காரணமாக இந்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கணை பிரியா மரணத்திற்கு காரணமாக இந்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். இழைக்கப்பட்ட அநீதிக்கு பொறுப்பேற்று இவ்வரசு பிரியா குடும்பத்தினருக்கு ஒரு கோடி … Read more

#BREAKING: வீராங்கனை பிரியா உயிரிழப்பு – போலீஸ் வழக்குப்பதிவு

தவறான சிகிச்சையால் விளையாட்டு வீராங்கனை பிரியா உயிரிழப்பு தொடர்பாக பெரவள்ளூர் போலீஸ் வழக்கு பதிவு. கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு தொடர்பாக பெரவள்ளூர் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. மருத்துவ கவுன்சில் கொடுக்கும் அறிக்கையில் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி ஜவ்வு … Read more

முதலமைச்சரின் நடவடிக்கையால் 128 பேரின் உயிர் காப்பற்றப்பட்டது – அமைச்சர் கொடுத்த திடீர் தகவல்!

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்துக்கு பதில் புதிய கட்டடம் கட்டப்படும் என பேரவையில் அறிவிப்பு. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்ட ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் … Read more

#BREAKING: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீ விபத்து!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவமனையில் இரண்டாவது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதிக புகை … Read more

ரஜீவகாந்தி மருத்துவமனையில் கண்காணிப்பு மையம் – திறந்த வைத்தார் முதலமைச்சர்!

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.364 கோடியில் 47 தீவிர சிகிச்சை படுக்கைகள், அதிநவீன கருவிகளுடன் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.5.34 கோடியில் இருபது 108 வாகனங்களையும் முதல்வர் தொடக்கி வைத்தார். செங்கல்பட்டில் ரூ.60 கோடியில் கட்டப்பட்டுள்ள சர்வதேச யோகா, இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவன கட்டமும் திறக்கப்பட்டது. இதனிடையே, … Read more

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேலும் 3 நோயாளிகள் உயிரிழப்பு!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் காத்திருந்த 3 நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக மற்ற மாவட்டங்களை விட, சென்னையில் பாதிப்பு கூடுதலாக இருக்கிறது. நேற்று மட்டும் அங்கு 7,564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் தினசரி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் … Read more