இந்தியா அண்டை நாடுகளிடமிருந்தும் இதையே எதிர்பார்கிறது -ராஜ்நாத் சிங்

 இந்தியா அண்டை நாடுகளிடமிருந்தும் இதையே எதிர்பார்கிறது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அம்பாலா விமானப்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 5 ரபேல் விமானங்கள் முறைப்படி விமானப்படையில் இணைக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிளாரன்ஸ் பார்லி மற்றும் முப்படை தளபதிகள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில்,இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடுபவர்களுக்கு, ரபேல் போர் விமானம் சேர்க்கப்பட்டது வலுவான எச்சரிக்கை. இந்திய எல்லையில் தற்போது நிலவும் … Read more

ரபேல் வருகை..மேலும் ஒரு பெருமை மோடி புகழாரம்.!

கடந்த 2016-ம் ஆண்டு  இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க  ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த விமானங்களை பிரான்சின் டசால்ட் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த 36 விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்கள், முதல் 10 விமானங்களின் தயாரிப்பு பணி முடிவடைந்ததால் முதற்கட்டமாக 5 விமானங்கள் பிரான்சில் இருந்து ஹரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்திற்கு இன்று வந்தடைந்தது. அங்கு ரபேல் போர் விமானங்களுக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. … Read more

ரபேல் விமானங்கள் வருகை.. 4 கிராமங்களுக்கு 144 தடை.!

 இன்று பிற்பகல் ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலாவில் விமானப்படை தளத்தில் 5 ரபேல் விமானங்கள் நம் படையுடன் இணைய உள்ளன. இந்நிலையில் இதனை முன்னிட்டு விமானப்படை தளத்தை சுற்றியுள்ள நான்கு கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானம் தரையிறங்கும்போது வீடுகளின் மாடியில் இருந்து புகைப்படம் எடுக்கவும், அந்தப் பகுதியில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது, உத்தரவுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு தேசிய முக்கியத்துவம் என்பதால் … Read more

ரஃபேல் போர் விமானத்தை ரூ.1600 கோடிக்கு வாங்க முடிவு செய்தது ஏன்?

ரஃபேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் ரபேல் போர் விமான கொள்முதல் பற்றி பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் போர் விமானம் ஒன்றின் விலை 526 கோடி ரூபாயாக நிர்ணயிக்குப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறினார். ஆனால், பிரதமர் மோடி பிரான்ஸ் சென்று வந்த பிறகு, ரஃபேல் போர் விமானம் ஒன்றின் விலை ஆயிரத்து 600 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டதாக குற்றம்சாட்டினார். இந்த விலைக்கு … Read more