கனடா பிரதமர் 'ஜஸ்டின் ட்ருடேவு' இந்தியா வருகை அறிவிப்பு…!!

கனடா பிரதமர் அரசு முறைப்பயணமாக பிப்ரவரி 17ம் தேதி இந்தியா வருகிறார். இது தொடர்பாக இந்தியாவிற்கான கனடா தூதரக செய்தி தொடர்பாளர் கூறியது, “கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடேவு பிப்ரவரி 17-ம் தேதி அரசு முறைப்பயணமாக இந்தியா செல்கிறார். பிப்ரவரி 23-ம் தேதி வரை இந்தியா சுற்று பயணம் மேற்கொள்ளும் கனடா பிரதமர் இந்தியாவில் முக்கிய நகரங்களுக்கு செல்கிறார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரை சந்தித்து பேசுகிறார். கனடா பிரதமருடன் 18 அமைச்சர்களும்  இந்தியா வருகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் தீவிரவாதிகளுக்கும் உதவுகிறது : பாரக் ஒபாமா

டெல்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அவர்கள் பேசியது என்னவென்றால்: தொழில்நுட்பமானது, வளர்ச்சியடைந்து வரும் உலகில் இடைவெளிகளை நிரப்பும் பாலமாக இருக்கிறது. அதேநேரத்தில், தொழில்நுட்பத்தின் திடீர் வளர்ச்சியில் பல்வேறு இணையதளங்கள் மக்களுக்கு தீய செய்திகளைப் தருகின்றன. நவீன தகவல் சாதனங்கள் தீவிரவாதிகளுக்கும் உதவுகின்றன. தீயவர்களும் சமூக விரோத சக்திகளும் நவீன தகவல் சாதன வசதிகளை பயன்படுத்திக் கொள்கின்றன. மக்கள் ஜனநாயகத்தைக் காப்பாற்ற இதைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிடில் தகவல் தொழில்நுட்பமானது, மக்களை … Read more

குஜராத் மத்திய பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் மண்ணை கவ்விய பிஜேபியின் மாணவர் சங்கமான ABVP …!

குஜராத் மாநிலம் வாரணாசியில் உள்ள குஜராத் மத்திய பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல்களில் பாரதீய ஜனதா கட்சியின் மாணவர் சங்கமான ABVP பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. ஏற்கனவே அதன் வசமிருந்த அனைத்து பொறுப்புகளையும் இழந்துவிட்டது. குஜராத் சட்டமன்ற தேர்தல்கள் நெருங்கிவரும் வேளையில் இந்த தோல்விகள் பா.ஜ.க. தலைமைக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. குஜராத் மாநில இளைஞர்கள் பா.ஜ.க.வின் மீது கொண்டுள்ள வெறுப்பின் அடையாளமாக இதனை அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

பத்மாவதி விவகாரத்தில் பிரதமர் மௌனமாக இருப்பது ஏன்..?? பிஜேபி எம்.பி.சத்ருகன் சின்ஹா

“பத்மாவதி திரைப்பட விவகாரத்தில் ஒரு இந்துத்துவ கோஷ்டி அடி.வெட்டு.குத்து.கொலை என்று நாட்டை ரணகளமாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இவ்விஷயத்தில் ஒன்றுமே பேசாமல் மரண அமைதி காப்பதேன்?” -நடிகரும்,பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான சத்ருகன் சின்ஹா பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

முடக்கியவனே கொடுத்து விட்டாண்டி..!

இரட்டை இலையை மீட்டுவிட்டோம் என்று ஒபிஎஸ் குதூகலிக்கிறார்! முடக்கியதே இவர்தானே! இவரைப் போலவே தேர்தல் ஆணையத்திலும் “நியாயவான்கள்” நிறைந்திருக்கிறார்கள்! ஒபிஎஸ் சோடு 12 எம்எல்ஏக்கள் போய்விட்டதால் முடக்கினோம் என்றவர்கள் தினகரனோடு 20 எம்எல்ஏக்களே இருப்பதால் ஒபிஎஸ் உள்ள அணியிடம் கொடுத்து விட்டோம் என்கிறார்கள் ! இவர்களை இயக்குவது யார் என்பது சின்னப் பிள்ளைகளுக்கும் தெிரிகிறது. “முடக்கியவனே கொடுத்து விட்டாண்டி” என்று புதுப் பாட்டு பாடுகிறார்கள். –Ramalingam Kathiresan   இரட்டை இலையை ஜெயிச்சுட்டாங்களாமாம்.. அந்த இலையில் உயிரே இல்லை பாவிகளே.. –Bala G

“தூய்மை இந்தியா” திட்டத்தின் விளம்பர செலவு மட்டும் ரூ.530 கோடியாம்…?? ஏன்..?

பிரதமர் நரேந்திர மோடியின் “தூய்மை இந்தியா” திட்டம் என்பது தொலைக்காட்சிகளிலும் செய்திப் பத்திரிக்கைகளிலும் அரசு சார்பில் கொடுக்கப்படும் விளம்பரங்களில் மட்டுமே உள்ளது. அப்படிப்பட்ட விளம்பரங்களுக்காக அரசு இதுவரை 530 கோடி ருபாய் செலவழித்துள்ளது. மற்றபடி அடிப்படை முன்னேற்றம் ஒன்றுமே அந்த திட்டத்தால் மக்களுக்கு கிடைத்திடவில்லை என்பது எதிர்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் குற்றசாட்டாக உள்ளது.  

கேன்சர் மற்றும் விபத்து ஏற்படும் காரணத்தை கண்டறிந்த அஸ்ஸாம் சுகாதார அமைச்சர்…!

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிஜேபி மற்றும் அதன் தலைவர்களும் தொடர்ந்து சில பிற்போக்குத்தனமான விசையங்களையும்,பொய்களையும் கூறிவந்தனர்.அவர்களுடன் அப்பட்டியலில் புதிதாக அஸ்ஸாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் இணைந்துள்ளார்.   மனிதர்கள் இந்த ஜென்மத்திலோ அல்லது முன்ஜென்மத்திலோ செய்த பாவத்தின் தண்டனைதான் கேன்சர் போன்ற வியாதிகள் வருவதற்கும் விபத்து மரணங்களுக்கும் காரணம் -என அவர் பேசியுள்ளார்.இது தற்போது இந்தியா முழுவதும் விவாத பொருளாக மாறியிருக்கிறது.ஆனால் தற்போது அஸ்ஸாமில்  ஆட்சியில் இருப்பதும் பிஜேபி கட்சி என்பது குறுப்பிடத்தக்கது.

புதிய 2000 ருபாய் நோட்டுக்களில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்திருப்பது பொய்யா…??

கடந்த டிசம்பர் மாதம் பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டு புதிய 2000 நோட்டுகள் கொண்டுவரப்பட்டது.மேலும் அரசின் இந்த நடவடிக்கையால் கருப்பு பணம் மற்றும் கள்ள பணம் ஒழியும் என பாரத பிரதமர் உறுதியளித்தார்.அந்த புதிய 2000 ருபாய் நோட்டுக்களில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்திருப்பதாக அதனை வெளியிடும்போது பா.ஜ.க. வினர் கூறினார்கள். கள்ளப் பண புழக்கம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றெல்லாம் கதை அளந்தார்கள் ஆனால் முன்பு எப்போதையும் விட இப்போதுதான் கள்ள … Read more

குளிர்கால கூட்டத்தொடர் தாமதத்திற்கு காரணம் சொல்லும் பாஜக

வருடந்தோறும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 15ஆம் தேதிக்கு பின்னர் தொடங்க வேண்டும். ஆனால் இந்த வருடத்துக்கான குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க எந்த நடவடிக்கையும் ஆளும் பாஜக அரசு எடுத்ததாக தெரியவில்லை.     ஏனென்றால் இந்த வருடம் போர் விமாங்கள் வாங்கியதில் ஊழல், ஜிஎஸ்டி பிரச்சனை, பணமதிப்பிழப்பு போன்ற பிரச்சனைகள் பற்றி எதிர்கட்சிகள் வாதம் செயாகூடும் என்பதாலோ என்னவோ குளிர்கால கூட்டத்தொடர் தொடங்காமல் இருக்கிறது என தெரிகிறது. ஆனால் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்காமல் இருப்பதற்கு … Read more

பிரதமர் நரேந்திர மோடி இருக்கும் மேடையில் நான் இருக்கமாட்டேன்-இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி

கடந்த மூன்றாண்டுகளில் நமது நாட்டின் பிரதமர் மோடியாலும் அவரது ஆட்சியாளர்களாலும் நமது நாட்டின் ஏழை ,எளிய மக்கள் அனுபவித்த துன்பம் கொஞ்சநஞ்சமல்ல. ஆகவே பிரதமர் நரேந்திர மோடி இருக்கும் மேடையில் நான் இருக்கமாட்டேன் – என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. ஒரு தனியார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.