ஏடிபி பட்டத்தை 6வது முறையாக தட்டி சென்ற ஜோகோவிச்.! ரோஜர் பெடரரின் சாதனை சமன் செய்து அசத்தல்.!

ஏடிபி பைனல்ஸ் தொடரின் பட்டத்தை ஆறாவது முறையாக வென்று  ஜோகோவிச், ரோஜர் ஃபெடெரரின் சாதனையை சமன் செய்துள்ளார்.   தனது கடினமான ஓராண்டிற்கு பிறகு இந்த ஏடிபி பைனல்ஸ் தொடரின் பட்டத்தை ஆறாவது முறையாக வெல்வது மனதுக்கு திருப்தியாக உள்ளது என்று போட்டிக்கு பின் அளித்த பேட்டியில் நோவாக் ஜோகோவிச் தெரிவித்தார். 21 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சேர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோகோவிச், ஏடிபி பைனல்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் நார்வே நாட்டின் கேஸ்பர் ரூட் க்கு எதிராக … Read more

கொரோனா தடுப்பூசியால் கிராண்ட்ஸ்லாம் வாய்ப்புகளை இழந்த நோவக் ஜோகோவிச்

நோவக் ஜோகோவிச், கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் தான் விளையாடாமல் போனதற்காக வருத்தப்படப்போவதில்லை என்று கூறியுள்ளார். செர்பியாவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச், கொரோனா தடுப்பூசி போடாத காரணத்தால் 2022 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனில் கலந்து கொள்ள முடியாமல் நாடு திரும்பினார். முதலில் ஜோகோவிச்சுக்கு, ஆஸ்திரேலியாவில் நுழைய விசா வழங்கப்பட்டாலும் மெல்போனில் நிலவிய கடுமையான சட்டத்தால் அவருக்கு விசா மறுக்கப்பட்டது. இந்த நிலையில் ஜோகோவிச், 2023 ஆம் ஆண்டின் ஆஸ்திரேலியா ஓபனில் கலந்து கொள்வதற்கான  செய்தி வரும் என்று எதிர்பார்த்துக் … Read more

ரஷ்ய வீரரிடம் தோற்ற உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டித் தொடரில் உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் ரஷ்ய வீரரிடம் தோல்வியடைந்துள்ளார். அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் ரஷ்யாவின் டேனியல் மெட்வெதேவுடன் மோதி உள்ளார். இந்தப் போட்டியில் செர்பிய வீரர் நோவாக் வரலாற்று சாதனை படைப்பார் என அவரது ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்துள்ளனர். போட்டி தொடங்கியது … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டிக்கு முன்னேறிய நோவாக் ஜோகோவிச்!

இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 4ஆவது முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்ற நோவாக் ஜோகோவிச் தீவிரம். நியூயார்க்கில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டி நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) மற்றும் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மனி) ஆகியோர் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஜோகோவிச் 4-6, 6-2, 6-4,4-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். … Read more

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பு – ஜோகோவிச் உறுதி…!

டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதாக உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் உறுதிப்படுத்தியுள்ளார். உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதாக தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். ஜோகோவிச் கடந்த வார இறுதியில் கோல்டன் ஸ்லாம் தகுதிக்கான மூன்றாவது கட்டத்தை நிறைவு செய்தார்.2021 ஆம் ஆண்டில் தனது ஆஸ்திரேலிய ஓபன்,பிரஞ்சு ஓபன் மற்றும் ரோலண்ட் கரோஸ் வெற்றிகளில் விம்பிள்டன் பட்டத்தை வென்றார். பல ஆண்டுகளாக,நான்கு ஸ்லாம்களையும் ஒரு ஒலிம்பிக் தங்கத்தையும் ஒரே … Read more

ரபேல் நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு ஜோகோவிச் முன்னேற்றம்..!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடாலை வீழ்த்தி ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம். தற்போது நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி போட்டியில் நோவக் ஜோகோவிச்– ரபேல் நடால் மோதினர். முதல் சுற்றில் 6-3 என்ற செட் கணக்கில் நடால் முன்னிலை இருந்தார். 2-வது சுற்றில் ஜோகோவிச் 6-3 என்ற கணக்கிலும், 3-வது சுற்றை 7-6 என்ற கணக்கிலும் வென்றார். பின்னர், நடைபெற்ற நான்காவது சுற்றில் 6-2 என்ற கணக்கில் … Read more

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 18 ஆம் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ஜோக்கோவிச்!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் 7-5 6-2 6-2 என்ற நேர் செட்களில் ஜோக்கோவிச் வெற்றிபெற்று, தனது 9வது ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர், பெல்பர்ன் நகரில் நடைபெற்றது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான அரை இறுதி போட்டி, கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ரஷ்யாவை சேர்ந்த டானில் மெத்வெடேவ் மற்றும் கிரீஸ் கிரீஸை சேர்ந்த ஸ்டெபனோஸ் ஸிட்சிபாஸ் ஆகியோர் மோதினார்கள். இந்த போட்டியில் மெத்வெடேவ் … Read more

ஆஸ்திரேலிய ஓபன்: இறுதிப்போட்டிக்கு நுழைந்த டானில் மெத்வெடேவ்!

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ரஷ்யாவை சேர்ந்த டானில் மெத்வெடேவ், இறுதிப்போட்டிக்கு நுழைந்தார். ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், பெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான அரை இறுதிப் போட்டி, இன்று நடைபெற்றது. இதில் ரஷ்யாவை சேர்ந்த டானில் மெத்வெடேவ் மற்றும் கிரீஸ் கிரீஸை சேர்ந்த ஸ்டெபனோஸ் ஸிட்சிபாஸ் ஆகியோர் மோதினார்கள். இந்த போட்டி, மிக விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த நிலையில், 6-4, 6-2, 7-5 என்ற … Read more

பிரெஞ்ச் ஓபன்: அனல் பறக்கும் ஆட்டத்தில் நடால்-நோவக்! இன்று நேருக்குநேர்

பிரெஞ்ச் ஓபன்  டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஸ்பெயினின்  ரபேல் நடால் மற்றும்  செர்பியாவின் நோவக் ஜோகோவிச்  இன்று  நேருக்குநேர் மோத உள்ளனர். தலைநகர் பாரிஸ் நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவிற்கான இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின்  ரபேல் நடாலுடன் உலகின் முதல் நிலை வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும்  இன்று மோதுகின்றனர். கொரோனாப்பரவலால் ஒத்தி வைக்கப்பட்ட பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.  ரசிகர்கள் … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்ற ஜோகோவிச் தகுதி நீக்கம்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்ற ஜோகோவிச், தகுதி நீக்கம் செய்யப்பட்டார். கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி, தற்பொழுது நியூயோர்க்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்ற நோவக் ஜோகோவிசுவை ஸ்பெயின் வீரரான பாப்லோ கரீனோ பஸ்டா எதிர்கொண்டார். போட்டியில் முதல் செட்டை5-6 என்ற கணக்கில் தனது முதல் செட்டை ஜோகோவிச் இழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர், பந்தை வேகமாக … Read more