என்னடா இது கை சின்னத்துக்கு வந்த சோதனை..!கைச்சின்னத்தை ரத்துசெய்யக் கோரி பாஜக அளித்துள்ள புகார், தேர்தல் ஆணையத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி விசாரணை!!

காங்கிரஸ் கட்சியின் கைச்சின்னத்தை ரத்துசெய்யக் கோரி பாஜக அளித்துள்ள புகார் வரும் 18ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் விசாரணைக்கு வருகிறது. பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வினிகுமார் உபாத்யாய் தேர்தல் ஆணையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னமான கை உடலின் பிரிக்க முடியாத ஒருபாகமென்றும், இதைக் காங்கிரஸ் தவறாகப் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளின்படி வாக்குப்பதிவு நடைபெறும் இடத்துக்கு நூறு மீட்டர் தொலைவுக்குள் சின்னத்தைக் காட்டக் கூடாது என்பது புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. … Read more

காமன்வெல்த் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடிக்கு சிறப்பு கவுரவம்!!

பிரதமர் நரேந்திர மோடி மட்டும் லிமோசன் காரில் பயணிக்கவுள்ளார். லண்டனில் நடைபெறும் காமன்வெல்த் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்கள் சொகுசு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட உள்ள நிலையில்,   52 காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு லண்டனில் வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார். மாநாட்டுக்கு வரும் தலைவர்கள் அனைவரும் பாதுகாப்பு அம்சங்கள் மிகுந்த … Read more

சிறுமி பலாத்கார வழக்கில் ஆஜரான துணிச்சலான பெண் வழக்கறிஞர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்டவர்களின் ஆதரவாக வாதாடுகிறார் பெண் வழக்கறிஞரான தீபிகா சிங் ரஜாவத். ஜம்முவில் 5 வயது மகளுடன் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வழக்கில் தாம் ஆஜராவது தமது மகளுக்காகவும் சேர்த்துத்தான் என்றார். இவ்வழக்கில் இருந்து விலகி இருக்கும்படி தமக்கு மிரட்டல்கள் வருவதாக கூறிய தீபிகா சிங், மாநில வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தம்மை தகாத வார்த்தைகளால் திட்டியதாக மேலும் தெரிவித்தார்.

காமன்வெல்த் பாட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றார் சாய்னா நேவால்..!

இந்தியாவின் சாய்னாநேவால் காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். அவருடன் மோதிய பி.வி. சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன் வெல்த் விளையாட்டில், இந்தியா மிகப்பெரிய பதக்க வேட்டையை நடத்தி வருகிறது. கடைசி நாளான இன்று, பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் பி.வி.சிந்துவும், சாய்னா நேவாலும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சாய்னா நேவால், 21க்கு 18, 23க்கு 21 என்ற நேர்செட் கணக்கில் பி.வி சிந்துவை வீழ்த்தி, … Read more

கார் இருக்கைகள் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து..!

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள , கார் இருக்கைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. சாத்தமை கிராமத்தில் இயங்கும் பார்க் ஆலையில் இருந்து, வெளிநாடுகளுக்கு கார் இருக்கைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆலையில், கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தால், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. பின்னர், ஒரு மணிநேரமாக போராடி, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

முதல் முறையாக இணையும் இரு வெவ்வேறு துருவங்களின் கூட்டணி !

நடிகர் வினீத் சீனிவாசன் மலையாள சினிமாவில் ஒரு வெற்றிகரமான இயக்குனராக மட்டுமல்லாது நடிகராகவும் உருவாகி இருப்பவர் . இதுநாள் வரை தனி ஹீரோவாகவோ, அல்லது இளம் ஹீரோக்களுடன் கூட்டணி சேர்ந்தோ நடித்து வந்தார் வினீத் சீனிவாசன். அவரது படங்களும் மினிமம் கியாரண்டி வசூலை கொடுத்து வருகின்றன.. முதன்முறையாக நடிகர் மம்முட்டியுடன் இணைந்து ‘ஒரு குட்டநாடன் பிளாக்’ என்கிற படத்தில் நடிக்கிறார் வினீத் சீனிவாசன், கேரளாவிலும் லண்டனிலும் நடைபெறும் இந்தப்படத்தின் கதையில் லண்டன் போர்ஷனில் நடிக்கிறாராம் வினீத் சீனிவாசன். ராய்லட்சுமி, … Read more

முன்னணி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தனது டிவிட்டேர் பக்கத்தில் ஆதங்கம் ..!

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் காத்திருக்கின்றனர். இவர் மூன்றாவது முறையாக விஜய்யுடன் கைக்கோர்த்தது படத்தை இயக்கி வருகிறார். தற்போது சினிமாவில் ஸ்ட்ரைக் என்பதால் எந்த ஒரு படத்தின் வேலைகளும் நடக்கவில்லை. இந்த நிலையில் தற்போது இனியாவது மக்கள் நினைத்த படி புதிய ஆண்டு பிறக்க வேண்டும் என்று ஆதங்கத்துடன் வாழ்த்து தெரிவித்துள்ளார் முருகதாஸ்.