இந்தியா அண்டை நாடுகளிடமிருந்தும் இதையே எதிர்பார்கிறது -ராஜ்நாத் சிங்

 இந்தியா அண்டை நாடுகளிடமிருந்தும் இதையே எதிர்பார்கிறது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அம்பாலா விமானப்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 5 ரபேல் விமானங்கள் முறைப்படி விமானப்படையில் இணைக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிளாரன்ஸ் பார்லி மற்றும் முப்படை தளபதிகள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில்,இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடுபவர்களுக்கு, ரபேல் போர் விமானம் சேர்க்கப்பட்டது வலுவான எச்சரிக்கை. இந்திய எல்லையில் தற்போது நிலவும் பாதுகாப்பு சூழலில், ரபேல் விமான படையில் சேர்க்கப்பட்டது மிக முக்கியமான நடவடிக்கை ஆகும்.

இந்திய பாதுகாப்பு வலிமையின் நோக்கம் அமைதிக்கான விருப்பம் ஆகும். இந்தியா அண்டை நாடுகளிடமிருந்தும் இதையே எதிர்பார்கிறது.இந்திய பிராந்திய எல்லை மட்டுமல்ல, இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும் அமைதியை காக்க கடமைப்பட்டுள்ளோம். கால மாற்றத்திற்கு ஏற்ப நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை புரிந்துகொண்டுள்ளோம் என்று பேசினார்.