பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களுக்கு நற்செய்தி – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

பொதுப்பணித் துறையில் ஒப்பந்ததாரர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதுமானது என அறிவிப்பு. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பொதுப்பணித் துறையில் ஒப்பந்ததாரர்கள் ஆண்டுக்கு ஒருமுறை பதிவை புதுப்பித்து வந்த நிலையில், இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பு ஒப்பந்ததாரர்கள் ரூ.10 கோடிக்கும் மேலான ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் இரண்டாம் வகுப்பு ஒப்பந்தரராகள் ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடி வரை ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் … Read more

“பொதுப்பணித்துறையில் இவைகளுக்கு தனித்தனியே ஒப்பந்தம் விடப்படும்”- தமிழக அரசு அரசாணை!

பொதுப்பணித்துறையின் கட்டுமான பணிகளில் சிவில் மற்றும் மின் பணிகளுக்கு தனித்தனியே ஒப்பந்தம் விடப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் 27.08.2021 அன்று சட்டப் பேரவையின் அவையில் பொதுப்பணித் துறைக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது,பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளில் ரூ.15.00 கோடி மதிப்பீட்டிற்குள்ள சிவில் மற்றும் மின்சாரப் பணிகள் தனித்தனியாக ஒப்பந்தம் (தனி ஒப்பந்தம்) மேற்கொள்ளப்படும் என்ற ​அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில்,பொதுப்பணித்துறையில் சிவில் மற்றும் மின்சாரப் … Read more

பொதுப்பணித்துறையில் டெண்டர் ஒப்புதல்;அதிகார வரம்பு உயர்த்தி உத்தரவு – தமிழக அரசு அரசாணை!

சென்னை:பொதுப்பணித்துறையில் டெண்டர் ஒப்புதல் வழங்க அதிகாரிகளுக்கு அதிகார வரம்பு உயர்த்தி தமிழக அரசு அரசாணை. தமிழக சட்டமன்றத்தில் கடந்த  27.08.2021 அன்று நடந்த பொதுப்பணித் துறை மானியக்கோரிக்கை தொடர்பான விவாதத்தின்போது,தொழில்நுட்ப ஒப்புதல் மற்றும் ஒப்பந்தப்புள்ளி ஒப்புதலுக்கான தலைமைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர்களுக்கு அதிகார வரம்பு உயர்த்தப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். இந்நிலையில்,பொதுப்பணித்துறையில் தொழில்நுட்ப ஒப்புதல் மற்றும் ஒப்பந்தப்புள்ளி ஒப்புதல் வழங்க தலைமைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர்களுக்கு அதிகார வரம்பு … Read more

#BREAKING : பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் நல்லதல்ல – முதல்வர் மு.க.ஸ்டாலின்

பொதுத்துறை நிறுவன சொத்துக்களை தனியார்மயமாக்குவதை கைவிடக்கோரி மத்திய அரசுக்கு  எழுத்தவுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  பொதுத்துறை நிறுவன சொத்துக்களை இந்திய அரசு தனியாருக்கு விற்பது தொடர்பாக, சட்டப்பேரவையில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த கவன ஈர்ப்பு தீர்மனத்தின் மீது கருத்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டு மக்களின் சொத்து. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது தேச நலனுக்கு எதிரானது.  பொருளாதார நலனுக்கும், சிறு,குறு தொழிலுக்கும் ஆணிவேராக … Read more

BREAKING: பொதுத்துறை நிறுவனங்களிலும் தனியார் பங்களிப்புக்கு அனுமதி.!

ஒரே துறையில் 4-க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தால் ஒன்றிணைக்கப்படும் என மத்திய நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்க பொத்துறை நிறுவனங்களுக்காக புதிய கொள்கைகள் வகுக்கப்படும். அனைத்து துறைகளிலும் தனியாரின் பங்களிப்புக்கு வழிவகை செய்யப்படும். குறிப்பிட்ட சில துறைகளிலும் தனியார் பங்களிப்புடன் குறைந்தது ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் பங்கீடும் இருக்கும்.  ஒரே துறையில் 4-க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தால் ஒன்றிணைக்கப்படும் என்றும் தனியார் முதலீடு தொடர்பான விரிவான கொள்கைகள் விரைவில் … Read more