மெக்சிகோவை புரட்டிப்போட்ட கிரேஸ் புயல்: 8 பேர் பலி..!

மெக்சிகோ நாட்டை கிரேஸ் புயல் பலமாக தாக்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மெக்சிகோவில் கிரேஸ் என்ற சூறாவளி புயல் தாக்கியுள்ளது. இந்த புயல் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் அடித்துள்ளது. புயலோடு சேர்ந்து கனமழையும் வெளுத்து வாங்கியுள்ளது. இந்த மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் புகுந்து தண்ணீரில் மிதந்துள்ளது. இதனிடையே புயல் காற்றால் பல்வேறு வீடுகளின் மேற்கூரை அடித்து செல்லப்பட்டுள்ளது. பல்வேறு வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இந்த புயலில் அந்நாட்டில் உள்ள … Read more

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. மெக்சிகோவில் நேற்று இரவு 9.19 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அந்நாட்டின் பவிஸ்பே என்ற நகரின் மேற்கு-தென்மேற்கில் இருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் பூமிக்கு அடியில் மையம் கொண்டு இருந்துள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திமிங்கலத்திடமிருந்து நூலிழையில் தப்பித்த பயணிகள்..!

திமிங்கலத்திடமிருந்து நூலிழையில் தப்பித்த பயணிகளை புகைப்படம் எடுத்த அடுத்த படகில் வந்த போட்டோகிராபர்.  கடந்த ஆண்டில் ஊரடங்கிற்கு முன் அமெரிக்காவின் மெக்சிகோ பகுதியில் இருக்கும்  பஜா கலிஃபோர்னியா பெனின்சுலா என்ற கடல்பரப்பில் சிலர் கேமெராவுடன் படகில் சென்றுள்ளார். அப்போது ஒரு திமிங்கலம் ஒன்று கடலின் பரப்பில் மேலெழுந்து பின்னர் மீண்டும் கீழே சென்றுள்ளது. அப்போது அந்த திமிங்கலத்தின் முன்னால் சென்ற படகில் உள்ளவர்கள் வேறு பக்கத்தில் கேமெராவை வைத்து பார்த்துக்கொண்டு இருகின்றனர். பின்னால் வந்த படகில் இருந்த … Read more

மெக்சிகோவில் திடீரென ஏற்பட்ட 50 அடி ஆழம் கொண்ட பள்ளம்…! பீதியில் உறைந்த மக்கள்…!

மெக்சிகோ நாட்டில், சாண்டா மரியா என்ற இடத்தில் உள்ள வயலில் திடீரென பூமி உள்வாங்கி, ஒரு பெரிய பள்ளம் ஒன்று தோன்றியுள்ளது. இந்த பள்ளம் சுமார் 200 அடி அகலமும், 50 அடி ஆழம் கொண்டதாக காணப்பட்டது. மெக்சிகோ நாட்டில், சாண்டா மரியா என்ற இடத்தில் உள்ள வயலில் திடீரென பூமி உள்வாங்கியது. இதனையடுத்து அங்கு ஒரு பெரிய பள்ளம் ஒன்று தோன்றியுள்ளது. இந்த பள்ளம் சுமார் 200 அடி அகலமும், 50 அடி ஆழம் கொண்டதாக … Read more

மெக்சிகோவில் கோர விபத்து!மேம்பாலம் இடிந்ததால் கீழே விழுந்து நொறுங்கிய மெட்ரோ ரயில்!23 பேர் பலி;70க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

மெக்சிகோவில் மேம்பாலம் இடிந்ததால் கீழே விழுந்து மெட்ரோ ரயில் நொறுங்கியது.இதில் பயணித்த 23 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும்,70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மெக்சிகோவின்,ஒலிவோஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் 12 வது  மெட்ரோ பாதையில் உள்ள மேம்பாலம் நேற்றிரவு திடீரென்று இடிந்து விழுந்தது.அப்போது அப்பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த மெட்ரோ ரயிலானது மேம்பாலதுடன் சேர்ந்து கீழே சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார்கள் மீது விழுந்து நொறுங்கியது. இதனைக் கேள்விப்பட்ட மீட்புப்படையினர் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு அருகில் … Read more

கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் ஆடைகளை கரடி பொம்மைகளாக மாற்றும் பெண்…!

மெக்ஸிகோவில் உள்ள பேஷன் டிசைனர் ஒருவர்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் ஆடைகளில் கரடி பொம்மைகளை தயாரித்து வருகிறார். கொரோனா தொற்றானது உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால்,கடந்த வாரத்தில் மெக்சிகோவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23 லட்சத்தைக் கடந்துள்ளது.மேலும்,கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 2.12 லட்சத்தை தாண்டியுள்ளது. மெக்ஸிகன் மருத்துவமனைகள் பொதுவாக,அதிக அளவில் நிரம்பிய மருத்துவமனை வார்டுகள்,தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் தொற்று பரவுதல் போன்ற பயத்தினால் இறக்கும் நபரை … Read more

2020-ன் சிறந்த பரிசு.. மெக்ஸிகோவின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை போட்ட செவிலியர் பேச்சு!

2020 ஆம் ஆண்டில் இதுவே எனக்கு கிடைத்த சிறந்த பரிசு என மெக்ஸிகோவில் கொரோனா தடுப்பு மருந்தை செலுத்திய செவிலியர் தெரிவித்துள்ளார். சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்பொழுது கொரோனா பரவல் குறைய தொடங்கியது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, ஃபைசர் தடுப்பூசிக்கு அவசர கால ஒப்புதலுக்கு … Read more

ஃபைசர் கொரோனா தடுப்பூசி! அவசர கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்த மெக்சிகோ!

ஃபைசர் மற்றும் பயோடெக் தடுப்பூசிக்கு கோஃபெரிஸ் அவசர அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று துணை சுகாதார மந்திரி ஹ்யூகோ லோபஸ் – கேடெல் தெரிவித்துள்ளார்.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைராசை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அமெரிக்காயாவை சேர்ந்த பைசர் நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த பயோடெக் நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய நிலையில், இந்த தடுப்பூசி வெற்றியையும் கண்டுள்ளது. இந்நிலையில், ஃபைசர் … Read more

அடுத்த ஆண்டு இறுதிக்குள் 116 மில்லியன் கொரோனா தடுப்பூசி போட மெக்சிகோ திட்டம்.!

அடுத்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா வைரஸுக்கு எதிராக 116 மில்லியன் தடுப்பூசி போடும் திட்டத்தை மெக்சிகோ அறிவித்துள்ளது. மெக்ஸிகோ மருந்து நிறுவனங்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்துடன் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கொரோனாவுக்கு எதிராக 116 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு 90% தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது என்று அந்நாட்டு அரசு நேற்று தெரிவித்துள்ளது. வெளியுறவு மந்திரி மார்செலோ எப்ரார்ட் தலைமையிலான காணொளி காட்சியில், டிசம்பர் முதல் உருவாக்கப்படும் நான்கு வகையான தடுப்பூசிகளில் இரண்டை … Read more

மெக்சிகோ போதை பொருள் கும்பலால் பெண்கள் உள்பட 12 பேர் கழுத்து அறுத்து கொலை!

மெக்சிகோவில் போதை பொருள் கும்பலால் பெண்கள் உள்பட 12 பேர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். மெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் அதிகமாக காணப்படும். எனவே அங்கு சாதாரணமாக எழக்கூடிய சண்டையில் கூட பலர் கொல்லப்படுவது வழக்கம். இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் சான் லூயிஸ் போடோசி மாகாணத்தில் வில்லா டி ரமோஷ் என்ற நகரில் உள்ள பிரதான சாலையில் இரண்டு வேன்கள் நின்றுகொண்டிருந்துள்ளன. இந்நிலையில் இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த வேதனைகளை … Read more