வளர்த்துவிட்டவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வரும் ரஜினிக்கு தங்கர் பச்சான் வாழ்த்து!

ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நிலையில், வளர்த்துவிட்டவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வரும் ரஜினிகாந்தை வரவேற்கிறேன் என திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான தங்கர்பச்சான் அவர்கள் கூறியுள்ளார். ஜனவரி மாதத்தில் தான் கட்சி தொடங்கப் போவதாகவும், டிசம்பர் மாதத்தில் இது குறித்த திகதி வெளியிடப்படும் எனவும் ரஜினி நேற்று தெரிவித்திருந்த நிலையில் அவரது ஆதரவாளர்களும் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். இந்நிலையில் ரஜினியின் அரசியல் குறித்து பல்வேறு தலைவர்களும் அரசியல் பிரமுகர்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் திரைப்பட இயக்குனர், … Read more

ரஜினி விரும்பவில்லை என்றாலும் மக்கள் அவர் வேட்பாளராக இருப்பார் என எதிர்பார்க்கிறார்கள் – தமிழருவி மணியன்!

ரஜினி கட்சி துவங்கிய பின் முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டேன் என உறுதியாக இருந்தாலும், மக்கள் அவரை வேட்பாளராக இருப்பார் என தான் எதிர்பார்க்கிறார்கள் என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். பல காலங்களாக ரஜினியின் ரசிகர்களும் ஆதரவாளர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்தி ஒன்றினை நேற்று தனது டுவிட்டர் வழியாக ரஜினி தெரிவித்தார். அதாவது ஜனவரியில் அவர் கட்சி துவங்க உள்ளதாகவும் அது குறித்த திகதியை டிசம்பர் மாதத்தின் இறுதியில் அறிவிப்பேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் … Read more

ஜனவரியில் கட்சி துவங்கவுள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் அறிவிப்பு!

ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி துவங்கவுள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளராக ரா.அர்ஜுனமூர்த்தி அவர்களையும், மேற்பார்வையாளராக திரு.தமிழருவி மணியன் அவர்களையும் நியமித்துள்ளார். ரஜினிகாந்த் அவர்கள் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாக இன்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு கொடுத்திருந்தார். இதனால் அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்களின் பேராதரவுடன் நேர்மையான நாணயமான ஆன்மீக அரசியல் உருவாக்குவது நிச்சயம் என ரஜினி கூறியுள்ளார். இந்நிலையில், ஜனவரியில் தான் ஆரம்பிக்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ரா.அர்ஜுனமூர்த்தி … Read more

வருவார்! வருவார்! என்று பல பத்து ஆண்டுகளாக காத்துக் கிடந்தோம்! இப்பொது துணிந்து முடிவு எடுத்துள்ளார் ரஜினி – திருமாவளவன்

வருவார், வருவார் என்று பல பத்து ஆண்டுகளாக காத்துக் கிடந்த நிலையில், இப்போது துணிந்து ஒரு முடிவு எடுத்துள்ளார் ரஜினிகாந்த் என திருமாவளவன் கூறியுள்ளார்.  நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் புதிய கட்சி தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு பல்வேறு அரசியல் பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் இதுகுறித்து கூறுகையில், வருவார், வருவார் என்று பல பத்து ஆண்டுகளாக காத்துக் கிடந்த நிலையில், இப்போது … Read more

ரஜினி லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா வந்தாலும் தேர்தலில் தான் தெரியும் – கனிமொழி..!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரச்சார முன்னோட்டமாக திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்டது. இந்த பிரச்சாரப் பயணத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் கடந்த நவம்பர் 20ம் தேதி தொடங்கினார்.இவரை தொடர்ந்து, திமுக மகளிரணி செயலாளரும் எம்.பியுமான கனிமொழி கடந்த ஞாயிற்றுகிழமை பிரச்சாரப் பயணத்தை எடப்பாடி தொகுதியில் தொடங்கினார். இந்நிலையில், சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களிடம் … Read more

#Breaking: சூழ்நிலையை பொறுத்து ரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு- ஓ.பன்னீர்செல்வம்!

சூழ்நிலையை பொறுத்து நடிகர் ரஜினிகாந்தின் கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்புள்ளதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடியான பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், ஜனவரியில் கட்சி தொடங்குவதாகவும், அதுதொடர்பான விபரங்கள் டிசம்பர் 31 ஆம் தேதி வெளியாகும் என அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இதற்கு பல அரசியல் தலைவர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், துணை முதல்வர் மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ரஜினிகாந்த் … Read more

இப்போ இல்லைனா எப்போவும் இல்லை – இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் ஹாஸ்டேக்!

ரஜினி அரசியல் வருவதாக அறிவித்துள்ள நிலையில், இப்போ இல்லைனா எப்போவும் இல்லை இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் ரஜினியின் ஹாஸ்டேக். ரஜினி அரசியலுக்கு வருவார் என அவரது ஆதரவாளர்களும், ரசிகர்களும் வெகு காலமாக காத்திருந்தனர். இந்நிலையில், இன்று ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் தான் ஜனவரி மாதத்தில் அரசியலுக்கு வரப்போவதாகவும், அதற்கான திகதியை டிசம்பர் மாதம் அறிவிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை என ஹாஸ்டேக்குகள் … Read more

ஆன்மிகம் என்பது குழப்பமான விஷயம்! முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும்! – கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் ஆன்மீகம் எடுபடும், ஆனால், அரசியல் ஆன்மீகம் எடுபடாது என்றும், ஆன்மீகம் என்பது குழப்பமான விஷயம், முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும். ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக, அரசியல் வட்டாரத்திலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும், கடந்த சில நாட்களாகவே சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம், நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, … Read more

ரஜினி – சசிகலா இடையேதான் போட்டி – சுப்பிரமணியன் சுவாமியின் கணிப்பு.!

தமிழகத்தில்மற்றும் சசிகலாவுக்கு இடையேதான் போட்டி நிலவும் என்று சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜனவரி மாதத்தில் கட்சி தொடங்குவதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ல் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, கொடுத்த வாக்கில் இருந்து நான் என்றைக்கும் மாற மாட்டேன். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. அரசியல் மாற்றம் தேவை, கட்டாயம் … Read more

அரசியல் ஆட்டம் ஆரம்பம் – ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த மு.க.அழகிரி.!

ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த நடிகர் ரஜினிக்கு, மு.க.அழகிரி தொலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார், எப்போது கட்சி தொடங்குவர் என்ற பல கேள்விகளுக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அதாவது, சமீபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் உங்க கூட இருப்போம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் என்றும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் என்னுடைய முடிவை … Read more