மிசோரமில் ராணுவ விமானம் விழுந்து விபத்து: 6 பேர் காயம்!

Myanmar military

மிசோரமில் உள்ள லெங்புய் விமான நிலையத்தில் மியான்மர் ராணுவ விமானம் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 14 பேரில் குறைந்தது 6 பேர் காயமடைந்தனர். தற்பொழுது காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக லெங்புய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிசோரம் காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 10.19 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. தரையிறங்குவதில் பல்வேறு சவால்கள்காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தகவலின்படி, மியான்மர் இராணுவத்திற்கும் சிவிலியன் இராணுவத்திற்கும் இடையிலான … Read more

மிசோரம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்! யார் முன்னிலை? தற்போதைய நிலவரம்!

Mizoram Election Result

மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. நேற்று சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் பாஜக மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது. இந்த 5 மாநிலங்களில் 4 மாநிலங்களில் முடிவுகள் நேற்று … Read more

மிசோராமில் ஆட்சி அமைக்கப்போவது யார்? இன்று தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

mizoram elections

நாட்டில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது. இதில் மிசோரம் மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை இன்றைக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதனால், இந்த 4 மாநில சட்டமன்ற தேர்தல் பதிவான வாக்குகள் மட்டுமே நேற்று நடைபெறாது. அதில், நடைபெற்ற முடிந்த சட்டமன்ற தேர்தல்களில் பாஜக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அந்தவகையில்,  ஏற்கெனவே ஆட்சியில் இருந்த மத்திய பிரதேசத்தை தக்க வைத்துக்கொண்ட … Read more

#BREAKING: மிசோரம் வாக்கு எண்ணிக்கை தள்ளிவைப்பு..!

40 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட மிசோரம் மாநிலத்தில் கடந்த நவம்பர் 7-ம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது.  மிசோரம் தேர்தல் முடிவு தேதியை மாற்றுமாறு பலர் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கூறியிருந்தனர். இதைத்தொடர்ந்து, மிசோரம் சட்டசபை தேர்தல் முடிவு தேதி மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில்,  டிசம்பர் 3-ஆம் தேதிக்குப் பதிலாக டிசம்பர் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிசோரம் மக்களுக்கு விசேஷமான தினம் என்பதால் தேர்தல் முடிவு … Read more

மிசோரமில் இந்த வாக்குச்சாவடிக்கு மீண்டும் வாக்குப்பதிவு..!

மிசோரமின் ஐஸ்வால் தெற்கு-III தொகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி நாளை முல்லுங்து வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். மிசோரமில் நேற்று முன்தினம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. மொத்தமுள்ள 8.57 லட்சம் வாக்காளர்களில் 80 சதவீதம் பேர் வாக்களித்தனர். 1,276 … Read more

Assembly Election 2023: சத்தீஸ்கர், மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு..!

Chhattisgarh Assembly Election

சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய இரண்டு மாநிலங்களில், இன்று சட்டமன்றத் தேர்தல் தொடங்கி, வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் முதல் கட்டமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் 90 தொகுதிகளில், 20 தொகுதிகளில் மட்டுமே இன்று தேர்தல் தொடங்கி, முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதே போல மிசோரத்திலும் உள்ள 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு  நடைபெற்றது. இந்த தேர்தலுக்காக சத்தீஸ்கரில் 20 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தமாக 5,304 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 1276 … Read more

வாக்களிக்காமல் திரும்பிய மிசோரம் முதல்வர்..! நடந்தது என்ன…?

Zoramthanga

மிசோரம் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மிசோரத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. 40 சட்டப்பேரவை தொகுதிகளில் 1276 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 8.52 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். மிசோரமில் 3 ஆயிரம் போலீசாருடன் மத்திய ஆயுதப்படையை சேர்ந்த 450 குழுக்களும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், மிசோரமில் வாக்குப்பதிவு மையத்திற்கு … Read more

#Breaking : மிசோரம் மற்றும் சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு தொடங்கியது..!

சத்தீஸ்கர் மற்றும் மிசோரத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.  சத்தீஸ்கரில் 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது காலை 8 மணிக்கு மேலும் 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சதீஷ்கரில் இன்று முதல் கட்டமாக 600 வாக்குச்சாவடிகளில் சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்க  உள்ளன. பாதுகாப்பு சிக்கல்கள் நிறைந்த 10 தொகுதிகளில் பிற்பகல் 3 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளது. சத்தீஸ்கரில் மீதமுள்ள 70 தொகுதிகளில் நவம்பர் 17ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது. நக்சலைட்டுகள் … Read more

#BREAKING: மிசோரமில் நிலநடுக்கம்..!

மிசோரமில் சம்பாய் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது . மிசோரம் மாநிலம் உள்ள சம்பாய் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக எந்த வகையான உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்படவில்லை. எனினும், நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியே ஓடத் தொடங்கினர். சிறிது நேரம் கழித்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். … Read more

38 மனைவிகள் மற்றும் 89 குழந்தைகள் கொண்ட ‘உலகின் மிகப்பெரிய குடும்பத்தின்’ தலைவர் மரணம்…!

உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவராக கருதப்படும்,மிசோரத்தை சேர்ந்த ‘சியோனா சானா’, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக இன்று காலமானார். உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவராக கருதப்படும் மிசோரத்தை சேர்ந்த சியோனா சனாவுக்கு 38 மனைவிகளும் 89 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில்,சியோனா சானா,நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக மாநில தலைநகர் ஐஸ்வாலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால்,சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.சியோனா சனாவுக்கு 76 வயது ஆகிறது. அவரது மறைவிற்கு … Read more