அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முதலமைச்சரிடம் கோரிக்கை.!

விருதுநகர் மாவட்ட குடிநீர் பிரச்சனையை தீர்க்க தாமிரபரணி, அர்ச்சனா, குண்டாறு நதிகளை இணைக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார். பின்னர் இதனிடையே விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி. இது ரூ.380 கோடியில் 22 ஏக்கரில் புதிய மருத்துவக் கல்லூரி 18 மாதங்களில் விருதுநகரில் அமைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் கருத்தை வரவேற்கிறேன் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் வன்முறையை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், மதக்கலவரத்தை தூண்டுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்ற ரஜினியின் கருத்தை வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்- ஆளுநரிடம் திமுக புகார்

இந்து பயங்கரவாதம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய நிலையில் ,சட்டவிரோதி ஆகிவரும் அமைச்சரை ஆளுநர் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ஆளுநரிடம் திமுக புகார் மனு அளித்துள்ளது.  இஸ்லாமிய தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் சில இயக்கங்கள் தொடர்ந்து அரசியல் செய்தால் இந்து பயங்கரவாதம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் … Read more

” திமுக கூட்டணி மங்கி போன கூட்டணி ” ராஜேந்திர பாலாஜி கிண்டல் ….!!

தமிழகத்தில் அதிமுக திமுக போட்டி போட்டுக் கொண்டு கூட்டணி அமைத்து வருகின்றது. திமுக கூட்டணி மங்கி போன கூட்டணி என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டலடித்துள்ளார்.   பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக போட்டி போட்டுக் கொண்டு கூட்டணி அமைத்து வருகின்றனர். மேலும் மாறி மாறி அவரவர்கள் கூட்டணி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இந்நிலையில் மறைந்த  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா_வின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிவகாசியில் நடந்தது. சிவகாசியில் … Read more