ரஜினிக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் வேலுமணி.!

“கறுப்பர் கூட்டம்” என்ற யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட 500 வீடீயோக்களைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. “கறுப்பர் கூட்டம்” என்ற யூடியூப் சேனலுக்கு எதிர்ப்பாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று நடிகர் ரஜினிகாந்த் தனது “டுவிட்டர்” பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, … Read more

சரித்திர சாதனை படைத்த முதல்வர் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.!

கோவை பேரூர் செட்டிபாளையத்தில் வரும் 22ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 72வது பிறந்தநாள் கொண்டாப்பட உள்ள நிலையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதற்கான முகுர்த்தகால் நாட்டு விழாவில் நேற்று கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், 22ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் ஜெயலலிதா 72வது பிறந்தநாளை முன்னிட்டு 72 கல்யாணம் 72 சீர்வரிசையுடன் நடைபெறுகிறது என தெரிவித்தார். மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மூலம் தமிழகத்தை முதன்மை மாநிலமாக முதல்வர் கொண்டு வந்துள்ளதோடு 11 புதிய மருத்துவக்கல்லூரி பெற்று தந்து … Read more

ஸ்டாலின் குறுக்கு வழியில் முதல்வராக நினைக்கிறார் – அமைச்சர் எஸ்.பி வேலுமணி.!

கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 1000 பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்துகொண்டு புடவை, வளையல் உள்ளிட்ட பல்வேறு சீர்களை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் 50 ஆண்டு கால வளர்ச்சியை 5 ஆண்டுகளில் அதிமுக அரசு தந்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும்  திமுக ஆட்சியில் இருந்தபோது ஸ்டாலின் எதுவும் செய்யாமல் தற்போது குறுக்கு வழியில் முதல்வராக நினைக்கிறார் என குற்றம்ச்சாட்டினார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான புகார் ! உயர்நீதிமன்றம் உத்தரவு

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான புகாரை டிசம்பர் 18-ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தது.அதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே டெண்டர்களை ஒதுக்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் ,உள்ளாட்சித்துறை டெண்டர் தொடர்பான வழக்கில் பதிலளிக்க அமைச்சர் வேலுமணிக்கு இறுதி கெடு விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.நவம்பர் 1-ஆம் … Read more

கனமழை காரணமாக 17 முகாம்களில் 397 குடும்பங்கள் தஞ்சம்! அமைச்சர் வேலுமணி தகவல்!

தென்மேற்கு பருவக்காற்று வீசுவதன் காரணமாக தமிழகத்தில் கோயம்பத்தூர், நீலகிரி ஆகிய மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் பொதுமக்களின் வீடுகள் சேதமடைந்து மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இது குறித்து அமைச்சர் வேலுமணி பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில் , ‘ கனமழையால் மக்களின் இயல்பு வாழ்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 72 வீடுகள் ஓரளவு சேதாரமும், 27 வீடுகள் முழுமையக மழையால் சேதமும் அடைந்துள்ளது. மொத்தமாக 99 வீடுகள் சேதமடைந்துள்ளது.’ எனவும் மேலும், ‘ … Read more

தமிழகத்தில் மொத்தம் 43.61 லட்சம் தெரு விளக்குகள் உள்ளது-அமைச்சர் வேலுமணி

சட்டப் பேரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  தமிழகத்தில் மொத்தம் 43.61 லட்சம் தெரு விளக்குகள் உள்ளது.இவற்றில் தற்போது வரை 23.63 லட்சம் விளக்குகள், எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், ரூ 446 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது, மீதமுள்ள விளக்குகளையும், எல்இடி விளக்குகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பேரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி பேசினார்.

தினகரன் தானாகவே முன்வந்து ஒதுங்கவேண்டும்…!

தினகரன் ஒதுங்கவேண்டும் தினகரன் அணியிலிருக்கும் தொண்டர்கள் எல்லாம் எங்களிடம் வந்து இணையவேண்டும் ; ஜானகி போன்று தினகரன் பெருந்தன்மையாக ஒதுங்கிக்கொள்ளவேண்டும் என கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி