தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரச்சார முன்னோட்டமாக திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்டது.
இந்த பிரச்சாரப் பயணத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் கடந்த நவம்பர் 20ம் தேதி தொடங்கினார்.இவரை தொடர்ந்து, திமுக மகளிரணி செயலாளரும் எம்.பியுமான கனிமொழி கடந்த ஞாயிற்றுகிழமை பிரச்சாரப் பயணத்தை எடப்பாடி தொகுதியில் தொடங்கினார்.
இந்நிலையில், சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி, ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதால், திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ரஜினி லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா வந்தாலும் தேர்தலில் தான் தெரியும், ரஜினியின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்தார்.