காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் வர வேண்டும் – பிரியங்கா காந்தி

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் வர விரும்புவதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்  இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்ததன் எதிரொலியாக காங்கிரஸ் தலைவராக பதவி வகித்த ராகுல் காந்தி தனது பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பதவியேற்றார். இதனிடையே காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அவரது பேட்டியில்,காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக காந்தி குடும்பத்தை … Read more

பிரியங்கா காந்தியை இரவு விருந்துக்கு அழைத்துள்ள எம்.பி பாஜக எம்.பி.?

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு நீக்கப்பட்டு, சிஆர்பிஎப் இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது. இசட் பிளஸ் பாதுகாப்பாக வழங்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் வீடு வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை. இதனால், டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள இல்லத்தை பிரியங்கா காந்தி ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும். இல்லையென்றால், அபராதம், வாடகை வசூலிக்கப்படும் என கூறப்பட்டது. ஆகஸ்ட் 1-ஆம் … Read more

‘உ.பி-யில் காங்கிரஸ் தனித்து போட்டியிட தயாராகி வருகிறது!’ – பிரியங்கா காந்தி அதிரடி கருத்து!

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 135 ஆவது வருடம் கடந்த விழாவானது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பேசிய காங்கிரஸ் முக்கிய தலைவர் பிரியங்கா காந்தி பல கருத்துக்களை கூறினார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஆரம்பித்து 135 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனை நாடுமுழுவதும் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்காக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் விழா நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் பிரியங்கா கலந்து கொண்டார். அந்த விழாவில் பிரியங்கா காந்தி … Read more

உத்தரபிரதேசம் சென்ற ராகுல் ,பிரியங்கா தடுத்து நிறுத்தம்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உத்திர பிரதேசத்தில் பல்வேறு இடங்களில்  போராட்டங்கள் நடைபெற்றது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற ராகுல், பிரியங்கா காந்தியை தடுத்து நிறுத்தியது போலீஸ். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இதில் உத்திர பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறி கலவரங்களாகி பொது சொத்துக்கள் சேதம், உயிரிழப்பு என கலவரங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த கலவரம் காரணமாக 24 … Read more

பயப்பட வேண்டியது நாங்கள் இல்லை ,அவர்கள் தான்-பிரியங்கா காந்தி

வாக்குறுதிகளை அளித்துவிட்டு அதனை நிறைவேற்றாதவர்கள்தான் பயப்பட வேண்டும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது.4 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.எனவே ராகுல் காந்திக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி பிரசாரம் செய்து வருகிறார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்துறை அமைச்சகம், குடியுரிமை தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக தங்களுக்கு எந்தவிதமான பதட்டமும் இல்லை .வாக்குறுதிகளை அளித்துவிட்டு … Read more

தனியாக அதிசயத்தை நிகழ்த்த முடியாது…தொண்டர்களிடம் பிரியங்கா காந்தி  பேச்சு…!!

பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்  பிரியங்கா காந்தி  பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் சூழலில் மாநில மற்றும் தேசிய கட்சிகள் தங்களின் தேர்தல் பிரசாரம் மற்றும் கூட்டணி குறித்த வியூகங்கள் , பேச்சுவாரத்தை என தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் புந்தேல்கண்ட்_டில் பகுதியில் கிழக்கு மண்டல உத்தரப்பிரதேச கிழக்கு மண்டல காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தொண்டர்களை சந்தித்தார் . அப்போது தொண்டர்களிடம் பேசிய அவர் , கட்சியை பலப்படுத்துவதற்கு தங்களின் ஒத்துழைப்பு அவசியம் . வெற்றி … Read more

பிரியங்கா காந்தி அழகாக இருக்கின்றார்……பாஜக அமைச்சர் சர்சை பேச்சு…..!!

பிரியங்கா காந்தி மிகவும் அழகாக இருப்பது, காங்கிரஸிற்கு வாக்குகளை சேர்க்காது என, பீகார் மாநில அமைச்சர் வினோத் நாராயண் ஜா, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற இருக்கும்  நாடாளுமன்ற தேர்தலை முன்னெடுக்கும் பணியில் அனைத்து கட்சிகளும் இறங்கியுள்ள.குறிப்பாக மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கெதிராக வலுவான கூட்டணி அமைக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி பொது செயலாளராக … Read more

காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக பிரியங்கா காந்தி…!!

காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற இருக்கும்  நாடாளுமன்ற தேர்தலை முன்னெடுக்கும் பணியில் அனைத்து கட்சிகளும் இறங்கியுள்ள.குறிப்பாக மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கெதிராக வலுவான கூட்டணி அமைக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. அதிலும் அதிக பாராளுமன்ற தொகுதியை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான நிர்வாகிகளை பாரதீய ஜனதா கட்சி நியமனம் செய்துள்ளது. சுமார் 80 பாராளுமன்ற தொகுதிகளை … Read more