மிசோரம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்! யார் முன்னிலை? தற்போதைய நிலவரம்!

Mizoram Election Result

மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. நேற்று சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் பாஜக மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது. இந்த 5 மாநிலங்களில் 4 மாநிலங்களில் முடிவுகள் நேற்று … Read more

மிசோராமில் ஆட்சி அமைக்கப்போவது யார்? இன்று தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

mizoram elections

நாட்டில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது. இதில் மிசோரம் மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை இன்றைக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதனால், இந்த 4 மாநில சட்டமன்ற தேர்தல் பதிவான வாக்குகள் மட்டுமே நேற்று நடைபெறாது. அதில், நடைபெற்ற முடிந்த சட்டமன்ற தேர்தல்களில் பாஜக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அந்தவகையில்,  ஏற்கெனவே ஆட்சியில் இருந்த மத்திய பிரதேசத்தை தக்க வைத்துக்கொண்ட … Read more

4 மாநில தேர்தல்- வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின்..!

சமீபத்தில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் முடிவுகள் இன்றும், மிசோரமில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. ஐந்து மாநிலங்களின் முடிவுகள் ஒரே நாளில் இன்று வெளியிடப்பட இருந்த நிலையில், மிசோரம் தேர்தல் முடிவுகளை மட்டும் டிசம்பர் 4-ம் தேதி (நாளை) அறிவிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.  இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு … Read more

மத்தியப்பிரதேசத்தில் பாஜக 100 தொகுதிகள் வித்தியாசத்தில் முன்னிலை ..!

மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் 17-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த  மாநிலத்தில்  உள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் … Read more

4 மாநில வாக்கு எண்ணிக்கை.. 2 மாநிலங்களில் முன்னிலை வகிக்கும் பாஜக ..!

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நான்கு மாநிலங்களில் இரண்டில் பாஜக முன்னிலையிலும், இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலையிலும் உள்ளது. அதன்படி 199 இடங்களைக் கொண்ட ராஜஸ்தானில் சமீபத்திய புள்ளிவிவரங்கள் படி பாரதிய ஜனதா 71 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதே சமயம் ஆளும் கட்சியான காங்கிரஸ் 46 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 230 இடங்களைக் கொண்ட மத்தியப்பிரதேசத்தில்  பாஜக – 57 இடங்களில் முன்னிலையிலும் … Read more

நாகாலாந்து இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!

நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் உள்ள தபி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 7-ஆம் தேதி அன்று முடிவடைந்தது. 23 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. சுமார் 96 சதவீத வாக்குகள் பதிவானது. 15,256 வாக்காளர்களில் 96.25 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதில் 7,788 ஆண்களும் 7,468 பெண்களும் அடங்குவர். இந்த தேர்தலுக்கான முடிவுகள் இன்று அதாவது டிசம்பர் 3 ஆம் … Read more

ஆட்சி அமைப்பது யார்.? 4 மாநில வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!

சமீபத்தில் 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் முடிவுகள் இன்றும், மிசோரமில் வாக்கு எண்ணிக்கை நாளை  நடைபெறுகிறது. ஐந்து மாநிலங்களின் முடிவுகள் ஒரே நாளில் இன்று வெளியிடப்பட இருந்த நிலையில், பின்னர் தேர்தல் ஆணையம் தனது முடிவை மாற்றி, மிசோரம் தேர்தல் முடிவுகளை டிசம்பர் 4ம் தேதி (நாளை) அறிவிக்க முடிவு செய்தது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் … Read more

நாளை காலை 8 மணிக்கு 4 மாநில வாக்கு எண்ணும் பணி தொடக்கம்..!

நடந்து முடிந்த மாநில சட்டசபை தேர்தல்களின் முடிவுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை வெளியாகவுள்ளது. மிசோரமில் நவம்பர் 7ஆம் தேதியும், சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 25ஆம் தேதியும், தெலுங்கானாவில்  நவம்பர் 30 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தல்களுக்கான கருத்துக் கணிப்பில்  ராஜஸ்தானில் மட்டுமே பாஜக வெற்றி பெறும் என்றும்  அதேசமயம் சத்தீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும்  மத்திய … Read more

#BREAKING: மிசோரம் வாக்கு எண்ணிக்கை தள்ளிவைப்பு..!

40 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட மிசோரம் மாநிலத்தில் கடந்த நவம்பர் 7-ம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது.  மிசோரம் தேர்தல் முடிவு தேதியை மாற்றுமாறு பலர் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கூறியிருந்தனர். இதைத்தொடர்ந்து, மிசோரம் சட்டசபை தேர்தல் முடிவு தேதி மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில்,  டிசம்பர் 3-ஆம் தேதிக்குப் பதிலாக டிசம்பர் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிசோரம் மக்களுக்கு விசேஷமான தினம் என்பதால் தேர்தல் முடிவு … Read more

வெற்றி கனியை பறிக்க போவது யார்..? இமாச்சல், குஜராத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை..!

இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மாற்று 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. குஜராத்தில் இம்முறையும் பாஜகத்தான் ஆட்சியை கைப்பற்றும் என்றும் 2வது இடத்தை காங்கிரஸும், 3வது இடத்தை ஆம் ஆத்மியும் பிடிக்கும் என … Read more