காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் காலமானார்…!

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி காலமானார். காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி அவர்கள்,  பல ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று காலை அவரது இல்லத்தில் கிலானியின் உயிர் பிரிந்துள்ளது. இவரது மறைவுக்கு, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி இரங்கல் தெரிவித்துள்ளார். கிலானி தடை செய்யப்பட்ட ஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்பின் உறுப்பினராக இருந்தார். பின் பிரிவினைவாத சார்பு கட்சிகளின் கூட்டமைப்பான தெஹ்ரீக்-ஏ-ஹூரியத் அமைப்பை நிறுவினார். அதனை தொடர்ந்து,  அனைத்துக் … Read more

#Breaking:முன்னாள் மாநிலங்களவை எம்.பி. சந்தன் மித்ரா காலமானார்…!

முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யும்,மூத்த பத்திரிகையாளருமான சந்தன் மித்ரா நள்ளிரவு காலமானார். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும்,மூத்த  பத்திரிகையாளருமான சந்தன் மித்ரா புதன்கிழமை(நேற்று) நள்ளிரவு காலமானார்.அவருக்கு வயது 66.இதனை, அவரது மகன் குஷன் மித்ரா செய்தி நிறுவனமான ஏஎன்ஐக்கு தெரிவித்துள்ளார். Former Rajya Sabha MP and senior journalist Chandan Mitra passed away late last night in Delhi, confirms his son Kushan Mitra. (File photo) pic.twitter.com/MB7wlwL9Hi — ANI (@ANI) September … Read more

பிரபல டிவி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் காலமானார்…!

பிரபல டிவி தொகுப்பாளரான ஆனந்த கண்ணன் நேற்றிரவு காலமானார். பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராக அறிமுகமாகி,அதன்பின்னர் மிகவும் பிரபலமாகிய ஆனந்த கண்ணன்,சிந்துபாத் தொடரிலும் ஹீரோவாக நடித்தார்.இதனால்,அவருக்கு என்று ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. இதனையடுத்து,அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில்,ஆனந்த் கண்ணன் புற்றுநோய் காரணமாக நேற்று இரவு காலமானார்.அவரது மறைவு அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த ஆனந்த கண்ணன் அவர்களின் குடும்பத்தினருக்கு இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட திரைத்துறையை … Read more

காந்தியவாதியும்,முன்னாள் கர்நாடக எம்.பி.யுமான மேட்கவுடா காலமானார்..!

காந்தியவாதியும் முன்னாள் கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.மடேகவுடா நேற்று காலமானார். காந்தியவாதியும் முன்னாள் கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினருமான(எம்.பி) ஜி.மேட் கவுடா,வயது மூப்பின் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மண்டியா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.அவருக்கு வயது 93, இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் அவருக்கு உள்ளனர். இதனையடுத்து,அவரது மறைவிற்கு கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியுரப்பா, தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:”மூத்த விவசாயி, … Read more

முன்னாள் அமைச்சர் அய்யாறு வாண்டையார் காலமானார்…!

முன்னாள் அதிமுக அமைச்சர் அய்யாறு வாண்டையார்  உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் அய்யாறு வாண்டையார்,கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.தஞ்சையில் உள்ள பூண்டி கிராமத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில்  திருவையாறு அதிமுக எம்எல்ஏ வாண்டையார் அவர்கள் அறநிலையத்துறை … Read more

38 மனைவிகள் மற்றும் 89 குழந்தைகள் கொண்ட ‘உலகின் மிகப்பெரிய குடும்பத்தின்’ தலைவர் மரணம்…!

உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவராக கருதப்படும்,மிசோரத்தை சேர்ந்த ‘சியோனா சானா’, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக இன்று காலமானார். உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவராக கருதப்படும் மிசோரத்தை சேர்ந்த சியோனா சனாவுக்கு 38 மனைவிகளும் 89 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில்,சியோனா சானா,நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக மாநில தலைநகர் ஐஸ்வாலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால்,சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.சியோனா சனாவுக்கு 76 வயது ஆகிறது. அவரது மறைவிற்கு … Read more

#BigBreaking:முன்னாள் மத்திய அமைச்சரும்,பாஜக தலைவருமான சாமன் லால் குப்தா காலமானார்

முன்னாள் மத்திய அமைச்சரும்,பிஜேபியின் மூத்த தலைவருமான சாமன் லால் குப்தா உடல்நலக்குறைவால் காலமானார். பாஜகவின் மூத்த தலைவரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான சாமன் லால் குப்தா,மே 5 ஆம் தேதியன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக ஜம்முவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து,லால் குப்தா கொரோனாவிலிருந்து குணமடைந்து  ஞாயிற்றுக்கிழமை  மருத்துவமனையில் இருந்து காந்தி நகரில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பினார். இந்நிலையில்,திடீரென்று உடல்நிலை மோசமாகி பாஜகவின் மூத்த … Read more

#Breaking: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.பாலமுருகன் காலமானார்..!

முன்னாள் துணை முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.பாலமுருகன் பெரியகுளத்தில் இன்று காலமானார். முன்னாள் துணை முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.பாலமுருகன் புற்றுநோயால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து,சிகிச்சை பெற்று ஓ.பாலமுருகன் நேற்று இரவு பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார்.இந்நிலையில், திடீரென்று இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார். இதனைத்தொடர்ந்து,ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தம்பியின் குடும்பத்தினருக்கு … Read more

#BigBreaking: நடிகர் விவேக் காலமானார்

சென்னை: மாரடைப்பு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று காலமானார்.அவருக்கு வயது 59. விவேக் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீர் என மயங்கி விழுந்ததால், தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. முதலில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதனைத்தொடர்ந்து  இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாட்டை சரி செய்ய ‘எக்மோ’ கருவியும் பொருத்தப்பட்டு சிகிச்சையானது அளிக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் … Read more

முதல் பெண் விங் கமாண்டர் விஜயலட்சுமி காலமானர்

இந்திய விமானப்படையில் முதல் பெண் அதிகாரியான விஜயலட்சுமி (வயது96) காலமானார். 1955 ஆம் ஆண்டில் இந்திய விமானப்படையில் முதல் விங் கமாண்டராக களமிரங்கியவர். விங் காமாண்டர் விஜயலட்சுமி இந்தோ-சீனா, பாகிஸ்தான் போர்களில் பெரும் பங்காற்றியவர்.இந்நிலையில் அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.